/* */

உலகின் பணக்கார ஜோடி விவாகரத்து அறிவிப்பு

உலகின் பணக்கார தம்பதிகளாக 27 ஆண்டுகள் வாழ்ந்த பில்கேட்ஸ், மெலிண்டா ஜோடி விவகாரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

உலகின் பணக்கார ஜோடி விவாகரத்து அறிவிப்பு
X

பில் கேட்ஸ், மெலிண்டா 

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா, 27 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின்னர் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.

உலகிலேயே பணக்கார ஜோடிகளான இந்த தம்பதி விவகாரத்து முடிவை டிவிட்டரில் தெரியப்படுத்தியுள்ளனர். என்னதான் விவாகரத்து முடிவை அறிவித்திருந்தாலும் உலக அளவிலான சுகாதாரம், பாலின சமத்துவம், கல்வி போன்ற திட்டங்களுக்கு நிதியளிக்கும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படாது. அந்தப்பணிகள் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.


உலகின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கியவர் பில்கேட்ஸ். 65 வயதான அவர் 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகிக்கொண்டார். பில் கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம் உலகம் முழுவதும் தொண்டு செய்து வருகிறார். மெலிண்டா கேட்ஸ் 1987ம் ஆண்டு பில் கேட்ஸை சந்தித்தார். இருவரும் 1994ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மெலிண்டாவுக்கு 56 வயதாகிறது. பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா பெயரில் அறக்கட்டளை நிறுவி பல சேவைகளுக்காக நிதியளித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிந்துகொள்வதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமான வாழ்க்கை வாழ்வதற்கான உதவிகளை செய்துள்ளோம். இந்த பணியில் இனிமேலும் இணைந்து தொடர்வோம். ஆனாலும், எங்களது திருமண வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவு செய்துள்ளோம். எங்கள் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக இருப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை' என்று கூறியுள்ளனர்.

Updated On: 11 May 2021 2:07 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி