சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் யூதர்கள்

சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் யூதர்கள்
X

பைல் படம்

ஹாலிவுட், விளையாட்டு, தொழில் நுட்பம் மற்றும் கலைகளில் யூதர்கள் தங்களுக்கான ஒரு பெயரை உருவாக்கியுள்ளனர்.

சர்வதேச அளவில் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தலைசிறந்த படைப்புகளை இயக்கிய உலகின் பிரபலமான இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் யூதராவார். சினிமா வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க ஆளுமைகளில் ஒருவரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஹாலிவுட்டின் சிறந்த இயக்குநராகவும், உலகின் பணக்கார திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.

ஆஸ்கர் விருதுகளை வென்ற இவர், ஜுராசிக் பார்க் என்ற மிக பிரமாண்ட படைப்பை உருவாக்கி, திரை மொழியின் விஸ்தாரமான எல்லைகளை தொட்டு அனைத்து தரப்பினருக்குமான படங்களை இயக்க கூடியவராக திகழ்கிறார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்: அறிவியல் உலகின் அணையா விளக்கு என அனைவராலும் போற்றப் பட்டவர் பிரபல இயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவரின் ஒளிமின்னழுத்த விளைவு பற்றிய குறிப்பிடத்தக்க பணிக்காக இயற்பியலுக்கான மதிப்புமிக்க நோபல் பரிசை வென்றார். இயற்பியல் துறை மீதான இவரது ஆளுமையானது இன்று வரை இயற்பியலாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. அறிவியலைத்தாண்டி அரசியல், சமூகம், சேவை, தத்துவம் என பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கினார் இவர்.

இதே போல திரையுலகில் கால் பதித்து சரித்திரம் படைத்தவர் எலிசபெத் டெய்லர். ஹாலிவுட் சினிமா உலகின் கனவு கன்னி கிளியோபாட்ரா என்றால், காந்தக் கண்ணழகி என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் எலிசபெத் டெய்லர். இவர் நடிப்பிற்காக இரண்டு முறை ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார். இவரை போல Jerry Lewis, Daniel Day-Lewis, Mel Brooks உள்ளிட்ட திரைபிரபலங்கள் பல சாகப்தங்களை கடந்து தற்போது வரை அனைவராலும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றனர்.

இது மட்டுமல்லாது தற்போதைய இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் சமீபத்திய ஆண்டுகளில் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளனர். 1980களில் இருந்து, இஸ்ரேலிய இலக்கியம் பரவலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலிய எழுத்தாளர்கள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். மேலும் தொழில்நுட்பம், மருத்துவ ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, ஆகியவை இஸ்ரேலியர்கள் ஆதிக்கம் செலுத்திய பிற துறைகளாகும்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil