வெளிநாட்டுக்கு வேலைக்கு போறீங்களா..? கொஞ்சம் கவனமாக இருங்க..!
கோப்பு படம்
உலக நாடுகள் பலவும் தற்போது தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டினர் வேலைக்கு வருவதை விரும்பவில்லை. குறிப்பாக அரபுநாடுகளில் மனிதவளம் குறைவாக இருப்பதாலும், அரேபியர்களுக்கு செல்வம் கொட்டிக்கிடப்பதால் வேலை செய்வதை விரும்பாத காரணத்தாலும், அந்த நாடுகள் மட்டும் வேலைக்கு வெளிநாடுகளில் இருந்து ஆட்களை இறக்குகின்றனர்.
பிறநாடுகள் தற்போது வெளிநாட்டினரை வேலைக்காக உள்ளே அனுமதிப்பதை வெகுவாக குறைத்து விட்டன. அதுவும் குடியுரிமை விவகாரத்தில் மிகுந்த கண்டிப்புடன் உள்ளன. இதனை தொடங்கி வைத்தது
அமெரிக்கா தான். அந்த நாடு தான் வெளிநாட்டினர் உள்ளே வர கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. சீனா எப்போதுமே யாரையும் அனுமதிப்பதில்லை. இந்த நடைமுறை ஐரோப்பிய நாடுகள் முழுக்க பரவி விட்டது.
இப்போது பிரிட்டனும் இதே விஷயத்தை கையில் எடுத்துள்ளது. பிரிட்டன் பிரதமர் ஹேர் ஸ்டார்மர் , பிரிட்டன் உள்துறை அமைச்சகம் மற்றும் புலம்பெயர்வோருக்கான ஆலோசனை கமிட்டிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வெளிநாட்டில் இருந்து பணி நிமித்தமாக பிரிட்டனுக்கு வருவோருக்கு பணி நிமித்த விசாவில் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து யோசனை வழங்குமாறு கேட்டுள்ளார். தகவல் தொழில் நுட்பம், தொலைதொடர்பு, இன்ஜினியரிங் துறையில் வெளிநாட்டவர்கள் பணியில் இருப்பதை குறைக்க முடியுமா, மேலும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் , இதில் வருமான உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வருவது உள்ளிட்ட விஷயங்களில் ஆலோசனை கேட்டுள்ளார். இந்த அறிக்கையை 9 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu