'யூரின் பீர்' குடிக்கிறீங்களா? அட ஆமாங்க..சிங்கப்பூர் நிறுவனம் யூரின்ல பீர் தயாரிக்குது..!

யூரின் பீர் குடிக்கிறீங்களா? அட ஆமாங்க..சிங்கப்பூர் நிறுவனம் யூரின்ல பீர் தயாரிக்குது..!
X

'Newbrew' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள பீர்.

சிறுநீர் மற்றும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து எடுக்கப்படும் நீரில் சிங்கப்பூர் நிறுவனம் மதுபான வகைகளை தயார் செய்கிறது.

யூரின்ல பீர் தயாரிக்கிறாங்கன்னு சொன்னதுமே நீங்க கொமட்றது தெரியுதுங்க..ஆனாலும் சிறுநீர் மற்றும் கழிவுநீரில் இருந்து சுத்திகரிப்பு செய்து எடுக்கப்பட்ட நீரில் தயாரிக்கப்பட்ட இந்த பீர்,சுற்றுப்புற பாதிப்பு இல்லாத 'பசுமை பீர்'னு பேர் வாங்கி இருக்கு.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சிறுநீர் மற்றும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து 'க்ரீனஸ்ட் பீர்' என்ற புதுவகையான மதுபானத்தை அறிமுகப்படுத்தி இருக்கு. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் இந்த நிறுவனம் அதிக அக்கறை காட்டி வருகிறது. சிங்கப்பூர், மறுசுழற்சி முறையில் பல பொருட்களை தயாரிக்க ஊக்குவித்து வருகிறது.

சிறுநீர் மற்றும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து தயாரிக்கப்பட்ட பீர்

அந்தவகையில் குடிப்பதற்கு லாயக்கில்லாத சிறுநீர் மற்றும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து 'நியூ வாட்டர் (Newater)' என்ற பெயரில் குடிப்பதற்கு ஏதுவான குடி தண்ணீராக மாற்றி வருகிறது சிங்கப்பூர். இந்த 'நியூ வாட்டர்' தயாரிப்பதற்கு சர்வதேச தரம் கடைபிடிக்கப்படுவதுடன் பாதுகாப்பான குடிநீர் என்ற பெயரும் பெற்றுள்ளது. மேலும் 'பீர் (beer)' போன்ற மதுபான வகைகள் தயாரிப்பதற்கும் ஏதுவானது இந்த நீர் என்று சொல்கிறார்கள்.

இவ்வாறு மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மதுபானத்திற்கு 'Newbrew' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வகை மதுபானம் சிங்கப்பூரைச் சேர்ந்த 'எஸ்போர்(S'pore)' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இது தயாரிக்கப்படுவதால் இந்த பீர் 'க்ரினஸ்ட் பீர்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.இந்நிறுவனம்.

இந்த 'நியூ வாட்டர்' -ல் உயர்தரம் கொண்ட பல பொருட்களைச் சேர்த்து இந்த மதுபானம் தயாரிக்கப்படுவதால் வழக்கமாக தயாரிக்கப்படும் மதுபான வகைகளில் என்ன சுவை உள்ளதோ, அதே சுவை இந்த 'க்ரீனஸ்ட் பீரி லும் இருக்குதுன்னு சொல்றாங்க.

இப்ப உங்களுக்கும் சுவைக்கனும்ன்னு ஆசை வந்திருக்குமே. அட கொஞ்சம் பொறுங்க..எப்படியும் ஒருவேளை இந்தியாவுக்கும் வர வாய்ப்பு இருக்கலாம்..! அதுவரை பொறுத்திருங்க..!!

Tags

Next Story