'மோடி போல ஒரு தலைவர் பாகிஸ்தானுக்கு வேண்டும்' : பாக்-அமெரிக்க தொழில் அதிபரின் ஆசை..!
Pakistan needs a leader like Narendra Modi, Pakistani-American businessman from Baltimore,Sajid Tarar
பால்டிமோர் பகுதியைச் சேர்ந்த பாகிஸ்தானிய-அமெரிக்க தொழிலதிபர் சஜித் தரார், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று கூறியுள்ளார். இதேபோன்ற ஒரு தலைவர் கிடைத்தால் பாகிஸ்தானுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார்.
Pakistan needs a leader like Narendra Modi
தராரின் கூற்றுப்படி, பிரதமர் மோடியின் தேசியவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பண்பினால் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள இந்தியர்களுக்கு சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் அவர்கள் முக்கியமான துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.
“மோடியின் தேசியவாதம் என்ற முழக்கம் இந்தியாவில் உள்ள இந்தியர்களுக்கும், அமெரிக்காவில் வாழும் மற்றும் பணிபுரியும் இந்தியர்களுக்கும் சாதகமான நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அவர்கள் முக்கியமான பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அப்படியான ஒரு ஆதிக்கம் நிகழும்போது, ஒரு தேசம் நிமிர்ந்து நிற்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்,” என்று தரார் பிடிஐயிடம் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்க முஸ்லிம்களை நிறுவிய குடியரசுக் கட்சியுடன் இணைந்த தலைவரான தாரார், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கண்டுள்ள இந்தியாவின் முன்னேற்றம்போல பாகிஸ்தானிலும் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். அதற்கு மோடி போன்ற பல தலைவர்கள் தோன்றினால் மட்டுமே பாகிஸ்தானுக்கு சாத்தியமான நன்மைகள் கிடைக்கும் என்று கூறினார்.
Pakistan needs a leader like Narendra Modi
ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்த நாடு வாஷிங்டன் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தும் திறனில் தெளிவாகத் தெரிகிறது. இந்திய தொழில்நுட்ப தொழில்முனைவோரின் எழுச்சி வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூகத்தை உயர்த்தியுள்ளது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இதேபோன்ற வெற்றியை அடைவதற்கு பாகிஸ்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தரார் பரிந்துரைத்துள்ளார்.
“இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர், மௌலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற நிறுவனங்களைக் உருவாக்கி எழுச்சி பெறச் செய்து நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டனர். தேசத்தின் தொலைநோக்குப்பார்வை நாட்டிற்கு நீண்டகால வளர்ச்சிக்கான பாதையை வழங்கியுள்ளது. தொலைநோக்குப் பார்வையில் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை மனதில் கொண்டு சிறந்த கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு பிரதான முதலீடு என்ற சரியான பார்வையே நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.” என்று அவர் பிடிஐயிடம் கூறினார்.
Pakistan needs a leader like Narendra Modi
பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளை அனுப்பவில்லை. அதற்கு பதிலாக, வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் மும்தாஸ் சஹ்ரா பலோச், அண்டை நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பது மிக விரைவில் நடக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பாகிஸ்தான் எப்போதும் இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் கூட்டுறவை விரும்புகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் முக்கிய பிரச்சனை உட்பட அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகளையும் தீர்க்க ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மற்றும் ஈடுபாட்டை தொடங்கவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்," என்று பாகிஸ்தானிய அமெரிக்க தொழில் அதிபர் தாரார் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu