அமெரிக்க தனிநபர் வருமானத்தில் கால்பங்கை எட்ட இந்தியாவுக்கு 75 ஆண்டுகள் ஆகலாம்..!

அமெரிக்க தனிநபர் வருமானத்தில் கால்பங்கை  எட்ட இந்தியாவுக்கு 75 ஆண்டுகள் ஆகலாம்..!
X

உலக வங்கி 


அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில், கால் பங்கை எட்டுவதற்கு இந்தியாவுக்குக் கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் வரை ஆகலாம்..

அடுத்த சில பத்தாண்டுகளில் இந்தியா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் அதிக வருமானம் ஈட்டும் தனிநபர்களைக் கொண்ட நாடுகளாக மாறுவதில் கடுமையான தடைகள் எழலாம் என்றும், இந்தியா, அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பங்கை எட்டுவதற்கு கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆகலாம் என்றும் உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் தனிநபர் வருவாயில், கால் பங்கை எட்டுவதற்கு சீனத்துக்கு 10 ஆண்டுகளும், இந்தோனேசியாவுக்கு 70 ஆண்டுகளும் ஆகலாம் என்று, உலக மேம்பாட்டு அறிக்கை 2024: நடுத்தர வருவாய் அமைப்பு என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டு கால தரவுகளை ஆய்வு செய்தபோது, ஒவ்வொரு நாடுகளும், அதன் செல்வ வளம் அதிகரிக்கும்போது, வழக்கமாக, ஒரு நபருக்கு ஆண்டு அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவிகிதம் என்ற இலக்கை தொடுகின்றன. இது இன்றைய 8000 அமெரிக்க டாலர் என்பதற்கு சமம். இது, உலக வங்கி, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் என வகைப்படுத்தும் வரம்பிற்கு இடையே உள்ளது.

2023ஆம் ஆண்டு இறுதியில், உலகம் முழுவதும் 108 நாடுகள், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் என வரையறுக்கப்பட்டன. ஒவ்வொரு நாடும், ஆண்டு உள்நாட்டு மொத்த உற்பத்திக் குறியீட்டில், தனிநபர் வருவாயானது 1,136 அமெரிக்க டாலர் முதல் 13,845 அமெரிக்க டாலர்களைக் கொண்டிருக்கும். இந்த நாடுகள் கிட்டத்தட்ட 600 கோடி மக்களின் நாடாக உள்ளது. இங்குதான் உலக மொத்த மக்கள் தொகையில் 75 சதவீத மக்கள் வாழ்கிறார்கள், இங்கு, ஒவ்வொரு மூன்று பேரிலும் இரண்டு பேர் மிக மோசமான ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள்.

கடந்த காலங்களில், இந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் சந்தித்த சவால்களைக் காட்டிலும், எதிர்காலம் சற்று மிகுந்த சவால்களையே கொண்டிருக்கும், மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, கடன் சுமை, உலகளவில் நடக்கும் மோதல்கள், கணிக்க முடியாத வணிகம் போன்றவை, வளர்ச்சியில் பிரச்னைகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியில் பெரும் தடைகளை ஏற்படுத்தலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இன்னமும் பல நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள், பழைய வரவு செலவு கணக்குகளையே இன்னமும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, முதலீடுகளை விரிவுபடுத்தும் கொள்கைகளை வகுப்பதிலும் இதே நிலை தொடர்கிறது. இது கிட்டத்தட்ட முதல் கியரில், காரை மேலும் வேகமாக இயக்க முயல்வதற்கு சமம் என்கிறது உலக வங்கி அறிக்கை.

தற்போதிருக்கும் நிலையைக் கணக்கிட்டால், அமெரிக்காவின் தனிநபர் வருவாயில் கால் பாதியை எட்ட சீனத்துக்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகலாம் என்றும், இந்தோனேசியா இதனை எட்ட 70 ஆண்டுகளும், இந்தியா 75 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Tags

Next Story