ஈரான்- இஸ்ரேல் இடையே முழு போர் சாத்தியமா?

ஈரான்- இஸ்ரேல் இடையே முழு போர் சாத்தியமா?
X

இஸ்ரேல்- ஈரான் நாடுகளை குறிப்பிட்ட வரைபடம்.

இஸ்ரேல் இனிமேல் ஈரானை காலி பன்னிடும்னு சொல்றாங்க. ஆனால் அதுக்கு வாய்ப்பில்லை...

போர் நீடித்தால் அமெரிக்காவின் உதவியில்லாமல் போரை நீட்டிப்பது இஸ்ரேலுக்கு தலை வலியாகிப் போகும். லெபனான் மற்றும் ஏமன் மீது வெற்றிகரமான சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவது வேறு. ஈரானின் மேல் தாக்குவதென்பது வேறு. அமெரிக்கா உதவியில்லாமல் ஈரானை தாக்க இஸ்ரேல் முற்படாது.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி துறைமுகம், மின் நிலையங்கள் மற்றும் தொலைதொடர்பு சாதன வசதிகள் மேல் தாக்குதல்கள் நடத்தி ஈரானை பொருளாதார ரீதியாக வலுவிழக்கச் செய்ய முடியுமே தவிர மொத்தமாக தன்னந்தனியாக இஸ்ரேல் மட்டுமே ஈரானை அடிபணிய வைப்பது என்பது நடக்கவே நடக்காத காரியம்.

இஸ்ரேல் மற்றும் ஈரானின் ராணுவ வலிமையை பார்க்கலாம். ஒப்பீட்டளவில், இஸ்ரேலின் ராணுவம் சிறந்த முறையிலும் மற்றும் வீரர்கள் சிறந்த பயிற்சியை பெற்றும் உள்ளனர். எனினும், ஈரானின் ராணுவ பிரிவுகளில் சில போர்க்களத்தில் பரிசோதித்து பார்க்கப்பட்டவை என புரட்சி காவல் படையினரை குறிப்பிட்டு, இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் ராயல் யுனைடெட் சர்வீசஸ் மையத்தின் துணை இயக்குநர் டேவிட் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.

ஈரானின் மற்ற படைகளை காட்டிலும், புரட்சி காவல் படையினருக்கு சிறந்த ஊதியம் அளிக்கப்பட்டது. இரு நாடுகளின் ராணுவமும் நேருக்கு நேர் மோத கூடிய சூழல் இல்லை என்ற போதும், வளைகுடா அல்லது மத்திய தரைக்கடல் பகுதிகளில் நேரடியாக அல்லது மறைமுக அடிப்படையில் மோதல் ஏற்படலாம் என்றும் அவர் கூறுகிறார்.

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் என்றால், அதில் நீண்ட தொலைவு சென்று தாக்க கூடிய விமானம், வான் பாதுகாப்பு ஆயுதங்கள், சிறிய கடற்படை விமானம் மற்றும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்படக் கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

ஏனெனில், இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று சற்று தொலைவில் அமைந்துள்ளன. இதனால், தொடர்ச்சியாக மோதுவதற்கு இதுபோன்ற நீண்ட தொலைவு தாக்குதலுக்கான ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என கவனத்தில் கொண்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீரர்கள் பலம்: இஸ்ரேலின் ராணுவம் என எடுத்து கொண்டால், 1,76,500 வீரர்கள் உள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், இஸ்ரேல் கடற்படை மற்றும் இஸ்ரேல் விமானப் படை ஆகியவற்றை அது உள்ளடக்கியது. நாட்டில் உள்ள குடிமக்கள் 18 வயது நிறைவடைந்ததும், அவர்கள் ஆயுத படைகளில் சேர்ந்து சேவையாற்ற வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

ஈரான் நாட்டு ராணுவத்தில் 5.23 லட்சத்திற்கும் கூடுதலான வீரர்கள் உள்ளனர். இதில், ஆளும் அரசுக்கு விசுவாசமிக்கவர்களாக பார்க்கப்படும் இஸ்லாமிய புரட்சி படை வீரர்கள் 1.25 லட்சம் பேர் உள்ளனர். 19 வயது நிரம்பிய ஈரான் இளைஞர்கள் ராணுவத்தில் 18 மாதங்கள் வரை சேவையாற்றி இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

துணை ராணுவ படையான பசீஜ் படைகளில் சிலர் 15 வயது நிறைவடைந்ததும் சேருகின்றனர். ஈரானின் எல்லையை ஆர்தேஷ் எனப்படும் இஸ்லாமிய குடியரசு படைகள் பாதுகாத்து வருகின்றன. 18 ஆயிரம் கடற்படை வீரர்கள் ஈரானிடம் உள்ளனர். 12 ஆயிரம் வான்பாதுகாப்பு வீரர்கள் உள்பட 30 ஆயிரம் விமானப் படை வீரர்களும் அவர்களிடம் உள்ளனர்.

பீரங்கிகள்: இஸ்ரேல் நாட்டிடம் 3,500 பீரங்கிகள் உள்ளன. ஈரானுடன் ஒப்பிடும்போது, அவை சிறந்த முறையில் செயல்பட கூடியவை. ஈரானிடம் 1,613 பீரங்கிகள் உள்ளன. இஸ்ரேலிடம், ஈரானை விட விமான ஒழிப்பு ஆயுதங்கள் இரண்டு மடங்கிற்கும் கூடுதலாக உள்ளன. கவச வாகனங்கள் 10,484 என்ற அளவில் உள்ளன. பெரிய ரக துப்பாக்கிகளை கொண்ட பீரங்கிகள் 5,432 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில், 620 இயந்திர வகையை சேர்ந்தவை. இவையெல்லாம் இஸ்ரேலின் ராணுவத்திற்கு பலம் சேர்ப்பவை.

கடற்படை; ஈரானிடம் பெரிய அளவில் கடற்படை உள்ளது. இதில், 23 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதுபோக, 12 மிட்ஜெட் வகை நீர்மூழ்கி கப்பல்களும் ஈரான் கைவசம் உள்ளன. வளைகுடா நாடுகளுக்காகவே பயன்பட கூடிய வகையில், ஈரானிலேயே உருவான காதிர் மற்றும் நஹாங் வகையை சேர்ந்த இந்த மிட்ஜெட் வகை நீர்மூழ்கி கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இஸ்ரேலிடம் 3 டால்பின் வகை நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இவை ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவை. இவை தவிர, 57 ரோந்து மற்றும் கடலோர போர் கப்பல்களும் உள்ளன. இவற்றில் பிற போர்க்கப்பல்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க கூடிய 3 கார்விட் வகை சிறிய போர்க்கப்பல்களும் அடங்கும்.

விமானப் படை: இஸ்ரேலின் விமான படையில், போரில் ஈடுபடக் கூடிய 460 விமானங்கள் உள்ளன. இவற்றில், 27 போயிங் எப்15ஏ ஈகிள் ரக விமானங்களும், 7 எப்15பி ரக விமானங்களும் மற்றும் 90 எப்16ஏ ரக போர் விமானங்கள் என வானில் இருந்து வானை தாக்க கூடிய அல்லது வானில் இருந்து தரை பகுதியை தாக்க கூடிய திறன் படைத்த 168 போர் விமானங்களும் அடங்கும்.

இதேபோன்று, தரை பகுதியில் இலக்கை தாக்கும் திறன் பெற்ற 227 விமானங்கள் மற்றும் 65 தாக்குதல் விமானங்களும் இஸ்ரேலிடம் உள்ளன. பீரங்கிகளை சுமந்து கொண்டு வேறு இடத்திற்கு செல்லும் 9 விமானங்கள் மற்றும் பிற போக்குவரத்து விமானங்களும் உள்ளன. ஈரானிடம், போரில் ஈடுபட கூடிய திறன் படைத்த 336 விமானங்கள் உள்ளன. தரை பகுதியில் இலக்கை தாக்கும் திறன் கொண்ட 108 விமானங்கள் உள்ளன என அறியப்படுகிறது. இவற்றில் ஈரான் மற்றும் ரஷியாவில் தயாரான விமானங்களும் அடங்கும்.

ஏவுகணைகள்: ஏவுகணைகள் வரிசையில் ஈரானிடம், வளைகுடா மற்றும் அதனை கடந்து தாக்கும் திறன் வாய்ந்த ஆயிரம் உயர்தர ஏவுகணைகள் உள்ளன. இவற்றில், உள்நாட்டிலேயே உற்பத்தியான சஹாப்-3 ஏவுகணைகள் (1,000 கி.மீ. இலக்கை தாக்க கூடியவை), காதர்-1 (1,600 கி.மீ. இலக்கை தாக்க கூடியவை) மற்றும் சஜ்ஜில்-2 (2,400 கி.மீ. இலக்கை தாக்க கூடியவை) ஆகியவையும் அடங்கும். இந்த ஏவுகணைகள் அனைத்தும் புரட்சி படையினரின் வசம் உள்ளவை.

இஸ்ரேலிடம் அணு சக்தி திறன் பெற்ற மற்றும் தென்அமெரிக்கா அல்லது ஓசானியா பகுதிகளை கூட தாக்க கூடிய திறன் படைத்த பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் உள்ளன. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் பெற்ற, 200 அணுசக்தி பயன்பாட்டுடன் கூடிய ஏவுகணைகளும் உள்ளன. இஸ்ரேல் நாட்டிடம் பிற ராணுவ வசதிகள் உள்ளபோதும், அவர்கள் ஈரான் மீது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய வகையில் போதிய விமானங்களையோ மற்றும் சரியான வகையிலான வெடிகுண்டுகளையே கொண்டிருக்கவில்லை என்றே பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

என்னதான் இஸ்ரேல் ஈரானை விட தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்தாலும் ஈரானுடனான நேரடி சண்டையில் ஈடுபடாது, அதுபோன்றே ஈரானும் இஸ்ரேலுடன் நேரடி போரில் ஈடுபடுவதை தவிர்க்கவே முற்படும். அதனால் இப்படியே ஈரானும் இஸ்ரேலும் தங்களுக்கிடையுள்ள தூரமான சுமார் 2300 கி.மீகளுக்கு தீபாவளி ராக்கெட் விட்டு வேடிக்கை காண்பிப்பார்கள். அதுவும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே.

அதன் பின் ஈரான் வழக்கம் போல ஒரு புது இயக்கத்தை ஆரம்பிச்சு அதுக்கு ஆயுதம் சப்ளை செய்து இஸ்ரேலை தாக்க வைப்பாங்க... இஸ்ரேலும் தங்களது அயர்ன் டுரோமை பயன்படுத்தி தாக்குதலை தடுத்துக் கொள்வார்கள். அயர்ன் டுரோனை தயாரிக்கிற நிறுவனத்திற்கு நல்லதொரு பொருளாதார வளர்ச்சி இருக்கும். அது போலவே ஈரானுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்கிற நிறுவனங்களுக்கும் நல்லதொரு பொருளாதார வளர்ச்சி இருக்கும். உலக பொருளாதாரம் இதனால் வளரும்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்