ஆப்கான் அரசே கவலைப்படாத போது அமெரிக்கா ஏன் கவலைப்பட வேண்டும்?: பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கான தனது முடிவு சரியே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்
தனது தொலைக்காட்சி உரையில் பைடன் பேசும்போது, இந்த ஆண்டு அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவது பற்றிய பேச்சுவார்த்தையின்படி, இதனை தேர்வு செய்ததாக பைடன் கூறினார். கடந்தகால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்பதற்காக இதனை தேர்ந்தெடுத்ததாகவும், தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவது என்பது அமெரிக்காவிற்கு சரியான முடிவு. ஏனென்றால் அமெரிக்க படையை அங்கு வைத்திருப்பது அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு நல்லதல்ல. காபூலில் உள்ள விமான நிலையத்தில், ஆப்கானியர்கள் நாட்டை விட்டு தப்பி காட்சிகள் பதைபதைக்க செய்தது. ஆனால் இதில் அமெரிக்க தவறு எதுவுமில்லை. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும், ஆப்கானியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும். தற்போது நடப்பவைகளை கண்டு வருத்தப்பட்டாலும், எனது முடிவுக்கு நான் வருத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.
தலிபான்கள் தலைநகரான காபூலைக் கைப்பற்றிநிலையில் ஆப்கான் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறினார். ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பம் காரணமாக பைடன் தோல்வியடைந்ததாகக் குடியரசுக் கட்சியினரின் விமர்சித்தனர். ஆப்கன் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது என்று பைடன் கூறினார்.
தலிபான்கள் முழு நாட்டையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று பைடன் ஜூலை 8 அன்று கூறினார். கடந்த வாரம் தான், நிலைமை மோசமடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, படை வெளியேற்றும் திட்டங்களை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் ட்ரம்பும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பினர், ஆனால் இறுதியில் இராணுவத் தலைவர்களின் எதிர்ப்பு மற்றும் அரசியல் காரணங்களால் தயங்கினர். .
அமெரிக்க மக்கள் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாக ஆகஸ்ட் 31 காலக்கெடுவில் பைடன் உறுதியாக இருந்தார். உதாரணமாக, ஜூலை மாத இறுதியில் ஏபிசி கருத்துக் கணிப்பு, 55 சதவிகித அமெரிக்கர்கள், பைடன் படையை திரும்பப் பெறுவதை ஆதரித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu