மூக்குக்காக வாழ்க்கையையே தொலைத்த பெண் :தவிப்பில் சிறு மகனும்,கணவனும்

உயிரிழந்த மரியா லெபதேவ்
மரியா லெபதேவ் ஆபரேஷன் தியேட்டரில் இருந்தபோது.சோசியல் மீடியாவில் செல்வாக்குள்ள ஒரு பிரபல பெண் மூக்கு ஆபரேஷன் செய்யும்போது பரிதாபமாக உயிரிழந்தார்.
ரஷ்யாவில் உள்ள ஒரு கிளினிக்கில் அந்த 31 வயது மெரினா லெபதேவ் என்ற பெண்ணுக்கு மூக்கின் வடிவத்தை மாற்றி அமைக்கும் ஆபரேஷன் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அந்த ஆபரேஷன் செய்வதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அந்த மருந்தை அவரது உடல் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்வினை ஆற்றியது. உடல் பயங்கர சூடானது.
மரியா லெபதேவ் (உயிருடன் இருந்தபோது)
சமூக வலைத்தளங்களில் அவரது ஆதரவாளர்களால் குரு என்று அவர் போற்றப்பட்டவர். ஆஸ்பத்திரி அறிக்கைகளின்படி, அவர் மூக்கின் வடிவத்தை ரைனோபிளாஸ்டி மூலம் "சரிசெய்ய" விரும்பினார்.
ஆபரேஷனுக்கு முன்னதாக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. ஆனால் அவரது வெப்பநிலை உயர்ந்தது. அவருக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்துக்கு அவரது உடல் பாதகமான எதிர்வினை ஆற்றி இருக்கலாம் என்று ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியுள்ளனர். மெரினா லெபதேவ்வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதை உணர்ந்தவுடன் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனாலும் லெபதேவாவை காப்பாற்ற முடியவில்லை.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஆர்டிபியூட் கிளினிக்கில் அவரைக் காப்பாற்ற பிளாஸ்டிக் சர்ஜன்கள் மற்றும் துணை மருத்துவர்கள் போராடினர். ஆனாலும், அவர் இறந்து போனார்.
யார் இந்த மெரினா லெபதேவ் ?
மெரினா லெபதேவ் ஜூலை 19, 1990 இல் பிறந்தார். அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2ஆயிரத்துக்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளனர். அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார். மேலும் பக்கத்தில் உள்ள ஒரு உணவகத்தைப் பற்றி பெருமையாக பேசியிருந்தார். "ஃபோன்டாங்காவில் நான் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் பக்கத்து வீட்டில், ஒரு பசுமையான மொட்டை மாடியுடன் சிறந்த உணவகத்தை நான் கண்டேன். அவர்கள் போர்த்துகீசிய உணவு வகைகளை பரிமாறுகிறார்கள். அங்கு அளிக்கப்படும் சேவைக்காக பலர் விரும்புகிறார்கள். மது மற்றும் சுவையான உணவை விரும்புவோருக்கு அருமையான இடம் " என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
மரியா லெபதேவ் ஆபரேஷன் தியேட்டரில் இருந்தபோது.
லெபலெபதேவின் மரணம் குறித்த குற்றவியல் விசாரணை
ஆகஸ்ட் 25 அன்று லெபதேவின் மரணத்தைத் தொடர்ந்து, அந்த கிளினிக்கில் அலட்சியத்துடன் மருத்துவம் செய்யப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் குற்றவியல் விசாரணை தொடங்கியது. அறுவை சிகிச்சையைப் பதிவுசெய்து, ரென்டிவி வெளியிட்ட வீடியோ ஆதாரமாகப் பயன்படுத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். என்று கூறப்பட்டுள்ளதால் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மெரினா லெபதேவ் இறக்கும்போது அவரது கணவர் ஒரு பிஸ்னஸ் விஷயமாக பயணத்தில் இருந்தார். மனைவியின் மரணம் குறித்து அறிவிக்கப்பட்ட பிறகு, அவரும் உடனே திரும்பிவிட்டார். இப்போது அவர்களது இளம் மகனுக்கு அவர் மட்டுமே ஆதரவு.
ரஷ்ய புலனாய்வுக் குழு மெரினா லெபதேவ் மரணத்திற்கான சூழ்நிலைகளையும் காரணத்தையும் இன்னும் தேடுவதாகக் கூறியுள்ளது. குற்றவியல் வழக்கு விசாரணை தொடர்கிறது. அவரது மரணம் தொடர்பான கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மூக்குக்காக ஆபரேஷன் செய்து ஒரு பெண் வாழ்க்கையை தொலைத்தது, பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu