உலகின் கவனத்தை ஈர்த்துள்ள மோடியின் உக்ரைன் பயணம்..!
பிரதமர் மோடி மற்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி (கோப்பு படம்)
மோடி வெளிநாடு செல்வது பெரிய விஷயமல்ல. மிக மிக உக்கிரமான பதற்றமான நேரத்தில் அவர் உக்ரைன் செல்வது தான் விஷயம். மூன்றாம் ஆண்டாக நடக்கும் உக்ரைன் போரில் பெரும் திருப்பமாக ரஷ்யாவுக்குள் உக்ரைன் புகுந்தது. இப்போது ரஷ்யாவிடம் உக்ரைனின் அணு உலை ஒன்றும், உக்ரைனிடம் ரஷ்ய அணு உலை ஒன்றுமாக சிக்கி உள்ளது. இதனால் சர்வதேச அணுசக்தி கமிஷன் தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது.
நிலைமை களபேரமாகி விட்டது. புதினுக்கும் வேறுவழி இருப்பதாக தெரியவில்லை. உக்ரைன் ரஷ்யாவினை விட்டு விலகினால் ரஷ்யா உக்ரைனில் இருந்து வெளியேறும் என்பதை நோக்கித் தான் ஆருடங்கள் செல்கின்றன. இன்றைய தேதியில் உக்ரைனும் ரஷ்யாவும் நம்பகமான பேச்சு வார்த்தைக்கு தயார். ஆனால் யார் தலைமையில் இந்த பேச்சுவார்த்தையினை நடத்தவது என்பது தான் மகா சிக்கல் நிறைந்த விஷயம்.
சீனாவுக்கு இதை செய்ய பெரும் விருப்பம் உள்ளது. அப்படியே தான் மிகப்பெரிய வல்லரசு எனும் இடத்தை பிடித்து விடலாம் என்றும் கணக்கு போட்டுள்ளது. சீனாவின் விருப்பம் அமெரிக்க தரப்புக்கு பிடிக்கவில்லை. சீனாவினால் சில வெறுப்புக்களை கண்ட புதினுக்கும் அதில் விருப்பமில்லை.
இப்போதைய நிலையில் உலக அளவில் ஒரே நம்பகமான தலைவர் இந்திய பிரதமர் மோடி மட்டுமே. எனவே இரு நாடுகளும் ஒரே மனதுடன் இந்திய தலைவர் மோடியை விரும்புகின்றன.
மோடி உலக அரங்கில் இப்போது மிக மிக வலுவாக, மதிக்கப்படும் நம்பகமான தலைவர். பிரதமர் மோடியின் சொல்லுக்கு உலகளவில் பெரும் மதிப்பு உண்டு. ரஷ்யாவால் தவிர்க்க முடியாத நாடு இந்தியா. புதின் புன்னகை பூக்க விரும்பும் ஒரே தலைவர் மோடி எனும் வகையில் ரஷ்யாவின் தேர்வும் இந்தியா மட்டுமே.
உக்ரைனை பொறுத்தவரை அதன் தேர்வும் இந்தியா தான். வேறு எந்த நாட்டுக்கும் அந்த சக்தியும், சந்தர்ப்பமும் இல்லை என்பதை உக்ரைன் உணர்த்தியிருக்கின்றது. கடந்த வருடம் முதலே இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என உக்ரைன் கேட்டுக் கொண்டது. இன்னும் பல நாடுகளும் கேட்டுக் கொண்டன.
இந்நிலையில் தான் கடந்த மாதம் ரஷ்யா சென்று வந்தார் மோடி. யாரும் எதிர்பார்க்காத பயணம் அது. அவ்வகையில் புதினிடம் அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தற்போது அவர் உக்ரைன் பயணம் மேற்கொள்கின்றார். முதலில் போலந்து சென்றுள்ள பிரதமர் மோடி, பின் அங்கிருந்தே உக்ரைன் சென்று செலன்ஸ்கியினை சந்திக்கின்றார். உக்ரைனுக்கு செல்லும் முதல் சமாதான தலைவர் மோடி என்பது தான் இன்றைய செய்தி. அது பெரும் வரலாறு. ஒரு இந்திய தலைவன் உலக அரங்கில் நடக்கும் போரில் சமாதானம் பேச செல்வது வரலாற்றில் இதுதான் முதல்முறை.
சமாதானம் பேசுவது என்பது எளிதில் நடக்காது. சமாதானம் பேசச் செல்பவர் சண்டையிடும் இருவரை விட பலம் கொண்டவராகவும், இருவரையும் அடக்கும் வைக்கும் சக்தி கொண்டவராகவும் இருந்தாலன்றி அவரது சமரசமும், சமாதானமும் செல்லாமல் போய் விடும். முழு பலமோடு இருக்கும் நபரே சமாதானம் செய்து வைக்க முடியும்.
அவ்வகையில் பாரதம் முழு பலத்தோடு இன்று உலக அரங்கில் தனிபெரும் சக்தியாக உலகின் இரண்டாம் பலம் வாய்ந்த நாடாக எழுந்து நிற்கின்றது. உலகில் அமெரிக்காவுக்கு அடுத்த சக்தி வாய்ந்த நாடு எனும் இடத்தை இந்தியா பெறும் நேரம் இதுவே.
மோடியின் உக்ரைன் பயணம் அதை அறுதியிட்டு சொல்கின்றது. இந்திய தேசியக்கொடி கம்பீரமாக உலக அரங்கில் பறக்கச் சொல்கின்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu