ஈராக் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து : 82 பேர் தீயில் கருகி பலி
ஈராக் நாட்டில் தீ விபத்து ஏற்பட்ட ஆஸ்பத்திரி.
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 82 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.அடைந்து உள்ளனர்.
தியால பிரிட்ஜ் பகுதியில் செயல்பட்டு வரும் இப்னு அல் கதீப் என்ற பெயர்கொண்ட அந்த மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்ட அறையில் தீ ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஆக்சிஜன் அறையில் ஏற்பட்ட கோளாறுதான் தீ விபத்துக்கு காரணம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த மருத்துவமனையில் தீயை தடுப்பதற்கான எந்த உபகரணங்களும் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் தீ வேகமாக அருகில் உள்ள அறைகளுக்கும் பரவியது.
மருத்துவமனை வார்டுகளில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளை கவனிக்க வந்த அவர்களது உறவினர்கள் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா நோயாளிகள் ஆவார்கள். நள்ளிரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பலர் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. வென்டிலேட்டரை அகற்றியதால் பலர் இறந்தனர். சிலர் புகை பரவியதால் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். தீ விபத்து குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஈராக் பிரதமர் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த தீ விபத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். 110 பேர் காயமடைந்து உள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu