/* */

ஹமாஸுக்கு எதிராக ஏஐ துணையை நாடிய இஸ்ரேல்

துல்லியமான வான்வழி தாக்குதல் மற்றும் தளவாட அமைப்பு சார்ந்து ஏஐ தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பாதுகாப்பு படை பயன்படுத்துகிறது.

HIGHLIGHTS

ஹமாஸுக்கு எதிராக  ஏஐ துணையை நாடிய இஸ்ரேல்
X

பைல் படம்

இஸ்ரேல் போரில்வான்வழி தாக்குதலுக்கான இலக்கை தேர்வு செய்யவும், அது சார்ந்த முடிவுகளை எடுக்கவும் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏஐ தொழில்நுட்பம் தொடர்ந்து மற்றொரு ஏஐ மென்பொருளின் துணையுடன் ரெய்டுகளை மேற்கொள்வது தொடர்பாக முடிவுகளை எடுக்கிறது.

ஏஐ-யின் பரிந்துரையை மனிதர்கள் மேற்பார்வையிட்டு, ஏதேனும் மாற்றம் இருந்தால் அதை மேற்கொண்டு வருகின்றனர். போரில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் ராணுவம் மற்றும் அப்பாவி மக்கள் உயிரிழப்பை வெகுவாக குறைக்க முடிகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.

இதேபோல கடந்த 2021-ல் ராக்கெட் ஏவுதளங்களை அடையாளம் காணவும் ஏஐ உதவியை இஸ்ரேல் பயன்படுத்திக்கொண்டது. மேலும், செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ய, அந்நிய நாட்டில் ஆயுத தளவாட நகர்வை கண்காணிக்கவும் செயற்கை நுண்ணறிவை இஸ்ரேல் பயன்படுத்தியது. இது தவிர பாலஸ்தீனர்களை அடையாளம் காண ஃபேஷியல் ரெகக்னிஷன் ஏஐ மென்பொருளை பயன்படுத்துகிறது.

இப்படி போர்க் களத்தில் வீரர்களுக்கு ஏஐ அசிஸ்ட் இருந்தாலும் இது அனைத்தும் ‘Mission Impossible Dead Reckoning Part One’ படத்தில் மனிதர்களுக்கு எதிராக இயங்கும் ‘Entity’ ஏஐ போல செயல்பட்டு விடுமோ என்ற அச்சமும் உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் போரில் பயன்படுத்தப்படுவதால், பல நல்ல விஷயங்கள் நடக்கிறது என்று இதுவரை தெரியவந்தாலும், ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு ஆபத்துக்களையும் சுமந்து நிற்கிறது எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Updated On: 14 Oct 2023 4:30 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  4. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  6. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  7. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  8. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  9. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  10. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு