S-400 'Triumf' வான் பாதுகாப்பு ஈரானுக்கு வழங்கிய ரஷ்யா..!

S-400 Triumf வான் பாதுகாப்பு  ஈரானுக்கு வழங்கிய ரஷ்யா..!

ஈரானுக்கு ரஷ்யா வழங்கி உள்ள வான்பாதுகாப்பு தடுப்பு அமைப்பு.

S-400 'Triumf' மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பினை ஈரானுக்கு ரஷ்யா வழங்கி உள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கி உள்ள நிலையில் பதிலடி தர இஸ்ரேல் தயாராகி வருகிறது. இஸ்ரேலிடம் வலுவான ஏவுகணைகள் உள்ளன. அந்த ஏவுகணைகளின் மூலம் ஈரானின் எண்ணெய் கிணறுகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட பல முக்கிய இடங்களை தாக்கி பொருளாதார ரீதியாக ஈரானை முடக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்கினால் அந்த தாக்குதலை தடுக்கவும், பதிலடி தரவும் ஈரானும் தயாராகி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் மிகவும் மேம்படுத்தப்பட்ட எஸ்.400 வான் பாதுகாப்பு அமைப்பினை ரஷ்யா தனது நட்பு நாடான ஈரானுக்கு வழங்கி உள்ளது. இதன் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்: S-400 என்பது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு ஆகும். விமானம், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நீண்ட தூரத்தில் இருக்கும் போதே குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது. இதிலிருந்து புறப்படும் ஏவுகணைகள் 400 கிமீ தூரம் தொலைவுக்கு அப்பால் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளையும், விமானங்களையும் அழிக்கும் வல்லமை கொண்டது.

ஒரே நேரத்தில் பல இலக்குகளை அழிக்கக் கூடியது. ரகசிய விமானம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு எதிராக மிகவும் சிறப்பாக இந்த பாதுகாப்பு அமைப்பு செயல்படும். ரஷ்யா, சீனா, துருக்கி மற்றும் இந்தியா போன்ற நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த தொழில்நுட்பம் ஈரானுக்கும் கிடைத்துள்ளது. உலகின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

Tags

Next Story