துருக்கி விமானப்படையை நிர்மூலம் ஆக்கிய இஸ்ரேலின் மொசாத்..!

துருக்கி விமானப்படையை நிர்மூலம்  ஆக்கிய இஸ்ரேலின் மொசாத்..!
X

மொசாத் உளவுத்துறை 

மொசாத் என்ற உலகின் மிகச்சிறந்த இஸ்ரேலிய உளவு அமைப்பு பற்றி பார்க்கலாம்.

இஸ்ரேல் தனது எதிரிகளைக் கையாளும் விதமே தனி தான். ஹிஸ்பெல்லா, ஹமாஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்களை அவர்கள் எங்கு பாதாள அறையில் பதுங்கி இருந்தாலும் விடுவதில்லை.

பதுங்குமிடம் எங்கிருந்தாலும் தனது உளவுத்துறை மொசாத் மூலம் கண்டு பிடித்து இஸ்ரேல் அடிக்கிறது. அவர்களின் வெற்றிக்குக் காரணம் மொசாத் என்ற அவர்களின் உலகின் மிகச்சிறந்த உளவு ஸ்தாபனமே.

மொசாத் அமைப்பினால் முடியாத விஷயம் உலகில் ஏதுமில்லை என்ற அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் பூராவும் பிரமிப்பூட்டுபவை. 1973 ஆம் ஆண்டு எகிப்துடன் போர் புரிய வேண்டிய கட்டாயம் இஸ்ரேலுக்கு இருந்தது. எகிப்துக்கு ரஷ்ய ஆதரவு. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு. இந்தியா நடுநிலை வகித்தது.

தவிர இஸ்ரேலை சுற்றி இருந்த அரபு தேசங்கள் ஜோர்டான், சிரியா போன்ற பெரிய தேசங்கள் எகிப்தின் பக்கம் இருந்தன. இஸ்ரேல் அஞ்சிய ஒரு விஷயம் எகிப்திய பிரமாண்ட விமானப்படை மட்டுமே. மொத்தம் 240 மிக் 21 என்ற நவீன போர் விமானங்களை எகிப்துக்கு வழங்கி இருந்தது ரஷ்யா என்ற அந்நாள் சோவியத்யூனியன் வல்லரசு.

இந்த மிக்21 விமானங்கள் அப்போதைய அமெரிக்க போர் விமானங்களை விட சிறப்பானவை. விரைவாக மேல் எழும்பி எதிரி விமானங்களை இடை மறித்து தாக்க வல்லவை. போர் விமானத்தின் ஒரு முக்கிய அம்சம் அதன் மேல் எழும் திறன் தான்.

இத்தகைய மிக் 21 விமானத்தை வைத்து தான் நமது விமானி அபிநந்தன் அமெரிக்காவின் சிறப்பு மிக்க எஃப் 16 போர் விமானத்தை சமீபத்தில் வீழ்த்திக் காண்பித்தார். 1978 மாடலான அமெரிக்க எஃப்16 இன்றளவும் ஒரு சிறப்பான போர் விமானம். நம்பகமான ஒற்றை இஞ்சின் கொண்டது. சரி எகிப்திய மிக்21விவகாரத்துக்கு வருவோம். 240 மிக் 21 விமானங்கள் ஒரு ஐம்பதும் மேல் எழும்பி தாக்கினாலே இஸ்ரேல் மிகப் பெரிய சேதத்தை சந்திக்கும் என்பது தெளிவு. அப்போது இஸ்ரேலிடம் ஏவுகணை , விமானத் தடுப்பு சமாச்சாரம் எதுவும் கிடையாது.

என்ன செய்வது? கூப்பிடப்பா மொசாத்தை என்று அப்போதைய இஸ்ரேல் பிரதமர் கோல்டாமெய்ர் உத்தரவிட்டார். உடனடியாக களத்தில் இறங்கியது மொசாத் உளவுத்துறை. பல தகவல்கள் எகிப்திய விமானப்படை பற்றி திரட்டப்பட்டன.

அவற்றை ரூம் போட்டு அலசி ஆராய்ந்தது மொசாத். ஒரு சாதாரண தகவல் கிட்டியது. அதை மொசாத் சீரியஸ் ஆக எடுத்துக் கொண்டது. எகிப்திய போர் விமானிகள் அதிகாலை எழும் பழக்கம் அற்றவர்கள். சாவகாசமாக டிபன் , டீ, டிகிரி காபி, ஜிகிர்தண்டா குடித்து விட்டு எட்டு மணிக்குத் தான் விமானங்களை இயக்குவார்கள். இது தான் அந்தத் தகவல். தகவலை உறுதிப் படுத்திக்கொண்ட மொசாத் இஸ்ரேலிய விமானப்படைக்கு முகூர்த்த நேரத்தை குறித்துக் கொடுத்தது.

அதிகாலை ஆறுமணிக்கு எகிப்திய விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களில் குண்டு வீச உத்தரவிட்டது இஸ்ரேல். எல்லாம் இஸ்ரேலிய மொசாத் அமைப்பான இஸ்ரேல் கொடுத்த ஐடியா. மிக் விமானங்கள் மேலே எழும்பினால் தானே ஆபத்து. எழும்பும் முன் கொத்து பரோட்டா போட்டு விட்டால்...?!

ஷெல்டர் (மறைவிடம்)களுக்குள் ஒளிந்து பாதுகாப்பாக இருந்த எகிப்திய மிக் 21 விமானங்கள் மீது சரமாரி குண்டு வீச்சு நடத்தியது இஸ்ரேல். மொசாத்தின் அதிர்ஷ்டம் அத்தனை விமானங்களும் ஒரே இடத்தில் வந்து மாட்டிக் கொண்டு இஸ்ரேல் படைகளால் சாம்பலாக்கப்பட்டன. இதனால் காயாலான் கடைகளுக்கு நல்ல வியாயாரம். இது தான் அவர்களின் புத்திசாலித்தனம்.

ஒரு சாதாரணத் தகவலை வைத்து சல்லி சல்லியாக எகிப்திய விமானப்படையை அழித்தது இஸ்ரேல். எகிப்தின் 240 விமானங்களும் காலியாகின. எகிப்திய அதிபர் நாசர் நிலை குலைந்தார். இதே எகிப்து பின்னாளில் இஸ்ரேலின் நட்பு நாடாகிப் போனது தனி சமாச்சாரம்.

இப்படி அவர்களைப் பற்றி எழுத பல விஷயங்கள் உண்டு. அடிக்கு அடி என்ற இஸ்ரேலின் கொள்கையை தான் இப்போது இந்தியாவும் தீவிரமாக கடைபிடித்து வருகிறது. தவிர இஸ்ரேல் உளவுத்துறையும், இந்திய உளவுத்துறையும் மிகவும் நட்புடனும், பாசத்துடனும், ஒருவருக்கு ஒருவர் உதவி என்ற நிலையில் இருப்பதால், சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவை பார்த்து அச்சத்துடன் பின்வாங்கி இருக்கின்றன.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!