உக்ரைன் - ரஷ்யா இடையே சிம்லாவில் அமைதிப்பேச்சு..!

உக்ரைன் - ரஷ்யா இடையே   சிம்லாவில் அமைதிப்பேச்சு..!
X

கோப்பு படம் 

உக்ரைன்- ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளை எட்டி விட்ட நிலையில் இந்தியா அமைதிப்பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

உக்ரைன் -ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக முதலில் சோவியத் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். பின்னர் உக்ரைனுக்கு சென்று அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்க்கியை சந்தித்து பேசினார். உக்ரைன் அதிபர் பிரதமர் மோடியிடம், அமைதி பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என வெளிப்படையாக கோரிக்கை வைத்தார். அதன் பின்னர் இந்தியா தலைமையில் நடக்கும் அமைதிப்பேச்சு வார்த்தையில் சோவியத்ரஷ்யா பங்கேற்கும் என புதின் அறிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோபிடன் உக்ரைன்- ரஷ்யா போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து இந்தியா தலைமையில் அமைதிப்பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்தியாவில் சிம்லாவில் உக்ரைன்- ரஷ்யாவின் பிரதிநிதிகள் சந்தித்து பேசுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சிம்லாவை தவிர்த்து இந்தியாவில் வேறு சில இடங்களும் பேச்சு வார்த்தை நடத்த பரிசீலிக்கப்படுகின்ற்ன. இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. விரைவில் பேச்சு வார்த்தைகள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags

Next Story