யாழ்ப்பாண நகரில் பெரும்பாலான கடைகள் இன்று திறக்கப்படும்

யாழ்ப்பாணம் நகரில் நாளை மூடப்பட்டிருந்த கடைகளில் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் நாளை திறக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாநகர மேயர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்

யாழ் மாநகர மேயர் நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார் கடந்த 26 ஆம் தேதியிலிருந்து யாழ் நகர வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களில் 75 % க்கும் மேற்பட்ட கடைகளை தவிர ஏனைய கடைகள் நாளைய தினம் மீண்டும் திறக்கப்படுவதாக மாநகர மேயர் தெரிவித்தார்

இன்று காலை யாழ் மாநகர சபை பொது சுகாதாரத்துறை அதிகாரி தலைமையில் நடந்த கூட்டத்தின் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஏற்கனவே பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களை தவிர்த்து பாதிக்கும் மேற்பட்ட கடைகள் நாளை திறக்க அனுமதிக்கப் பட உள்ளதாக மேயர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!