சாப்ட்வேர் மாறியதால் மனைவியை இழந்த வாலிபர்..!

சாப்ட்வேர் மாறியதால் மனைவியை இழந்த வாலிபர்..!

வீட்டில் ஹாட்சுனே மிக்குவுடன் 

சாப்ட்வேருக்கும், சம்சாரத்துக்கும் என்ன சம்பந்தம்?

சாப்ட்வேர் மாறியதால் மனைவியை இழந்து தவித்து வருகிறார் ஜப்பானிய இளைஞர் அகிஹிகோ. (Akihiko Kondo).

ஜப்பானில் கேட்பாக்ஸ் எனும் கம்பனி ஹாட்சுனே மிக்கு (Hatsune Miku) எனும் 16 வயது பெண் கதாபத்திரத்தை உருவாக்கியது. அதை விர்ச்சுவல் 3டி ஹோலோகிராம் ஆக மாற்றி, சாப்ட்வேர் மூலம் உரு கொடுத்தது.

ஹாட்சுனே மிக்குவை மனிதர்கள் போல புரகிராம் செய்தார்கள். அதனால் அழ, சிரிக்க, பேச என பல விசயங்களை செய்ய முடியும். "திட்டினால் அழ வேண்டும்", "காலையில் குட்மார்னிங் சொல்ல வேண்டும்" இப்படி சில கட்டளைகளை அவரால் செய்ய முடியும். பாடு என்றால் பாடுவார், ஆடு என்றால் ஆடுவார்.

ஹாட்சுனே மிக்கு ஹோலோகிராம் வடிவில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். இசை நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் திரண்டார்கள். அவருக்கு ரசிகர் பட்டாளம் உருவானது. அந்த நிகழ்ச்சிகளை பார்த்து ஹாட்சுனே மிக்கு மேல் காதல் வசப்பட்டார் அகிஹிகோ எனும் இளைஞர். ஹாட்சுனே மிக்குவின் ஆளுயர பொம்மைகள் கடைகளில் விற்றன. அவற்றை வாங்கினார். ஹாட்சுனோ மிக்குவிடம் பேச சில ஆப்கள் இருந்தன. அவற்றை தரவிறக்கி பேசினார். பத்து ஆண்டுகள் இப்படி ஹாட்சுனே மிக்குவை காதலித்து வந்தார்.

திருமணத்தின்போது

ஒரு நாள் கம்பனியை அணுகி ஹாட்சுனே மிக்குவை தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி பெண் கேட்டார். அவர்கள் குழம்ப, இவர் தன் காதலை எடுத்து சொல்ல "சரி, கல்யாணம் செய்யற மாதிரி புரோக்ராமை மாற்றி கொடுக்கிறோம்" என சொல்லி அவரை இவருக்கு கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள்.

விளம்பரத்துக்கு விளம்பரம், கல்யாணம் ஆன மாதிரி காட்டினால் இசை நிகழ்ச்சிகளிலும் ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கும் என கணக்குபோட்டு கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள்.

இந்த திருமணம் நடந்தவுடன் ஜப்பானில் அது நல்ல வைரல் ஆன செய்தியாக இருந்தது. தம்பதியினர் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். அதாவது விர்ச்சுவல் மனைவியுடன் பேசி, பழகி ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார் அகிஹிகோ. மனைவியை தொட முடியாது, அவர் நிஜ உருவில் இல்லை. 3டி வடிவ ஆவி உருவில் தான் இருப்பார்.

இந்த சூழலில் நாலு வருடங்கள் கழித்து திடீரென ஹாட்சுனே மிக்கு மாயமாக மறைந்தார். பதறி அடித்துக்கொண்டு கம்பனியை தொடர்பு கொள்ள அவர்கள் "அந்த பழைய சாப்ட்வேருக்கு டெக்னிக்கல் சப்போர்ட் இல்லாமல் போனதால் ஹாட்சுனே மிக்குவை மீண்டும் கொண்டுவர முடியவில்லை. புதிய கேரக்டர் ஒன்றை உருவாக்குகிறோம். அதை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்" என சொல்ல "என்னது? இன்னொரு பெண்ணா? வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா ?" அய்யகோ என அழுது புலம்பி இனி ஹட்சுனே மிக்கு நினைவுடனேயே வாழ்வது என முடிவு செய்துவிட்டார்

கண்கள் இரண்டும் என்று

உன்னைக் கண்டு பேசுமோ?

காலம் இனி மேல் நம்மை

ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ?

இவர் மட்டுமில்லை. இப்படி கார்ட்டூன், விர்ச்சுவல் கதாபாத்திரங்களை திருமணம் செய்துகொள்பவர்கள் எண்ணிக்கை உலகம் முழுக்க நிறைய இருக்காம். இவர்களுக்கு Fictosexuals என பெயர்.

அவர்களை கேட்டால் "மனிதர்களை மணப்பதை விட விர்ச்சுவல் கேரக்டர்களை கல்யாணம் செய்தால் எந்த சிக்கலும் இல்லை. அவர்கள் நம் மேல் கோபப்பட மாட்டார்கள், எரிந்து விழமாட்டர்கள், நகை, பணம் கேட்க மாட்டர்கள். எப்பவும் தூய அன்பும், காதலும் இருக்கும் உறவு இது"

மனிதர் உணர்ந்துகொள்ள

இது மனிதகாதல் அல்ல, அல்ல

அதையும் தாண்டி புனிதமானது" என்கிறார்கள்.

ஒத்துக்கறோம்..நீங்க குணா கமலே தான்.

Tags

Next Story