சுவாமி நாராயண் கோவிலை திறந்தார் பிரதமர் மோடி..!

சுவாமி நாராயண் கோவிலை திறந்தார் பிரதமர் மோடி..!
X

அபுதாபி இந்து கோவில் திறப்புவிழாவில் பிரதமர் மோடி 

ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலான சுவாமி நாராயணன் கோயிலில், மஹந்த் சுவாமி மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

அபுதாபி சுவாமி நாராயண் கோயில் வடஇந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா- ஐக்கிய அரபு அமீரகத்தின் கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் கோயில் கட்ட, 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். இத்துடன் கூடுதலாக, 13.5 நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த, 2019ம் ஆண்டு கொடுத்தது.

இதனையடுத்து 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நராயண் கோயில் கட்ட நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கோயிலில் ஒரே நேரத்தில் 10000 பேர் வரை தங்கலாம். இன்று இக்கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!