Israel Hamas War 2023-அகண்ட இஸ்ரேலும் ஆவேச பாலஸ்தீனமும்..!

Israel Hamas War 2023-அகண்ட இஸ்ரேலும் ஆவேச பாலஸ்தீனமும்..!
X

அகதிகளாக வெளியேறி வரும் பாலஸ்தீன மக்கள்.


இஸ்ரேல்-பாலஸ்தீன போரை நிறுத்துவதற்கு ஐநா சில முன்னெடுப்புகளை செய்யவேண்டும். உலக நாடுகள் அதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

Israel Hamas War Today News, Israel-Hamas War, Israel Hamas War 2023, Israel vs Hamas War, Israel Hamas War Live, Israel Hamas War News, Israel Hamas War Live Updates Today, Israel Hamas War Latest in Tamil, Israel Hamas War Latest Updates

செப்டம்பர் 22, 2023 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் அந்த நபர் பேசிக் கொண்டிருந்தார். திடீரென ஒரு வரைபடத்தை எடுத்து அவையோரிடம் காட்டி, இனி இதுதான் ‘புதிய மத்திய கிழக்குப் பிரதேசம்’ (The New Middle East) என்று கூறினார். பலரும் அந்த வரைபடத்தை உற்று நோக்கினார்கள்.

அதில் பாலஸ்தீனம் என்ற ஒரு நாடே இல்லாமல் செய்யப்பட்டிருந்தது. அந்த வரைபடத்தை ‘தான் செய்து கொண்டிருப்பது என்ன என்பதை உணர்ந்தே வெளியிட்டவர் வேறு யாருமல்ல, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு.

56 சதவீதமும் 78 சதவீதமும்:

1947இல் யூத மக்களுக்கு சொந்தமாக ஒரு நாடு வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு பாலஸ்தீனத்தின் 56 சத வீத நிலப்பகுதியை பிரித்து அவர்களை குடியேற்றம் செய்ய வைத்து, இஸ்ரேல் எனப் பெயரிடப்பட்டது. ஆனால் பாலஸ்தீனத்தை பிரித்து சரிபாதிக்கும் அதிகமான நிலப்பகுதியை வேறொரு நாடாக மாற்றுவதை அன்றைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கவில்லை.

Israel Hamas War 2023

எனினும் இஸ்ரேல் என்ற நாடு உருவாகி விட்ட பின்னர் 1950ல் தான் இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது என்பது தனி வரலாறு. உருவானது முதலே இஸ்ரேலின் ஆட்சியாளர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கி பாலஸ்தீன மக்களை அழித்தொழிக்கும் இனவெறி கொண்டவர்களாக செயல் பட்டார்கள்.

1947-48இல் பாலஸ்தீனத்தின் மீது அதிபயங்கரமான தாக்குதல் சம்பவங்களை இஸ்ரேல் அரங்கேற்றியது. பாலஸ்தீனத்தின் ஐநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களை இஸ்ரேல் ராணுவம் அழித்தொழித்தது. 7.5 லட்சம் பாலஸ்தீனர்கள் வீடுகளை இழந்து, கிராமங்களை யும், நகரங்களையும் இழந்து அகதிகளாக நின்றார்கள்.

இதையொட்டி நடந்த மோதல்களில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், இஸ்ரேலிய ராணுவத்தினர் மற்றும் யூத கூலிப்படையினரால் படு கொலை செய்யப்பட்டார்கள். 56சதவீத நிலப்பகுதிக்கு பதிலாக இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனத்தின் 78 சதவீத நிலப்பகுதியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது. இந்த பாலஸ்தீனப் பேரழிவின் 75ஆம் ஆண்டு, சமீபத்தில் 2023 மே மாதம் நினைவு கூரப்பட்டது.

அன்று துவங்கிய பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்பு கடந்த 75 ஆண்டுகளாக - உலக நாடுகள் அனைத்தும் கண்டித்த போதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றிய போதிலும்- அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் இப்போது வரை நீடிக்கிறது.

Israel Hamas War 2023

1947-48 இல் நடந்த இஸ்ரேலின் மிகப் பெரும் இனஅழிப்பு நடவடிக்கையில் வாழ்விடங்களை இழந்த பாலஸ்தீனர்கள் மேற்குகரையிலும் காசா திட்டுப் பகுதியிலுமாக குடியேறினர். ஏராளமானோர் லெபனான், சிரியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். அன்று முதல் இஸ்ரேல் பாலஸ்தீனை படிப்படியாக ஆக்கிரமித்து, மேற்குகரையில் ஒரு சிறிய பகுதி மற்றும் காசா நகரம் ஆகிய இரண்டு இடங்கள் தவிர அனைத்து பகுதிகளையும் தன்வசமாக்கி விட்டது. தற்போது வெறும் ஏழு சதுர கிலோ மீட்டர் அளவிற்கு மட்டுமே பாலஸ்தீனர்கள் வாழும் பகுதியாக உள்ளது.

அகண்ட இஸ்ரேல்: இந்தப் பகுதியையும் அழித்து, இங்குள்ள பாலஸ்தீனர்களை முற்றாக ஒழித்து, வேறு நாடுகளுக்கு விரட்டி, நாடற்றவர்களாக ஆக்குவது தான் இஸ்ரேலின் தற்போதைய திட்டம். இதைத்தான் பெஞ்சமின் நேதன்யாகு ஐ.நா. பொதுச் சபையில் பகிரங்கமாக முன்வைத்தார்.

அவர் வெளியிட்ட வரை படத்தில் சிரியா மற்றும் லெபனானின் சில பகுதிகளையும் உள்ளடக்கி ‘அகண்ட இஸ்ரேல்’ (Greater Israel) என்று பெயரும் வைத்து விட்டார். இவருக்கு முன்பே இந்தாண்டு துவக்கத்தில் இஸ்ரேல் நிதியமைச்சர் பெசாலல் ஸ்மோட்ரிச், பாலஸ்தீனம், லெபனான், சிரியா ஆகிய மூன்று நாடுகளையும் அழித்து, ஒரு வரைபடத்தை வெளியிட்டார்.

இவையனைத்தும் உள்ளடக்கியது தான் நாங்கள் எதிர்நோக்கும் அகண்ட இஸ்ரேல் என்று அறிவிக்கவும் செய்தார். ஹமாஸ் இயக்கத்தினர் அதிரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதன் பின்னணி இது தான். பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

Israel Hamas War 2023

இதற்கு முன்பு மேற்கு கரை மற்றும் காசா இரண்டுக்குமான தலைமையிடமாக மேற்குகரையில் உள்ள ரமல்லாவே இருந்தது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO)இந்த ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களை உணர்வூட்டி, இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு எதிராக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியது.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத் தலைமையில் இந்த எழுச்சி நீடித்து வந்தது. ஏராளமான பேச்சுவார்த்தைகள், அமைதி முயற்சிகள், இஸ்ரேலின் மீறல்கள், பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்கள், மேலும் மேலும் ஆக்கிரமிப்பு என வரலாறு நெடுகிலும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் களத்தில் நின்று சந்தித்தது. ஆனால் சுதந்திர பாலஸ்தீனத்துக்கான தீர்வு கிடைக்கவில்லை. இஸ்ரேலின் அடக்குமுறைகள் தீரவில்லை.

Israel Hamas War 2023

ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம்:

இந்த பின்னணியில், ரமல்லாவை தலைமையிடமாகக் கொண்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் தலைமையிலான நிர்வாகத்தை காசா பகுதியில் செயல்பட்டு வந்த ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்தது. யாசர் அராபத்தும் மறைந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டமே தீர்வு என்ற முடிவுடன் ஹமாஸ் இயக்கம் மக்களை அணிதிரட்டத் துவங்கியது.

காசா பகுதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதவழி போராட்டத்தை உறுதியுடன் மேற்கொண்டது. ஏற்கெனவே கடும் ஒடுக்குமுறையை மேற் கொண்டிருந்த இஸ்ரேல், ஹமாஸ் தலைமையிலான காசா பகுதியை மேலும் மேலும் முற்றுகையிட்டு, குண்டுமழை வீசி சல்லடையாக துளைத்தது.

காசாவில் 2008க்கு பிறகு இது வரை சுமார் 1.5 லட்சம் பாலஸ்தீன மக்களின் உயிரைப் பறித்துள்ளது இஸ்ரேலிய ராணுவம். இவர்களில் 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். தற்சமயம் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் காசா, உலகிலேயே மிக மிக மோசமான முறையில் சிதைக்கப்பட்டு, எதிர்காலம் முற்றிலும் சூனியமாக்கப்பட்ட நகரமாக இருக்கிறது.

ஐ.நா.சபையின் தோல்வி:

75 ஆண்டு கால வரலாற்றில் பாலஸ்தீனத்திற்கு உரிய நியாயத்தை உறுதி செய்வதில், ஐக்கிய நாடுகள் சபை அப்பட்டமாக தோல்வியடைந்துள்ளது. ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆதரித்ததில்லை. மாறாக, இஸ்ரேலை ஏவலாளியாக பயன்படுத்தி வளைகுடா பிரதேசத்தில் நிரந்தரமான பதற்றத்தை நிலவச் செய்வதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

இத்தகைய பின்னணியில் தான், இஸ்ரேலில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அதிதீவிர வலதுசாரியான பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசு, பாலஸ்தீனத்தையே முற்றாக அழிப்பது என்ற நோக்கத்துடன் மேற்கொண்ட நகர்வுகள், ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன மக்களின் இயக்கங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு தக்க பதிலடி கொடுப்பதே பொருத்தமானது என்று, மிகுந்த நுட்பத்துடன் திட்டமிட்டு, இஸ்ரேலின் வலுவான உளவு அமைப்புகளின் கண்களில் மண்ணைத் தூவி, வலுவான தாக்குதலை நடத்தியுள்ளது, ஹமாஸ் இயக்கம். இதற்கு இஸ்ரேல் தரப்பில் எதிர்வினை கடுமையாக இருக்கும் என்பது தெரிந்ததே. கடந்த ஒன்பது நாட்களாக ‘போர்’ அறிவித்து காசாவை இன்னும் கடுமையாக தாக்கி வருகிறது இஸ்ரேல்.

Israel Hamas War 2023

இந்தியா என்ன செய்ய வேண்டும்?:

இத்தனை ஆண்டுகளாக தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றிக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை இப்போதேனும் பாலஸ்தீன மக்களின் தாய்நாட்டிற்கான சட்டப்பூர்வமான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டு சுதந்திர பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்குவது என ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக அமலாக்க வேண்டும்; பாலஸ்தீனத்தின் ஒட்டுமொத்த பகுதிகளிலிருந்தும் இஸ்ரேல் குடியிருப்புகளும் ராணுவமும் அகற்றப்பட வேண்டும். இதுதான் தீர்வு.

ஆனால் இந்தத் தீர்வை எட்டுவதற்கு ஆயுத மோதலோ, உயிர் பறிக்கும் கொடிய போரோ வழி அல்ல. இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் - அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அலட்சியம் செய்து - இஸ்ரேலை முற்றாக தனிமைப்படுத்தி, அதன் மூலம் அரசியல் தீர்வுக்கு வரச் செய்ய வேண்டும். அத்தகைய தீர்வை நோக்கி உலகை உந்தித் தள்ளுவதில் இந்திய அரசுக்கும் முக்கியப் பங்கு உண்டு.

நன்றி:எஸ்.பி.ராஜேந்திரன்

Tags

Next Story