அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்திய கமலா ஹாரிஸ்?
கமலா ஹாரிஸ்
நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ், டொனால்ட் ட்ரம்பை காட்டிலும் ஐந்து சதவீத வாக்குகள் அதிகம் பெறுவார் என தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் சக்தி வாய்ந்த நாடுகளில் முதன்மையான அமெரிக்காவை ஆட்சி செய்வதற்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. எந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் காண இருந்தனர். இதை எடுத்து தேர்தல் பிரச்சாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வழக்கமாக அமெரிக்காவில் தேர்தலின் போது வேட்பாளர்கள் தொலைக்காட்சியை நிகழ்ச்சிகளில் நேருக்கு நேர் விவாதங்கள் நடத்துவது வழக்கம்.
அதேபோல் ஜோ பைடன் மற்றும் டிரம்ப் ஆகியோர் செப்டம்பர் 10ஆம் தேதி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி நேருக்கு நேர் வாதிட ஒப்புக்கொண்டனர். ஆனால் கடந்த மாதம் ஜோ பைடன் மேடையில் தடுமாற்றத்தை சந்தித்த நிலையில், எதிர்ப்புகள் கிளம்பியதால் அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இது மட்டுமின்றி முன்னாள் அதிபர் பிரசார மேடையில் பேசிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவங்களை தொடர்ந்து செப்டம்பர் பத்தாம் தேதி நடைபெற இருந்த நேரடி விவாத நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. எனினும் பிரச்சார கூட்டங்களின் போது நேரடி விவாதத்துக்கு தயாரா என கமலஹாரிசும் ட்ரம்பும் ஒருவரை ஒருவர் சாடி பேசி வந்தனர்.
இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 10-ம் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி தனியார் தொலைக்காட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கமலாஹரிசும் ட்ரம்ப்பும் நேருக்கு நேர் விவாதம் நடத்த உள்ள முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இது போன்ற நேரடி விவாதங்களின் போது வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறியும் மாகாண வாரியாக நடைபெற்ற நடைபெறவுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதம் மேற்கொள்வார்கள்.
தற்போதுள்ள சூழலில் அமெரிக்க தேர்தலை உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கி வரும் நிலையில் சக்தி மிகுந்த நாட்டின் சக்தி வாய்ந்த வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் ஆகியோர் நேருக்கு நேர் விவாதம் நடைபெறும் நிகழ்ச்சி நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை ஏராளமான தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது நடத்தி வெளியிடுவது வழக்கம்.
அதேபோல் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிமுகம் காண்பார் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஐபிஎஸ் ஓ எஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்பை விட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 5 சதவீத வாக்குகள் அதிகம் பெறுவார் என கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் இது மாறுபட்டதாக காணப்படுகிறது. அமெரிக்காவில் 16 கோடி தகுதி பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அமெரிக்காவை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யும் நபரை தேர்வு செய்ய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் ஜனநாயக கட்சியும் இழந்த ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் குடியரசு கட்சியும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu