/* */

ஹமாஸ், ஹிஸ்புல்லா இரண்டையும் ஒரே நேரத்தில் சந்திக்கும் இஸ்ரேல்

ஹமாஸ், ஹிஸ்புல்லா இரு அமைப்பினருடனும் ஒரே நேரத்தில் இஸ்ரேல் போரிட்டு வருகிறது.

HIGHLIGHTS

ஹமாஸ், ஹிஸ்புல்லா இரண்டையும்  ஒரே நேரத்தில் சந்திக்கும் இஸ்ரேல்
X

பைல் படம்

ஹமாஸ், ஹிஸ்புல்லா இரு அமைப்பினருடனும் ஒரே நேரத்தில் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. காசாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கி உள்ள நிலையில், லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா படையினர் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் இப்போர் அண்டை நாடுகளிலும் பரவும் சூழலில், தங்களை சோதிக்க நினைத்தால் கடும் விபரீதங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என ஈரான் நாட்டிற்கும், ஹிஸ்புல்லா படைக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் படையினர், கடந்த 7ம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் வெடித்துள்ளது.

காசாவின் மூலை முடுக்கெங்கிலும் இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை பொழிகிறது. முப்படைகளையும் கொண்டு காசா மீது இடைவிடாத தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் காசாவிற்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்துவதற்காக அப்பகுதியின் வடக்கில் வசிக்கும் 11 லட்சம் பாலஸ்தீன மக்களும் தெற்கு நோக்கி வெளியேற இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்தது. இரண்டுக்கும் மேற்பட்ட முறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், 11வது நாளாக இன்றும் போர் நீடித்து வருகிறது. மக்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு முடிவடைந்த நிலையில், காசா எல்லையின் வேலியை ஒட்டி இஸ்ரேல் பீரங்கிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனாலும், இன்னும் மக்கள் பலர் வடக்கு பகுதியில் சிக்கியிருப்பதாகவும் அவர்களை வெளியேற விடாமல் ஹமாஸ் படையினர் தடுத்து நிறுத்தி வைத்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டி உள்ளது. இதுவரை 10 லட்சம் பேர் வரையிலும் தெற்கு பகுதியில் சென்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. இதற்கிடையே, ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் உத்தரவில் செயல்படும் ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேலின் அண்டை நாடான லெபனான் எல்லையில் தாக்குதலை தீவிரப்படுத்தினர். சுமார் 20 ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா படையினர், எல்லையில் இஸ்ரேல் ராணுவம் வைத்துள்ள உளவு கண்காணிப்பு கேமராக்களை அழித்தனர்.

இதனால் எல்லையை ஒட்டிய 2 கிமீ தொலைவில் உள்ள 28 கிராமப்புறங்களில் இருந்து மக்களை இஸ்ரேல் ராணுவம் அப்புறப்படுத்தியது. காசவிற்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தால், பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஹிஸ்புல்லா அமைப்பு தயாராக இருக்கிறது. இதனால் இப்போர் அண்டை நாடுகளிலும் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நேற்று தொடங்கி வைத்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘’75 ஆண்டுகள் கடந்தும் கூட சுதந்திரப் போர் இன்னும் முடியவில்லை.

இப்போரில் நாங்கள் வெல்வோம். இது வெளிச்சத்திற்கும் இருட்டிற்கும் நடக்கின்ற போர். மனிதநேயத்திற்கும், மிருகத்தனத்திற்கும் இடையேயான போர். இந்த போரில் நாஜிக்களுக்கு இணையான ஹமாசை முழுமையாக அழிக்க உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும். இந்த விஷயத்தில் ஒற்றுமையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது எங்களுக்கான போர் அல்ல. உங்களின் போரின் கூட. நாங்கள் காயப்பட்டுள்ளோம்.

ஹமாசின் ஊடுவல் மூலம் எங்கள் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். எனவே எங்களை சீண்டிப் பார்க்க நினைக்க வேண்டாம். அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். எங்களை சோதிக்க நினைத்தால் அதற்கான விளைவுகள் இதுவரை இல்லாத அளவுக்கு மிக கடுமையாக இருக்கும்’’ என ஈரான், ஹிஸ்புல்லா படைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவை இஸ்ரேல் ராணுவம் சல்லி சல்லியாக துளைத்த நிலையில், ஹமாஸ் படையினர் நேற்றும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஜெருசலேமில் சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்ட நிலையில், நாடாளுமன்ற கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு எம்பிக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேலில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. காசா மீதான போரை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், மேலும் பல இடங்களில் தாக்குதல் விரிவடையும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிரதுல்லாஹின் நேற்று மீண்டும் எச்சரித்துள்ளார்.

Updated On: 21 Oct 2023 4:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  5. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  9. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  10. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!