ஜாபா துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கியது ஏன்..? : இஸ்ரேல் விளக்கம்..!

ஜாபா துறைமுகத்தை இந்தியாவிற்கு  வழங்கியது ஏன்..? : இஸ்ரேல் விளக்கம்..!
X

ஜாஃபா துறைமுகம் (கோப்பு படம்)

செங்கடலின் முக்கியமான துறைமுகம் இஸ்ரேலின் ஜாபா. சூயஸ் கால்வாயினை அண்மித்து நிற்கும் இந்த இடம் மிக மிக முக்கியமானது.

ஜாபா துறைமுகத்தை பெரியநாட்டின் மிக பெரிய கம்பெனியிடம் நிர்மானம் செய்ய ஒப்படைக்கும் அவசியம் இஸ்ரேலுக்கு வந்தது. இஸ்ரேல் மகா சக்திவாய்ந்த நாடு என்றாலும் இம்மாதிரி பெரும் கம்பெனிகள் அவர்கள் நாட்டில் இல்லை. ஐரோப்பிய கம்பெனிகளை அழைத்தால் செலவு மிக அதிகம் இன்னும் பல சிக்கலும் உண்டு.

உலகெல்லாம் வளைத்து போடும் சீனா இங்கும் கால்பதிக்க துடித்தது. மிக மிக குறைந்த விலையில் தனக்கு துறைமுகம் வேண்டும் என கோரிற்று. காரணம் துறைமுகம் தன் கட்டுபாட்டில் வந்தால் சீனா தனக்கு அனுகூலமான பல விஷயங்களை செய்ய முடியும். இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிலமையினை மிக சரியாக கையாண்டார். சீனாவினை முழுதும் பகைக்காமல் வேறொரு இடத்தில் சிறிய வேலை கொடுத்து திருப்பி விட்ட அவர் ஜாபா துறைமுகத்தை அமெரிக்க அனுமதியுடன் இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கே கொடுத்து விட்டார்.

உலகினை அதிர வைக்கும் விஷயம் இது. இதுபற்றி பேசிய பெஞ்சமின் நேதன்யாகு, பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் இந்த துறைமுகத்தை துருக்கி சுல்தானிடம் இருந்து இந்திய படைகள் மீட்டுக்கொடுத்தது. இப்பொழுது அதே துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுப்பதில் நாங்கள் மகிழ்கின்றோம், இந்தியா எம் நட்பு நாடு என மோடியினை கைகாட்டி பேசியிருக்கின்றார்.

உலக அரங்கில் இந்திய நிறுவனம் இஸ்ரேல் துறைமுகத்தை பெற்றிருப்பது மாபெரும் வெற்றியாக கருதப்படுகின்றது. சமீபத்தில் ஜார்ஜ் சோரஸ் எழுப்பிய சர்ச்சையெல்லாம் அதானி கடந்து விட்டார். இந்தியா அந்த சவாலை எளிதாக தாண்டிவிட்டது என ஆரவாரம் ஒலிக்கின்றது. அதானி குழும பங்கு மதிப்பு மறுபடி எழுகின்றது.

மிக பெரிய அக்னிபரீட்சையில் மோடி அரசும் அதானியும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். இஸ்ரேலிய அங்கீகாரம் என்பது சாதாரணம் இல்லை எனும் வகையில் அதானி உலகின் முழு நம்பிக்கையும் பெற்று விட்டார்.

அதே நேரம் அமெரிக்கா தன் அதிநவீன ரீப்பர் விமானங்கள், மற்றும் 5ம் தலைமுறை ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு விற்க முடிவு செய்துள்ளது. உலகில் அமெரிக்கா இவ்வகை விமானங்களை விற்கபோகும் முதல் நாடு இந்தியா தான். ஆக ஜார்ஜ் சோரஸ் கோஷ்டிகளின் ஆட்டம் மிக எளிதாக முடித்து வைக்கபட்டிருக்கின்றது.

ஹின்டன் பர்க், ஜார்ஜ் சோரஸ் சொன்னதெல்லாம் பொய் என இஸ்ரேல் பிரதமரும், அமெரிக்க அரசும் உலகுக்கு மவுனமாக சொல்லி மோடியின் கரங்களை பிடித்து உயர்த்தும் நேரமிது என அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!