Israel Is At War With Hamas-தாக்குதல் தொடங்கியது இஸ்ரேல்? பற்றி எரிகிறது பாலஸ்தீனம்..!

Israel Is At War With Hamas-தாக்குதல் தொடங்கியது இஸ்ரேல்? பற்றி எரிகிறது பாலஸ்தீனம்..!
X

Israel Is At War With Hamas-இஸ்ரேல் வான் தாக்குதலில் காசாவில் வீடுகளை இழந்த சிறுவர்கள் இடிந்து கிடக்கும் தங்கள் வீடுகளை கவலையோடு பார்க்கிறார்கள்.

ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியை இஸ்ரேல் தொடங்கி விட்டது.

Israel Started Attacking On palestine,Israel Is At War With Hamas,Israel Palestine War, Israel-Palestine Conflict, Israel Palestine War News In Tamil, Israel-Palestine Latest News

கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினரும், லிபியாவின் ஹபிபுல்லா இயக்கத்தினரும் இணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். இஸ்ரேல் உடனடியாக பதிலடி தரா விட்டாலும், கடந்த இரண்டு நாட்களாக பதிலடிக்கு தயாராகி வந்தது. இஸ்ரேலின் மேற்கு கரையிலும், காசா எல்லையிலும் 3 லட்சத்திற்கும் அதிகமான இஸ்ரேலிய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மிக, மிக நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.


குறிப்பாக அமெரிக்காவில் இருந்து மிக நவீன ஆயுதங்கள் இஸ்ரேலில் குவிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் செயற்கை கோள்கள் ஹமாஸ் இயக்கத்தினரின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணித்து இஸ்ரேலுக்கு தகவல்களை வழங்கி வருகிறது. இதனைத் தொடந்து நேற்று முதல் இஸ்ரேலில் அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன.

Israel Started Attacking On palestine

இஸ்ரேலில் போர்க்கால நடவடிக்கை தொடக்கம்

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் அனைத்து வீடுகளிலும் வசிக்கும் ஆண்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி உள்ளது. இதனால் அங்கு ராணுவத்திற்கு ஆள் தட்டுப்பாடு ஏற்படாது. தவிர அங்கு அனைத்து வீடுகளிலும் பதுங்கு குழிகள் உள்ளன. போர்க்காலங்களில் எப்படி வாழ வேண்டும் என இஸ்ரேலியர்களுக்கு தெரியும். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இந்த மூன்று நாட்களுக்குள் பெரிய அதகளம் நடக்கப்போகிறது என்பதை இஸ்ரேல் உலகிற்கு சொல்லாமல், சொல்லியுள்ளது.


தாக்குதல் தொடங்கியது

இதற்கிடையில் எல்லையில் உள்ள மூன்று லட்சம் வீரர்களில் ஒரு லட்சம் பேர் பாலஸ்தீனத்திற்குள் புகுந்துள்ளனர். காசா மீது விமானப்படை தாக்குதலும், தரைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் கொடுத்த எச்சரிக்கையால், காசாவை விட்டு இரண்டு லட்சம் முஸ்லீம்கள் வெளியேறி துருக்கிக்கு சென்று விட்டனர். தற்போது காசாவிற்குள் செல்லும் அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன.


Israel Started Attacking On palestine

துருக்கிக்கு எச்சரிக்கை

காசாவிற்கு ஏதாவது நிவாரண பொருட்கள் அனுப்பினால், அந்த லாரிகளை தாக்கி அழிப்போம் என துருக்கியை இஸ்ரேல் கடுமையாக எச்சரித்துள்ளது. காசாவிற்குள் காயமடைந்து சிக்கியிருக்கும் மக்களை பாதுகாக்க மருந்து பொருட்களை கொண்டு செல்ல வழித்தடம் அமைத்து தருமாறு ஐ.நா., மனித உரிமை சபை கேட்டதையும் இஸ்ரேல் கண்டுகொள்ளவில்லை.

ஆக மொத்தம் இஸ்ரேல் ருத்ரதாண்டவத்தை தொடங்கி விட்டது. விமானத்தாக்குதல் மட்டும் 4 ஆயிரம் முறைக்கு மேல் நடத்தப்பட்டுள்ளன. தரைப்படை தாக்குதலும் தொடர்கிறது. போர் நிலவரம் பற்றிய முழு விவரங்கள் கிடைக்காவிட்டாலும், இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் மற்றும் முக்கிய தளபதி உட்பட 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால் உண்மையில் பலி எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.


Israel Started Attacking On palestine

ஹமாஸ் பதில் தாக்குதல்

இதற்கிடையில் இஸ்ரேலின் இந்த தாக்குதலை எதிர்பார்த்து காத்திருந்தது போல், ஹமாஸ் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இஸ்ரேலுடன் நீண்ட கால போருக்கும் நாங்கள் தயார் என அறிவித்துள்ளனர். ஒரு புறம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களையும், உதவிகளையும் வழங்கி வருகிறது. மறுபுறம் ஹமாஸ் அமைப்பினருக்கு பல அரபுநாடுகளும், ஈரான் உள்ளிட்ட நாடுகள் உதவிகளை வழங்கி வருகிறது.


ஆக மொத்தத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய கொடூர தாக்குதலை ஒட்டுமொத்த உலகமும் கண்டித்தாலும் இரண்டு தரப்பினரும் துாண்டி விட்டு, உதவிகள் வழங்கி, போதிய அளவு நிதி , ஆயுதங்கள் பல நாடுகளால் வழங்கப்பட்டு வருவதால், பாலஸ்தீனம் மொத்தத்தில் பற்றி எரிந்து கொண்டுள்ளது. இனி நாளுக்கு நாள் கூட இல்லை... மணிக்கு மணி கூட இல்லை... நிமிடத்திற்கு நிமிடம் போரின் உக்கிரம் அதிகரிக்கும். உயிரிழப்புகள் பல லட்சத்தை தாண்டும் என உலக நாடுகளின் பல்வேறு பிரிவு தலைவர்கள் கடும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!