ஆஸ்திரேலிய கடலில் மிதந்தது சந்திரயான்-3 ராக்கெட்டா..?
இந்திய PSLV ராக்கெட்டின் கழிவு என்று கூறப்படும் பொருளின் படம்.
PSLV Rocket Debris on Australian Beach in Tamil, PSLV Rocket Debris on Australian Beach, PSLV Rocket, Chandrayaan-3, mysterious cylindrical object found on Australian beach, Australian Space Agency, ISRO
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஜூரின் விரிகுடாவிற்கு அருகிலுள்ள கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மர்மமான, உருளைப் பொருள், "பெரும்பாலும் செயற்கைக்கோள் ஏவுகணை வாகனத்தின் மூன்றாம் கட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டின் கழிவுகளாக இருக்கலாம்" என்று ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் இன்று (ஜூலை 31) அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் (ASA) இந்த பொருளை முதன்முதலில் ஜூலை 17 அன்று கண்டு அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்த அறிக்கைகள் ஊடகங்கள் வாயிலாக பரவியதை அடுத்து கடற்கரையில் காணப்படும் மர்மமான பொருளின் தோற்றம் பற்றிய ஊகங்களை அறிவதற்கு தூண்டுதலாக இருந்தது.
சமூக ஊடகங்களில், ஆர்வலர்கள் ஆரம்பத்தில், 2014 ஆம் ஆண்டில் 239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானம் MH370, போயிங் 777-200ER என்று பலவித ஊகங்களை இந்த மர்மப்பொருளுடன் இணைத்து கருத்துகளை பதிவிட்டனர். இன்னும் சிலர் இந்த பொருள் இராணுவத் தோற்றம் கொண்டதாக உள்ளது என்றும் சிலர் ஊகித்தனர்.
தற்செயலாக, ஒரு சிறிய ஆஸ்திரேலிய கடலோர நகரத்தின் கரையோரத்தில் இந்த மர்மப்பொருளின் கழிவு காணப்பட்டது. ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட சமூக ஊடக பயனர்கள், இந்த பொருளின் புகைப்படங்களை பகிர்ந்து, இது இந்தியாவின் சந்திரயான் -3 -ன் மேல் நிலை விமானப்பகுதி என்று புகைப்படங்களைப் பகிர்ந்த சில நாட்களுக்குப் பிறகு தெரிய வந்தது.
சந்திரயான்-3 விமானம், உலகில் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் தெரியும் என்று தொடக்கத்தில் UFO கூறிய கருத்து சரியானது என்று இப்போது ஊகிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 14 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2:35 மணிக்கு இந்தியாவின் எல்விஎம் 3 ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது. ஜூலை 17 அன்று கழிவு கண்டெடுக்கப்பட்ட செய்தி வந்தது.
இருப்பினும்,கழிவாக கிடக்கும் சந்திரயான்-3 -க்கும், அதை ஏவிய எல்விஎம்3 ராக்கெட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. பிஎஸ்எல்வி என்பது இந்திய விண்வெளிப் பயண ராக்கெட் ஆகும். இது 58 ஏவுகணைப் பணிகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது. மேலும் 1993 ஆம் ஆண்டில் அதன் முதல் ஏவுதல் பணியைத் தொடங்கியது.
PSLV என்பது திட மற்றும் திரவ எரிபொருளால் இயக்கப்படும் நான்கு நிலை ராக்கெட் ஆகும். முதல் நிலை திடப் பொருட்களாலும், இரண்டாவது நிலை திரவப் பொருட்களாலும், மூன்றாவது நிலை திடப்பொருளாலும், நான்காவது நிலை திரவப் பொருட்களாலும் இயக்கப்படுகிறது. 500 கிலோ முதல் 1,750 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பிஎஸ்எல்வியை இந்தியா பயன்படுத்துகிறது.
இது அதிக அளவில் இந்திய விண்வெளியில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் என்பதுடன் அதிக நம்பகத்தன்மை கொண்ட ராக்கெட் ஆகும்.
வணிக ரீதியிலான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, இந்தியா விண்வெளிக்கு அனுப்பியுள்ள 431 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவற்றை விண்ணில் செலுத்திய தனிச்சிறப்பு பிஎஸ்எல்விக்கு உண்டு. பிஎஸ்எல்வி இந்தியாவின் முதல் சந்திரயான்-1 மற்றும் அதன் ஒரே செவ்வாய் பயணமான மங்கள்யான் ஆகியவற்றை விண்ணில் செலுத்தியது. விரைவில், PSLV சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் பயணத்தையும் தொடங்க உள்ளது.
"அந்த கழிவு மீட்கப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுகிறது. இது ஐக்கிய நாடுகளின் விண்வெளி ஒப்பந்தங்களின் கீழ் உள்ள கடமைகளைக் கருத்தில் கொள்வது உட்பட அடுத்த படிகளைத் தீர்மானிப்பதற்கும் உதவும்." என்று ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
இதேபோன்ற வேறு கழிவுகள் ஏதேனும் காணப்பட்டால், உள்ளூர் அதிகாரிகளிடம் புகாரளிக்குமாறு ஆஸ்திரேலிய குடிமக்களையும் அது வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.
இணைய வெளியில் கிடைக்கும் படங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது கடற்கரையில் உள்ள கழிவுப்பொருளுக்கும் பிஎஸ்எல்வி 3வது கட்டத்திற்கும் இடையே உள்ள காட்சி ஒற்றுமை தெரிகிறது. பிஎஸ்எல்வியின் மூன்றாவது நிலை இரண்டு மீட்டர் விட்டம் கொண்டது. ஆஸ்திரேலிய கடற்கரையில் உள்ள பொருள் பற்றிய அறிக்கையிலும் அதே அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆஸ்திரேலிய விண்வெளி ஏஜென்சியும் இந்த கழிவுத் துண்டு ஒரு திடமான ராக்கெட் மோட்டார் உறையாக இருக்கலாம் என்று கூறியது.
உலகில் மிகக் குறைவான விண்வெளிப் பயண ராக்கெட்டுகள் மட்டுமே திட எரிபொருள் மூன்றாம் நிலையைப் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு செய்த சில ராக்கெட்டுகளில் இந்திய பிஎஸ்எல்வி (புதிய எஸ்எஸ்எல்வி ராக்கெட்) ஒன்றாகும். இருப்பினும், கிட்டத்தட்ட அனைத்து ஏவுகணைகளும் திட எரிபொருளால் இயக்கப்படுகின்றன.
எந்த பிஎஸ்எல்வி ஏவுகணை என்பதை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?
இந்த மூன்றாம் கட்ட கழிவினை எந்த குறிப்பிட்ட பிஎஸ்எல்வி மிஷனுடனும் குறிப்பாக இணைக்க முடியாது என்று உயர்நிலை ஆதாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், கழிவுப்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ள குமிழ் மற்றும் அதன் தேய்ந்த தோற்றத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இது பல மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் பழமையானது என்று முடிவுக்கு வரமுடிவதுடன், இது நீண்ட காலமாக கடலில் அலைந்து கொண்டிருக்கிறது என்று கருதுவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
எப்படி கரைக்கு வந்தது?
விண்வெளிக்கு ஒரு ராக்கெட் ஏவப்பப்படும்போது, உந்தப்பட்ட ராக்கெட்விமான பாகங்கள் நடுவில் தூக்கி எறியப்படுகின்றன. மேலும் விண்வெளி ஏஜென்சிகள், அவர்கள் சார்ந்த நாடுகளின் பரந்த நீர்நிலைகளான கடல் அல்லது மக்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே பாதுகாப்பாக விழும் வகையில் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றன.
இருப்பினும், ராக்கெட் பாகங்கள் கடலில் மூழ்கியவுடன், சில பகுதிகள் மீன்பிடி வலைகளில் சிக்கி கரைக்கு கொண்டு வரப்படலாம். சில மிதக்கும் மற்றும் கடல் நீரோட்டத்தின் மூலமாக மூழ்கிய ராக்கெட் பாகங்கள் கரைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். இப்படி பல வகையான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இஸ்ரோ குழு ஆஸ்திரேலியா சென்று அந்த பொருளை ஆய்வு செய்கிறதா?
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம், இது தொடர்பாக மேலும் கலந்துரையாடுவதற்காக நாட்டில் உள்ள தொடர்புடைய நிறுவனத்தை தொடர்புகொண்டு இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்வதற்கு ஒருங்கிணைக்கும் என்று தெரிகிறது.
விண்வெளி கழிவுகள் குறித்த ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதல்கள் என்ன?
விண்வெளி விவகாரங்களுக்கான ஐநா அலுவலகம் (UNOOSA)வழிகாட்டுதல்படி, விண்வெளிக் கழிவுகளை மீட்டெடுப்பது மற்றும் திரும்பப் பெறுவது, 1968 மீட்பு ஒப்பந்தமே அதன் முக்கிய வழிகாட்டுதல் ஆகும். அந்த ஒப்பந்தத்தின்படி, நாட்டின் தங்கள் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட "வெளிநாட்டு" விண்வெளிப் பொருட்களை எந்த நாட்டுக்கு உரிமையானதோ அவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும். மேலும் அத்தகைய கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அவர்கள் பொதுச்செயலாளருக்கு அறிவிக்க வேண்டும் என்பது விதியாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu