பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் விரைவில் கைதாவார் : பாக். உள்துறை அமைச்சர்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரித்த பெஷாவர் உயர் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு மூன்று வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா நேற்று செய்தியாளர்களை
சந்தித்தார். அவர் கூறும்போது, இம்ரான் கான் மக்களைத் தூண்டிவிட்டு, தார்மீக மற்றும் ஜனநாயக நெறிமுறைகளை புறக்கணித்து,எதிர்க்கட்சியினரை துரோகிகள் என்று கூறும் ஒருவர் ஜனநாயகத்தில் எப்படி ஒரு அரசியல் கட்சியின் தலைவராக முடியும்? இம்ரான் கான் மீது கலவரம், தேசத்துரோகம், குழப்பம் ஏற்படுத்துதல் மற்றும் கூட்டமைப்பு மீதான ஆயுதமேந்திய தாக்குதல்கள் உட்பட பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்காக, பெஷாவர் உயர் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு வழங்கிய பாதுகாப்பு ஜாமீன் காலாவதியானதுடன் அவரின் வீட்டு வாசலில் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளாலேயே அவர் கைது செய்யப்படுவார். இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபீ, அவரது தோழி ஃபரா கோகி ஆகியோர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் அரசின் ஆட்சிக் காலத்தில் பில்லியன்களில் ஊழல் செய்து சம்பாதித்திருக்கின்றனர் என்று குற்றம் சுமத்தினார்.
கடந்த மாதம் இம்ரான் கான் நூற்றுக்கணக்கான ஆளும் அரசின் எதிர்ப்பாளர்களை ஒன்றுதிரட்டி 'ஆசாதி அணிவகுப்பு' நடத்தினார். நீதிமன்ற உத்தரவை மீறி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகருக்குள் நுழைந்ததால் அவருக்கு எதிரான தேசத்துரோக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாமா என்று பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu