'பாடிக்கொண்டே சாவோமா? ' மூழ்கும் முன் பாடிய வீரர்கள் : கண்ணீரில் குடும்பத்தினர்

பாடிக்கொண்டே சாவோமா?   மூழ்கும் முன் பாடிய வீரர்கள் : கண்ணீரில் குடும்பத்தினர்
X

காணாமல் போனதாக கூறப்பட்ட இந்தோனேஷிய நீர் மூழ்கி கப்பல்.

கப்பல் மூழ்குவதற்கு முன்னதாக அதில் இருந்த வீரர்கள் பாடிக்கொண்டே இறந்திருப்பது பலரை கண்ணீரில் மூழ்கச் செய்துள்ளது.

இந்தோனேசியாவுக்கு சொந்தமான கடற்படைக்கப்பல் கே.ஆர்.ஐ. நங்கலா-402. இது ஒரு நீர்மூழ்கிக்கப்பல். இந்த நீர்மூழ்கி கப்பல் கடந்த புதன்கிழமை பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த கப்பலில் மொத்தம் 53 கடற்படை வீரர்கள் இருந்தனர். பயிற்சி நடந்து கொண்டிருந்த போது கப்பல் திடீரென மாயமானது.

இதையடுத்து அந்நாட்டு அரசு, கப்பல் மாயமானது குறித்து அறிவிப்பு வெளியிட்டது. தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 6 போர்க்கப்பல், ஹெலிகாப்டர், விமானங்கள் உள்ளிட்டவை தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் விமானங்களும் தேடுதல் பணிக்கு உதவின.

இந்நிலையில், மாயமான போர்க்கப்பல் கடலில் மூழ்கி விட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கப்பலின் சில உதிரி பாகங்களையும் , வீரர்கள் பயன்படுத்திய பொருட்களையும் தேடுதலில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த கப்பல் மூழ்குவதற்கு முன்னர், வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல்கள் சமூக வெப்சைட்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை கேட்ட இறந்த வீரர்களின் குடும்பங்கள் கட்டுப்படுத்த முடியாத கண்ணீரில் மிதக்கிறார்களாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!