பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜின்பிங் 5 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு..!

பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜின்பிங்  5 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு..!
X

இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் 

2019ம் ஆண்டு மாமல்லபுரத்தில் சந்தித்த பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று ரஷ்யாவில் மீண்டும் சந்தித்தனர்.

கடந்த 2019ம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்திற்கு வந்திருந்தார். இரண்டு நாள் சென்னையில் தங்கியிருந்த ஜி ஜின்பிங், பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். சென்னையில் சமரச பேச்சு நடத்திய பின்னர் நேபாளம் சென்ற சீன அதிபர், அந்த நாட்டை இந்தியாவிற்கு எதிராக துாண்டி விட்டுச் சென்றார்.

அடுத்து லாடாக்கில் சீன படைகள் ஊடுறுவ முயன்றன. அதனை இந்திய படைகள் தடுத்து நிறுத்தின. இருதரப்பும் பெரும் போருக்குத் தயாராகின. கிட்டத்தட்ட போர் தொடங்கும் சூழல் உருவாகியது. இந்தியா பின்வாங்காது என உறுதியாக தெரிந்த பின்னர் சீனா பி்ன்வாங்கியது.

அப்போது இருந்து இப்போது வரை இரு நாட்டு படைகளும் நேருக்கு நேர் லடாக், கல்வான், டோக்லாம் பகுதியில் எதிர்த்து நிற்கின்றன. கல்வானில் கடந்த 2020ம் ஆண்டு இரு நாட்டு படைகளும் மோதிக்கொண்டன. இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனாவின் தரப்பில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரியவருகிறது. ஆனால் அந்த சம்பவம் பற்றி சீனா தற்போது வரை வாய் திறக்கவில்லை.

அதன் பின்னர் சீன அதிபர் பலமுறை இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்தார். இந்தியா அசைந்து கொடுப்பதாக தெரியவி்ல்லை. என்ன நடந்தாலும் பரவாயில்லை எதிர்கொள்ள தயார். எல்லைப்பிரச்னையில் இந்திய உரிமைகளையும், நிலத்தையும் ஒரு துளி கூட விட்டுத்தர முடியாது என்ற நிலையில் இந்தியா உறுதியாக உள்ளது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம் உலக நாடுகளுக்கும், சீனாவிற்கும் தெளிவுபடுத்தினார்.

ஒட்டுமொத்த உலகமும் இந்தியா- சீனா போர் வெடிக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தன. ஆனால் உலக சூழல் மாறி, உக்ரைன்- ரஷ்யா போர் வெடித்தது. அடுத்த சில மாதங்களில் சூழல் மேலும் சிக்கலாகி, இஸ்ரேல்- பாலஸ்தீனம் போர், இஸ்ரேல்- லெபனான் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல்- ஈரான் பெரும் மோதலுக்கு தயாராகி வருகின்றன. இப்போதைய நிலையில் உலகில் 10க்கும் மேற்பட்ட நாடுகள் போரில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். அங்கு சீன அதிபரும் வருவதால், இருவரும் சந்திக்க ஏற்பாடுகள் நடந்தன. எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே மோடி- ஜி ஜின்பிங் பேச்சு வார்த்தை நடக்கும் என உறுதியாக இந்தியா பிடிவாதம் காட்டியது. அங்கு பிரதமர் மோடி சந்திக்காமல் புறக்கணித்தால், சீன அதிபரின் இமேஜ் உலக அளவில் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும்.

ஏற்கனவே இந்தியாவின் பிரதமர் மோடியின் புகழ் உலக அரங்கில் கொடி கட்டி பறக்கும் சூழலில் சீன அதிபரை மோடி சந்திக்காமல் புறக்கணித்தால், சீனாவில் நிலை அதோகதியாகி விடும். தவிர தற்போது மாறியுள்ள உலக சூழலில் இந்தியாவினை பகைத்துக் கொண்டால் சீனாவிற்கு பெரும் சிக்கல் வரும். எனவே இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்த சீனா இறங்கி வந்தது.

இந்திய- சீன அதிகாரிகள் இடையே நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர், இந்திய- சீன எல்லைகளில் படைகளை விலக்கிக் கொள்வது. 2019ம் ஆண்டு இருந்த அதே நிலைப்பாட்டிற்கு படைகளை கொண்டு வருவது. 2019ம் ஆண்டு இருந்தது போல் இரு நாட்டு படைகளும் எல்லையில் ரோந்து பணிகளை மேற்கொள்வது என முடிவானது. இதனால் இந்திய- சீன எல்லையில் பெரிய அளவில் டென்சன் குறைந்தது. அமைதி உருவாக தொடங்கியது.

இந்நிலையில், சுமூகமான சூழல் உருவானதால், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷ்யாவில் சந்தித்து பேசினர்.

அதன் பின்னர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இந்திய- சீன உறவுகள் உலகிற்கு மிகவும் முக்கியம். உலகில் அமைதி நிலவ இந்திய- சீன உறவு பெரிய அளவில் உதவும் என கூறியுள்ளார். இந்த விஷயம் ஒட்டு மொத்த உலகிலும் கவனிக்கும் செய்தியாகி விட்டது.

பிரதமர் மோடி இந்திய இறையாண்மையில் வைத்துள்ள உறுதியை ஒட்டுமொத்த உலகமும் புரிந்து கொண்டது. இந்தியாவை மிரட்டி பணிய வைப்பது இனி நடக்கவே நடக்காத காரியம் என்பது சீனா உட்பட ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் புரிந்து வி்ட்டது. உண்மையி்ல் பிரதமர் மோடியின் வெளிவுறவுக் கொள்ளை சூப்பர் பவர் இந்தியா உருவாக அடிப்படை காரணமாக அமைந்துள்ளது என பல்வேறு நாடுகளும் புகழ்ந்து வருகின்றன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!