ஈரானை தாக்கிய இஸ்ரேலின் பெண் விமானப்படை வீரர்கள்..!
இஸ்ரேல் நாட்டின் பெண் விமானப்படை வீராங்கனைகள்
இஸ்ரேலில் இருந்து ஈரான் 2000ம் கி.மீ., துாரத்திற்கு அப்பால் உள்ளது. இதனால் தரைவழிப்போர் மூண்டு இஸ்ரேல்- ஈரான் ராணுவங்கள் மோதிக் கொள்ளும் வாய்ப்புகள் இல்லை. அதேபோல் கடற்படைகளும் மோதிக்கொள்ள முடியாத அளவு புவியியல் சூழல் உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே உக்கிரமான போர் மூண்டாலும், இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் ஏவுகணைகள், விமானங்கள் மூலம் மட்டுமே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முடியும். சில நாட்களுக்கு முன்னர் ஈரான் 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது தாக்கியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், தனது விமானப்படையினை அனுப்பி ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
கிட்டத்தட்ட ஈரானை தாக்க இஸ்ரேல் விமானங்கள் குறைந்தபட்சம் 2500 கி.மீ., துாரமாவது பறக்க வேண்டும். பின்னர் அதே தொலைவு திரும்ப வேண்டும். இவ்வளவு துாரத்தை கடந்து ஈரானை துல்லியமாக தாக்கியது இஸ்ரேலின் விமானப்படை பிரிவு. அதுவும் பெண்களால் மட்டுமே இயக்கப்பட்ட விமானப்படை பிரிவு என்பது தான் மிகுந்த ஆச்சர்யம்.
‘‘ஈரானை இரண்டாயிரம் மைல் சென்று தாக்க பெண் விமானிகளை அதி நவீன எப் 35 விமானத்தில் அனுப்பினோம் என தகவல்களை, படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரேலிய விமானப்படை. இஸ்ரேலில் ஆண்களும், பெண்களும் சரிக்கு சமம். ராணுவ பயிற்சி இருவருக்கும் கட்டாயம் எனும் நடைமுறை உள்ளது. இதனால் இஸ்ரேலிய பெண்கள் முழுமையான ராணுவ பயிற்சி பெற்றுள்ளனர். அப்படி வழங்கப்பட்ட இந்த பயிற்சி நெருக்கடி மிகுந்த இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு கை கொடுத்துள்ளது.
இதனால் உலகில் நவீன போர் விமானத்தில் பறந்து எதிரிகளின் நீண்ட தூர இலக்கை தாக்கி அழித்து பத்திரமாக திரும்பிய முதல் பெண்கள் பிரிவு எனும் பெருமையினை இஸ்ரேல் விமானப்படை தட்டிச் செல்கின்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu