அம்மாடியோவ்.. அரசையே ஏமாற்றிய கில்லாடி: வேலைக்கே போகாமல் ரூ. 4.8 கோடி சம்பளம்
வேலைக்கே போகாமல் சம்பளம் வாங்கியவர் பணிக்கு சேர்ந்த இத்தாலி ஆஸ்பத்திரி.
இத்தாலியில் உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 15 ஆண்டுகளாக ஊழியர் வேலைக்கு வராமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், அவர் சம்பளம் மட்டும் கரெக்டாக வாங்கி இருக்கிறார். 15 வருசத்துக்கு நம்ம இந்திய கணக்குப்படி ரூ.4.8 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
நம்ம ஊரில் வேலையே செய்யாமல் பல பணியாளர்கள் (நான் நல்ல பணியாளர்களை சொல்லவில்லை) ஊதியம் வாங்கி கொண்டிருப்பது நமக்கு நல்லாவே தெரியும். மாதந்தோறும் அரசாங்க ஊதியம் வாங்கிக்கொண்டு, செய்யும் வேலைக்கு பொதுமக்களிடமும் பணம் வாங்கும் நல்லவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம், பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், வேலைக்கே போகாமல் ஜெக ஜால கில்லாடி ஒருவர் 15 ஆண்டுகள் சம்பளம் மட்டும் வாங்கி இருக்கிறார். அவர் இந்தியாவில் இல்லை. இத்தாலியில் இருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ரகமாக இருக்கிறார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம்.
இத்தாலி நாட்டின் கடன்சாரோ நகரத்தில் சியாசியோ அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2005ம் ஆண்டில் பணிக்கு சேர்ந்திருக்கிறார், அந்த நல்ல அரசு ஊழியர். ஆனால், ஒரு நாள் கூட வேலைக்கு செல்லவில்லை. அதுதான் ஆச்சர்யமே.
அந்த நல்லவர் வேலைக்கு போகாத போதும், கடந்த 15 ஆண்டுகளாக சுமார் 5.38 லட்சம் யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.4.8 கோடி) சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சியாசியோ அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் 6 மேனேஜர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஊழியர் வேலைக்கு வராமல் இருந்ததை ஏன் கவனிக்கவில்லை? சம்பளம் மட்டும் அவருக்கு எப்படி வழங்கப்பட்டது என்று துருவி துருவி விசாரணை நடக்குதாம்
வேலைக்கே வராமல் சம்பளம் வாங்கினால் சும்மா விட்டுடுமா அரசாங்கம்? பணிக்கு வராமல் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் மீது மோசடி, ஏமாற்றுதல் மற்றும் அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று இத்தாலிய செய்தி நிறுவனமான அன்சா கூறுகிறது.
வேலைக்கு வராமல் சம்பளம் வாங்கியவர், அவரது மேனேஜரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மிரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இருந்த மேனேஜர் ரிடயர்ட் ஆகி போனதும் அவருக்குப்பின் பதவிக்கு வந்தவர்களின் கவனத்துக்கோ, ஹெச்.ஆர் டீமுக்கோ வேலைக்கே வராமல் சம்பளம் வாங்குபவரின் தகவல் செல்லவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன. விசாரணை ஜரூரா நடக்குதாம். ஐயா ஜெயிலுக்கு போறது உறுதி ஆகிடுமாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu