பண ஆசையால் பறிபோன உயிர்கள்
பைல் படம்
உலகில் இருவகையான வியாபாரிகள் உண்டு. கோடிகணக்கான சராசரி மற்றும் ஏழைமக்களிடம் இருந்து ஆளுக்கு ஒரு ரூபாய் லாபம் பார்த்தால் கூட கோடியில் அள்ளலாமென சிந்திக்கும் முதலாவது தரப்பு. பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஆசைகாட்டி அவர்களிடம் இருக்கும் பல்லாயிரம் கோடியில் சில ஆயிரம் கோடியினை உருவி எடுப்பது இரண்டாவது தரப்பு. இந்த இரண்டாம் ரகம் தான் இந்த வியாபாரத்துகாக பல தந்திர காரியமெல்லாம் செய்யும். ஆடம்பர கார், ஆடம்பர வீடு, ஆடம்பர விமானம் என எல்லாவற்றையும் செய்து காசுபார்க்கும், "நீ யார் தெரியுமா" எனும் அகங்காரத்தை தூண்டி காசை உருவி விடும் கும்பல் இது. இப்படிபட்ட கும்பல் பெரும் பணக்காரர்களுக்காக பல வியூகங்களை வகுக்கும்.
அப்படி இவர்களை குறி வைத்து தான் விண்வெளி பயணம். செவ்வாயில் வீடு, வியாழன் கிரகத்தில் கிரகப்ரவேசம் என எலன் மாஸ்க் உருவி கொண்டிருப்பது வேறு விஷயம். அப்படித்தான் ஆழ்கடல் சுற்றுலாவும் உண்டு. பல்லாயிரம் டாலர்களை கட்டினால் நீர்மூழ்கியில் ஏற்றி கடலடிக்கு கொண்டு காட்டுவார்கள். அப்படியான சுற்றுலாக்களில் கடலில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காணும் கடலடி உலாவும் உண்டு. இந்த கடலடி உலாவுக்கு சென்ற ஆறு பேர் கோடீஸ்வர கோஷ்டியினை கப்பலோடு காணவில்லை..அப்போது 3500 மீட்டர் ஆழத்தில் இருந்தனர். அவர்கள் வழி தவறினர். 3800 மீட்டர் தரையை நோக்கிச் சென்றுள்ளனர். பல நாள் தேடிப்பார்த்து விட்டு கடலுக்கு இவர்கள் சென்ற நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி விட்டது. இவர்கள் அத்தனை பேரும் உயிரிழந்து விட்டனர் என அறிவித்துள்ளனர்.
லண்டன் வாழ் பாகிஸ்தான் தொழிலதிபரின் 18 வயது மகன் உட்பட மொத்தம் ஆறு பேர் அந்த நீர்மூழ்கியில் இருந்தனர். இந்த கடல் 2 கிமீ ஆழம் கொண்டது. தரைமுழுக்க இருள், இன்னும் மலையும் சரிவும் கடலடியில் கொண்ட இடம், இங்கே ஒரு நீர்மூழ்கியினை தேடுவது சாதாரண விஷயம் அல்ல. அங்கிருந்து சிக்னலும் தொடர்புமில்லை. 96 மணிநேரமே அங்கு ஆக்ஸிஜன் தாங்கும் அதன்பின் சுவாசிக்க கப்பலில் ஆக்ஸிஜன் இருக்காது என்பதால் அது வெடித்து சிதறி ஆறு பேரும் உயிரிழந்து விட்டனர் என அறிவித்துள்ளனர். விஞ்ஞானம் வளர்ந்து விட்டதாக சொன்னாலும் இன்னும் அது பூர்த்தி ஆகவில்லை. ஆகவும் ஆகாது என்பது தான் நிஜம். குறைவுள்ள மனிதனால் உருவாக்கப்படும் எல்லாமே குறைவுள்ளதாகத் தான் அமையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu