எதிர்காலத்தில் தென்னிந்தியாவில் வெப்பமே இருக்காது..!
ஆய்வின் கோப்பு படம்.
எதிர்காலத்தில் தென்னிந்தியா குளிரில் உறையும் என்பது உண்மை தான்! எதிர் காலத்தில் இமயமலை போன்ற பனி மூடிய சிகரங்கள் தென்னிந்தியாவில் உருவாகவிருக்கின்றன. ஆபிரிக்க கண்டமானது ஆபிரிக்கா மற்றும் சோமாலியன் தட்டுகளால் ஆனது. அதில் சோமாலியன் தட்டு மெதுமெதுவாக நகர்ந்து வந்து இந்தியாவின் குஜராத், கோவா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மீது மோத உள்ளது.
அந்த புவியியல் நிகழ்வு நடக்கும் போது, இமயமலை போன்று பனி மலைகள் உருவாகும். அதுமட்டுமில்லாமல், சென்னையின் வெப்பம் கூட மைனஸ் 5 டிகிரியாக குறைந்து விடுமாம். அதனால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் வெப்பமே இருக்காதாம்.
கிழக்கு-ஆப்பிரிக்க நாடான சோமாலியாவும், இந்தியப் பெருங்கடலில் உள்ள மடகாஸ்கரும் இந்தியாவுடன் மோதி, பனி மலைகள் உருவாகும் என ஒரு ஆய்வு கூறுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி சோமாலியா தட்டு ஆண்டுக்கு 7 மில்லிமீட்டர் விகிதம் இந்தியாவை நோக்கி நகர்ந்து வருகிறது.
ஆராய்ச்சியில் பணியாற்றிய நெதர்லாந்தில் உள்ள உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர்களின் கூற்றுப்படி, இந்த மோதலின் விளைவாக இமயமலையை விட மிகப்பெரிய மலைத்தொடராக சோமாலயா மலைகள் தென்னிந்தியாவில் உருவாகும்.
புவியியலாளர்களின் கூற்றுப்படி, டெக்டோனிக் தட்டுகள் எல்லா நேரத்திலும் நகர்ந்து மோதுகின்றன - ஒரு வருடத்தில் இரண்டு முதல் மூன்று அங்குலங்கள். டெக்டோனிக் தகடுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டு துணைக் கண்டங்கள் உருவாகும்.
ஒரு டெக்டோனிக் தகடு மற்ற டெக்டோனிக் தட்டுக்கு அடியில் செல்லும் போது, செயல்முறை தட்டு சப்டக்ஷன் என்று அழைக்கப்படுகிறது. அடிபடுதலின் போது, மோதலில் இருந்து தப்பிக்கக் கடினமில்லாத அடுக்குகள், அதை மற்ற தட்டுக்கு அடியில் கொண்டு சென்று, மலைகளை உருவாக்குகின்றன. அதன்படி தென்னிந்தியாவில் இமயமலை போன்ற வலுவான பனி மலைகள் உருவாகுமாம்.
இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியவை இமயமலையில் உள்ள காஷ்மீர், இமாச்சல் போன்று குளிர் பிரதேசங்களாக மாறி விடுமாம்.
எதிர்கால பனி மலைகளை' பார்க்க நாம் யாரும் உயிருடன் இருக்க மாட்டோம், ஏனென்றால் இது நடக்க 200 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu