Is China Supports Hamas-இஸ்ரேல் போரால் சிக்கலில் சீனா? அமைதிக்கு உதவும் இந்தியா..!

Is China Supports Hamas-இஸ்ரேல் போரால் சிக்கலில் சீனா?  அமைதிக்கு உதவும் இந்தியா..!
X
போருக்குச்  செல்லும் இஸ்ரேலிய வீரர்கள்.
இஸ்ரேல் தாகுதலில் ஈரானின் தொடர்பு இருப்பது தெரியும். இதனால் சீனா பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.

Is China Supports Hamas, Israel Hamas War Today News, Israel-Hamas War, Israel Hamas War 2023, Israel vs Hamas War, Israel Hamas War Live, Israel Hamas War News, Israel Hamas War Live Updates Today, Israel Hamas War Latest In Tamil, Israel Hamas War Latest Updates

ஆனால் ரஷ்யா, சீனா என்பது பின்னால் இருந்து வெறும் உதவிகள் மட்டுமே செய்தார்களா? அல்லது அதை இயக்கியவர்களே அந்த நாடுகளில் ஒன்றா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. ஆம், ஹமாஸ் தாக்கப்பட்டவுடன் கண்டனம் தெரிவித்த ரஷ்யா, அதற்கு காரணம் அமெரிக்கா என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியது. மேலும், இந்த பிரச்சினைக்கு முடிவுகான வேண்டுமெனில் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு கொடுங்கள் என்றும், விரும்பினால், மத்யஸ்தம் செய்ய ரஷ்யா தயார் என்றும் புடின் அறிவித்தார். ஆனால் சீனா எதுவுமே சொல்லவில்லை.

சீனாவின் ஒரு மீடியாவில், மிடில் ஈஸ்ட் என்பது சீனாவிற்கு மிக முக்கியமானது. அங்கே சீனர்களின் அழுத்தம் இருக்க வேண்டும், அப்போதுதான் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளை சரிகட்ட முடியும் என்ற ரீதியில் அந்த நீண்ட ஆராய்ச்சி கட்டுரை வந்தது. அது மிகப்பரவாலான வரவேற்பை பெற்ற நிலையில், அந்த பதிவு அவசரகதியில் நீக்கப்பட்டது.

இதற்கு முன்பு சென்ற ஆண்டு, சீன அதிபர் ஈரானுடன், சவூதியுடன் தனிப்பட்ட முறையில் சந்தித்ததும் நினைவு கூற வேண்டியது இங்கே அவசியம். அதற்குப் பின்னால், சிரியாவில் BRI திட்டத்தின் விரிவாக்கமும், அதற்கு நிதி உதவி தரும் ஒப்பந்தம் மட்டுமல்ல, அந்த நாட்டில் அதை செய்யும் சீன நிறுவனங்களுக்கு பாதுகாப்பை சீன மிலிட்டரியே செய்யும் என்று போடப்பட்ட ஒப்பந்தம் மிகவும் வித்தியாசமானது மட்டுமல்ல, ஆச்சரியமானதும் கூட.

Is China Supports Hamas

அதற்குப் பிரதிபலனாக, சமீபத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முக்கிய விருந்தினர் சிரியாவின் அதிபர், அதுவும் சிரியா அதிபரை சீனாவின் VVIP விமானம் சென்று அழைத்து வந்தது. அவரை திரும்ப அனுப்பியது. அவரின் குழந்தைகள் இன்னும் சீனாவில் தங்கியிருக்கிறார்கள்.

அதாவது சீனாவின் ஆதிக்கம் அங்கே இருப்பதை அது உறுதி செய்தது. அதைத்தான் மேற்சொன்ன ஆர்டிகிளும் சொன்னது. மேலும் சீனா முன்னெடுத்த விஷயம் என்பது அரபு நாடுகளின் ஒற்றுமையை. அதில் தவறில்லை. ஆனால் அதற்காக அது பயன்படுத்திய துருப்புச் சீட்டு, இஸ்ரேலின் எதிர்ப்பு என்பது மிக முக்கியம். அது இப்போது அம்பலமாகி விட்டது.

ஆம். இஸ்ரேல் தாக்குதலுக்கு பின்னால் இருந்த மிக முக்கியமான நாடு சீனா. இதை செய்தவன் முகமத் டெய்ஃப். காஸாவை சேர்ந்தவன். சீனா அரசின் உதவியுடன் இலவசமாக சீனாவில் படித்தவன். அவன் மனைவி ஒரு சீனப்பெண். மூன்றாவது, ஹமாஸ் பயன்படுத்திய ராக்கெட்டுகளில் இருந்த, பாகங்கள், வெடி பொருட்கள் சீனாவுடையது.

ஈரானின் ட்ரோன்களில் பயன்படுத்தியது சீன மோட்டார்கள், உதிரி பாகங்கள். இதை மட்டும் வைத்து சீனா தான் இருக்கிறது என்று சொல்லி விட முடியுமா? இஸ்ரேல், முகமத் டெய்ஃப் இதன் மூளையாக இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் சீனாவிற்கு என்ன பயன்?


Is China Supports Hamas

மத்திய அரபு நாடுகளை ஒன்றிணைக்க வேண்டுமெனில் அதற்கு பொது எதிரி ஒன்று வேண்டும். அதற்கு இஸ்ரேலை விட வேறு நாடுகள் அதற்கு பொருந்தாது. இஸ்ரேல் பல வகைகளில் பொருந்தும். இஸ்ரேலுக்கு ஒரு பிரச்சினை என்று வந்து விட்டால், கண்டிப்பாக அமெரிக்கா, நேட்டோ நாடுகள் அங்கே வரும். அதனால், தென் சீனக்கடலில் இருக்கும் அதன் வலிமையான கடற்படையில் பெரும்பகுதி அங்கே செல்ல வேண்டி இருக்கும்.

அதனால், தைவானின் பாதுகாப்பு குறையும் போது, அதனை எளிதாக அதை ஆக்கிரமிக்க முடியும். சீனாவின் பொருளாதாரம் ஏற்கனவே பெரும் சரிவை சந்தித்துள்ள வேளையில் இந்தியா- மிடில் ஈஸ்ட்- ஐரோப்பிய நாடுகளிற்கு இடையேயான IMEC என்பது சீனாவின் BRI (Belt & Road Initiative) பெரும் சவாலாகி விடும். ஏற்கனவே அதன் வர்த்தக சார்பு நிலை வீழும் நிலையில், மேலும் சீனாவை ஒடுக்கி விடும். அப்போது அது பில்லியன்களில் செலவு செய்து கட்டமைக்கப்பட்ட BRI பயனற்றதாகி விடும்.

இங்கே துருக்கியும் அந்த திட்டத்தில் விடுபட்டதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இதெல்லாம் G20 மாநாட்டில் நடந்த விஷயம். அது எப்படி முன்பே திட்டமிட்டிருக்க முடியும்? அதை வைத்து அந்த திட்டங்கள் போடவில்லை, ஆனால் அது ஏற்கனவே அமெரிக்காவை வீழ்த்த போட்ட திட்டத்தில், அதை செயல்படுத்த வேண்டிய நேரத்திற்கு இதுவும் முக்கிய காரணமாகி இருக்கலாம் அல்லவா?

மேலும், இந்தியாவின் கை ஓங்கினால், சீனாவின் ஆசிய ஆதிக்கமும், உலக வல்லரசு என்ற கனவும் கானல் நீராகி விடுமல்லவா? இந்தியாவின் அபரிதமான வளர்ச்சியை இப்போது தடுக்க முடியும். ஆம் சவூதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல் வழியாக செல்லும் இந்த IMEC அவற்றை ஒன்றோடு ஒன்று சார்ந்திருக்க வேண்டியதாகி விடும். மேலும் இந்தியா முன்னெடுக்கும் I2U2 முயற்சி வெற்றி பெற்றால் இந்தியாவின் கைகள் உலகளவில் உயர்ந்து விடும் சூழல் உருவாகும். எனவே அதைத் தடுக்க வேண்டும்.

Is China Supports Hamas

NATO நாடுகளின் ஒற்றுமையால் தான் உக்ரைன் இன்னும் சமாளிக்கிறது. இப்போது இஸ்ரேல் தாக்கப்பட்ட நிலையில், உக்ரைனுக்கு பெரியளவில் உதவி கிடைக்காது. அதனால் NATO (33 நாடுகள் ) நாடுகள் உடைய வாய்ப்புண்டு. இதனால் ரஷ்யாவிற்கு பெரிய ஆதாயமுண்டு. நாளை மீண்டும் ஒரு நாடு, நேட்டோ நாடுகளை நம்பி கால் வைக்காது. அதே சமயம் நேட்டோ நாடுகளின் ஆயுத பலம், பொருளாதார பலம் இப்போது பலவீனமாக இருக்கிறது என்பதும் முக்கிய காரணம்.

இஸ்ரேல் அரபு நாடுகள் யுத்தம் என்பது உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும்,போர் சூழலால், சரக்கு போக்குவரத்து பெரியளவில் பாதிக்கும். இந்தியா அரபு நாடுகளிடம் இருந்து மட்டுமல்ல, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினாலும், அதை கொண்டு வர முடியாது. அப்போது ஈரானுடன், மற்ற நாடுகளுடன் சீனா BRI மூலம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க முடியும் என்பதால், உலகமே ஸ்தம்பித்து நிற்கும் போது, சீனாவின் வளர்ச்சி அபிரிதமாக இருக்கும்.

மத்திய கிழக்கு நாடுகளை ஒன்று சேர்த்து, அமெரிக்கா மற்றும் NATO நாடுகளின் எதிரியாக்கி விட்டால், சீனா முதலில் தைவானை ஆக்கிரமிக்கும். பின்பு இந்தியாவில் அருணாச்சல பிரதேசத்திற்கு தொல்லை தரும். அப்போது இந்தியாவிற்கு உதவ அமெரிக்காவோ, அல்லது இஸ்ரேல், நேட்டோ நாடுகள் உதவும் நிலையில் இருக்காது.

அப்படி நேட்டோ நாடுகள், இந்தியா, இஸ்ரேலை வீழ்த்தி விட்டால், உலகின் வல்லரசு சீனா தானே? ஆனால் இது எங்காவது நடக்காமல் போய் விட்டால், சீனா பெரும் பிரச்சினையை சந்திக்க வேண்டி வரும் என்பதை சீனாவின் தலைவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

Is China Supports Hamas

அதனால் தான், பெரும்பாலும் நடுநிலை வகிக்கும் இந்தியா, இஸ்ரேல் மீதான தாக்குதலை ஒரு தீவிரவாத அட்டாக் ஆக அறிவித்து அதற்கு ஆதரவு தந்துள்ளது. அதனால், சவூதி மட்டுமல்ல, ரஷ்யாவே தன் நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்குகிறது. அதனால் இதற்கு முன்பு வரை தன்னை யாரும் தொட்டு விட முடியாது என்ற நம்பிக்கையில் இருந்த இஸ்ரேல், அது எப்போதும் சாத்தியமல்ல என்று இந்த தாக்குதல் மூலம் உணர்ந்து விட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் நகரில், காசாவுக்கு ஆதரவாக ஒற்றுமையாக ஒரு பேரணியில் அணிவகுத்துச் செல்லும் போது பெண்கள் கோஷங்களை எழுப்பினர்.

அதனால் தான் இந்திய பிரதமர் மோடி உடனே தனது சமாதான நடவடிக்கைகளை முன்னிறுத்தாமல், இஸ்ரேலின் கோபத்தை கொஞ்சம் தீர்க்க அனுமதித்து, அதன் பின்னால் இஸ்ரேல் பிரதமருடன் பேசினார். அதே சமயம் இஸ்ரேலின் கடும் தாக்குதலை எதிர்பார்க்காத அரபு நாடுகளும். பாலஸ்தீனமும், பணிந்து போக வேண்டிய சூழலுக்கு இப்போது தள்ளப்பட்டு விட்டது.

அதே சமயம் ஹிஸ்புல்லா மூலம் பெரும் தாக்குதலை ஒருசேர முன்னெடுக்க நினைத்த ஈரான், அதை செய்தால், நாங்கள் நேரடியாக ஹிஸ்புல்லாவையும், லெபனான், சிரியா, ஈரானை தாக்குவோம் என்று அமெரிக்க, நேட்டோ நாடுகள் தங்கள் கப்பல்களை மெடிட்ரேனியன் கடலில் நிறுத்தியதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

இப்போதும் காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் பெருமளவில் மக்கள் உயிர்சேதம் ஏற்படுத்தப்படலாம். ஆனால் இஸ்ரேலின் பணய கைதிகளை விடுவிக்காத வரையில் காஸாவை தாக்குவோம் என்று அறிவித்து தாக்குதலையும் தொடங்கி விட்டது. அப்படி அவர்களை விடுவிக்கா விட்டால், காஸா மக்களின் மீதான தாக்குதலுக்கு, காரணம் ஹமாஸ் தீவிரவாதிகள் தானே?

அப்போது அவர்கள் எதிர்ப்பு இஸ்ரேல் மீது மட்டுமா இருக்கும்? அந்த எதிர்ப்பு இப்போது ஹமாஸ் மீதும் திரும்பி விட்டது. இப்போது அவர்களை விடுதலை செய்தால், ஹமாஸுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே எப்படி செய்தாலும் இது பெரும் பின்னடைவை கொடுத்து விட்டது.

Is China Supports Hamas

இப்போது இதையும் மீறி ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் தாக்கினால், கிட்டத்தட்ட 2.2 லட்சம் தீவிரவாதிகளை மொத்தமாக கொல்லும் வாய்ப்பு நேட்டோவிற்கு கிடைத்து விட்டது. சீனா நினைத்தது போல அது கிழக்கில் தைவான் மீது தாக்கினால், முதலில் கில்கிட்- பால்டிஸ்தானை இந்தியா தன்னுடன் சேர்க்கும். அதன் பின்னர், சீனா தைவான் விஷயத்தில் அடிவாங்கும் போது, லடாக்கையும் தன்னுடன் சேர்த்துக் கொள்வதோடு நிற்காது. திபெத் பகுதியின் சுதந்திரத்திற்கும் ஆதரவு கொடுக்கும்.

மொத்தத்தில், நடக்கும் எல்லா விஷயங்களும் இந்தியாவிற்கு சாதகமாகவே அமைகிறது. அதனால் இந்தியா உலகில் ஒரு புது அமைதியை கொண்டு வரும் என்று கண்டிப்பாக நம்பலாம். அது மட்டுமல்ல, அமெரிக்கா, சீனா, துருக்கி, ஈரான் போன்ற நாடுகள் பெரும் சரிவை சந்திக்கும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!