Israel Hamas War Latest Updates-காசா மக்கள் வெளியேற 6 மணிநேர கெடு..! இஸ்ரேல் அறிவிப்பு..!

Israel Hamas War Latest Updates-காசா மக்கள் வெளியேற 6 மணிநேர கெடு..! இஸ்ரேல் அறிவிப்பு..!
X

Israel Hamas War Latest Updates-போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதி.

காசா மருத்துவமனையில் பிணவறை நிரம்பி வழிவதால் நகரின் ஐஸ்க்ரீம் வாகனங்கள் தற்காலிக பிணவறைகளாக பயன்படுத்தப்படுகிறது.

Israel Hamas War Latest Updates, Israel Hamas War Today News, Israel-Hamas War, Israel Hamas War 2023, Israel vs Hamas War, Israel Hamas War Live, Israel Hamas War News, Israel Hamas War Live Updates Today, Israel Hamas War Latest in Tamil

காஸாவின் தெற்கு பகுதியில் இருந்து வெளியேற இஸ்ரேலின் இராணுவம் காஸான்களுக்கு ஆறு மணி நேர கால அவகாசம் அளித்துள்ளது . இருப்பினும் காசாவில் மின்சாரம் மற்றும் இணையத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் இதற்கு மத்தியில் இஸ்ரேலின் இந்த செய்தி எவ்வளவு பரவலாகப் பெறப்பட்டது என்பதற்கான விளக்கங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

Israel Hamas War Latest Updates

அக்டோபர் 7 பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தனது பதிலடித் தாக்குதலைத் தீவிரப்படுத்துவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில், வடக்கு காசாவில் வசிக்கும் 1.1 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு நாளுக்குப் பிறகு 1,300பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற அச்சம் காஸாவில் இருந்து பாதுகாப்பாக வெளியேறவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துள்ளது.

இஸ்ரேலின் இந்த வெளியேற்ற உத்தரவால் காசாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களை வெள்ளிக்கிழமை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தூண்டியுள்ளது என்று ஐநாவின் மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது.

Israel Hamas War Latest Updates


பட்டினியால் உயிரிழக்கும் அபாயம்

காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியால் மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஐநாவின் மனிதாபிமான அலுவலக எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலமாக காஸாவில் நிலவும் இக்கட்டான நிலையினை ஆழமாக உணரமுடிகிறது. காசாவில் குறைந்தது 1,900 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய நிலவரப்படி காசாவில் உள்ள ஒரு மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. மேலும் மருத்துவமனை பிணவறைகளும் நிரம்பியுள்ளதால் இறந்த உடல்களை பாதுகாப்பதற்கு துணையாக உள்ளூர் தொழிற்சாலைகளில் இருந்து ஐஸ்கிரீம் டிரக்குகல் தற்காலிக பிணவறைகளாகப் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

Israel Hamas War Latest Updates

அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் தடயவியல் நோயியல் நிபுணரான யாசர் கதாப், இன்று (சனிக்கிழமை) CNN க்கு அனுப்பிய வீடியோ செய்தியில், Deir al Balah இல் உள்ள தியாகிகள் மருத்துவமனையில் அதிகரித்து வரும் இறந்தவர்களின் எண்ணிக்கையால் இடமளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சில உடல்கள் தேடி சேகரிக்கப்படுவதற்கு முன்பு பல மணிநேரம் கிடந்தவையாக உள்ளன. அவைகளும் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக கதாப் கூறினார்.

தற்போது நமக்கு தேவை உதவி மட்டுமே. காசா நெருக்கடியில் இருக்கிறது. அதை வலியுறுத்துவதற்காகவே இந்த தகவல் பரிமாறப்படுவதாக தடயவியல் நோயியல் நிபுணர் வலியுறுத்தினார்.

Israel Hamas War Latest Updates

சவக்கிடங்கு குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் "இறந்த உடல்களைக் கையாள்வதற்கான சவப்பெட்டிகள் மற்றும் உபகரணங்களின்" தேவையைக் குறிப்பிட்டு, "காசாவிற்கு நிவாரண உதவிகள் உடனடியாகத் தேவை," என்று கதாப் கூறினார்.

கரையோரப்பகுதிகள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் ஹமாஸ் மீது இஸ்ரேல் தனது போரை அறிவித்ததிலிருந்து கடந்த ஒரு வாரமாக காசாவைத் தொடர்ந்து தாக்கியதில் இருந்து வன்முறை அதிகரித்துள்ளது.

பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை காலை புதுப்பித்தலின் படி, இறப்பு எண்ணிக்கை 53 ஆக உயர்ந்தது, அதே நேரத்தில் 1,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெரிகோவில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் 27 வயது பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் ஒரு தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர் ஜெரிகோ அரசு மருத்துவமனைக்கு தலையில் குண்டு காயத்துடன் வந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அங்கு வன்முறையின் பின்னணி என்ன?

சனிக்கிழமை ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து இராணுவத்தின் கட்டாய மூடலுக்கு மத்தியில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பல பகுதிகளில் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய இராணுவப் படைகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

இந்த மூடலில் இஸ்ரேலிய இராணுவத்தால் பல்வேறு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் மற்றும் சாலைத் தடைகளும் அடங்கும் . மேலும் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலுக்கு இடையே பாலஸ்தீனியர்களின் நடமாட்டத்தை இந்த தடைகள் கட்டுப்படுத்துகிறது என்று கடந்த 11ம் தேதி CNN உடன் பேசிய பல பாலஸ்தீனிய குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!