சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலர்ட்: தமிழகத்திற்கு ஆபத்து?
X
By - B.Gowri, Sub-Editor |14 Dec 2021 10:00 AM IST
இந்தோனேஷியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ஃப்ளோர்ஸ் தீவில் மவுமரே என்ற பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.6, ஆக பதிவாகி இருக்கிறது.
கடலுக்கடியில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி அலைகள் தோன்றலாம் என்று, பசுபிக் சுனாமி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரம், இந்த நிலநடுக்கம் காரணமாக, தமிழக கடலோரம் மற்றும் இந்திய கடற்கரை பகுதிகளில் சுனாமி பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்று, இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2004, ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி, இந்தோனேஷியாவில் 9.1,ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், இந்தியா உள்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுனாமி தாக்கி, கடும் பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu