பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா எரிச்சலுடன் கடும் எச்சரிக்கை..!

பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா  எரிச்சலுடன் கடும் எச்சரிக்கை..!
X

சவுதியில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான் மக்கள் 

சவுதி அரேபியா மிக மிக எரிச்சலுடன் பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கையினை அனுப்பியிருக்கின்றது.

அது உங்கள் நாட்டு மக்களை சோதித்து அல்லது எச்சரித்து சவுதிக்கு அனுப்புங்கள் என்பது தான். அதாவது பாகிஸ்தானில் பொருளாதாரம் கடுமையாக சரிந்து விட்டது. நாடு அதளபாதாளத்தில் கிடப்பதால் மக்கள் வாழமுடியாத தேசமாக அது மாறி பாகிஸ்தானியர் பல நாடுகளுக்கு ஓடுகின்றனர்.

அவர்களில் பலர் சவுதிக்கும் செல்கின்றார்கள். அங்கே உருப்படியான வேலை செய்கின்றார்களா என்றால் இல்லை. மாறாக சவூதியில் பொதுமக்களிடம் கையேந்தி பிச்சை எடுக்கத் தொடங்கி விட்டனர்.

இது சவுதியில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அப்படி கையேந்தி பிச்சை எடுப்பவர்களின் கைகளில் விலங்கிட்டு பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பு வேலையில் சவுதி அரேபியா ஈடுபட்டுள்ளது. இப்படி ஒரு தேவையில்லாத வேலையை பாகிஸ்தான் தங்களுக்கு கொடுத்து விட்டதாக அந்த நாடு கடும் டென்சனில் உள்ளது.

இதனை தொடர்ந்து சவுதி அரசு பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. ‘உங்கள் நாட்டில் இருந்து எங்கள் நாட்டிற்கு வருபவர்களை முழுமையாக விசாரித்து, என்ன வேலைக்கு செல்கிறார்கள்’ என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளது.

பாகிஸ்தானும் சவுதியும் இஸ்லாமிய நாடுகள். ஆனால் சக இஸ்லாமிய நாட்டின் இஸ்லாமியர்களை ஏற்க முடியாது என பணக்கார நாடான சவுதி விரட்டுகின்றது. காரணம் அவர்களுக்கு சவூதி அரேபியாவின் நலன் தான் முக்கியம்.

பரிதாப பாகிஸ்தானியர்கள்

இன்னொருபக்கம் பாகிஸ்தான் மக்களை நினைத்தால் வேதனைதான் பிறக்கிறது. சரியான ஆட்சியாளர்கள் இல்லாமல், நாட்டைப்பற்றி, மக்களைப்பற்றி சிந்திக்காமல் தேவையில்லாத ஈகோவை வளர்த்துக்கொண்டு பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கிறது நாடு. ஆட்சியாளர்கள் மக்கள் நலனோடு ஆட்சிபுரிந்தால் மக்கள் ஏன் பிற நாட்டுக்கு ஓடவேண்டும்?

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!