இந்தியாவை வீழ்த்த அவசரப்படும் அமெரிக்கா?
ரஷ்ய அதிபர் புடின், பாரத பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்.
மேலோட்டமாக பார்த்தால் அதற்கு காரணம் வங்கதேசம் சீனாவின் பக்கம் சரிந்தது காரணமாக இருந்தாலும், ஹசீனா அரசு சீனா அதன் பொருளாதார சரிவால் உதவியை நிறுத்தியதால், அதன் பக்கம் இருந்து இந்தியாவின் பக்கம் சாய்ந்தது தான் காரணம்.
ஆம், வங்கதேசத்தில் மூன்றவாது முறையாக அறுதிப் பெரும்பான்மையோடு மீண்டும் ஒரு மக்களாட்சி மலர்ந்தது. அந்த ஆட்சி அமெரிக்கா கேட்ட ஒரு தீவையும், அதன் ஒரு பகுதியை பிரித்து மியான்மாருடன் சேர்த்து ஒரு கிறிஸ்தவ நாட்டை உருவாக்க வைத்த கோரிக்கயை நிராகரித்ததுதான்.
அந்த கிறிஸ்தவ நாட்டின் முக்கிய நோக்கம் இந்தியாவின் வடகிழக்கில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் ஆறு மாநிலங்களை பிரித்து, பின்னால் அத்தோடு ஒன்று சேர்த்து ஒரு பெரிய கிறிஸ்தவ நாட்டை உருவாக்குவதே. அதன் மூலம் சீனாவின் தெற்கில் அமெரிக்காவின் கைப்பாவையும், இந்தியாவையும், வங்கதேசம், மியான்மார் என்று மொத்தமாக உருவாக்கி, வங்காள விரிகுடாவில் ஒரு பெரிய கப்பற்படை தளம் அமைப்பதே.
ஏற்கனவே மோடியை தோற்கடிக்க முயன்று தோற்றுப்போனது. அதன் விளைவாக மோடியால், இந்தியா ஒரு மிகப்பெரிய சக்தியாக வளர்கிறது. அதுவும் மோடி ரஷ்யா சென்று புடினுடன் மிக நெருக்கம் காட்டியது,, BRICS+ Banking system to alternative for US SWIFT and Dollar அதன் அவசரத்திற்கு மேலும் சில முக்கிய காரணங்கள்.
அமெரிக்காவிற்கு இணையாக உலகில் இருக்கும் மிகப்பெரிய ராணுவ சக்தி ரஷ்யா, அதை போரில் வீழ்த்த முடியாது, பொருளாதாரத்தில் தான் வீழ்த்த முடியும் என்று நினைத்தது. அதற்காக அது ஏற்படுத்திய போர் தான் உக்ரைன்-ரஷ்யா போர். அதற்காக அதன் மீது பொருளாதார தடை விதித்து, அதன் வருமானத்தில் முக்கியமான அதன் எரிபொருள் விற்பனைக்களமான ஐரோப்பாவை தடுத்து விட்டால், அதற்கான வருமானம் வீழ்ந்து விடும். அதனால் சோவியத் யூனியன் உடைந்தது போல ரஷ்யாவும் சிறு சிறு நாடுகளாக உடைந்து விடும் என்பதுதான் அதன் கணக்கு.
அதே போல ஐரோப்பிய நாடுகளை ரஷ்ய எரிபொருள் வாங்குவதை தடுத்து விட்டது. அதன் 650 பில்லியன் டாலரையும், அமெரிக்க வங்கிகளிடம் இருந்த கையிருப்பு 350 பில்லியன் டாலரையும் பொருளாதார தடை மூலம் எடுக்க முடியாமல் செய்து அதன் நிதி நிலையை தனதாக்கி மோசமாக்கியது. ஆனால் அதுதான் அது செய்த அடிமுட்டாள்தனம்.
அதனால் ரஷ்யா ஆறு மாதத்தில் வீழ்ந்துவிடும் என்பதும், அதிக பட்சம் ஒரு வருடம்தான் அதன் பொருளாதார வலிமை என்பது அதன் கணக்கு. ஆனால் இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கியதும், சீனாவும் வாங்கியது. அது ஒரு பக்கம் ரஷ்யாவிற்கு வருமானத்தை தொடர வழி வகுக்க, அமெரிக்காவின் கொத்தடிமைகளான ஐரோப்பிய நாடுகள் தான் பெரிதும் பாதிகப்பட்டது.
அதுமட்டுமல்ல, போரின் மூலம் கச்சா எண்ணெய் விலையை ஏற்றி, டாலர் டிமாண்ட் கிரியேட் செய்து $ பிரிண்ட் செய்து கொள்ள நினைத்தது. ஆம் அமெரிக்கா ஒரு நாளைக்கு 500 மில்லியன், ஒரு வருடத்திற்கு 360 பில்லியன் டாலரை பிரிண்ட் செய்யும் அளவிற்கு அதன் வசதிகள் உள்ளது. இன்று உலகில் 2 டிரில்லியன் டாலர் உலக வர்த்தகத்தில் அதன் கரன்சி தான் ஆளுமையில் உள்ளது.
ஆனால் இந்தியா, சீனா அதன் சொந்த கரன்ஸியில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியது. அது மட்டுமல்ல, சவூதி அரேபியா முதல் மற்ற நாடுகளும் பெட்ரோ டாலர் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற, இப்போது அந்த டாலர் டிமாண்ட் குறைய தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் டாலருக்கு மாற்றாக BRICS Currency ஐ வருகிற அக்டோபரில் ரஷ்யாவில் நடக்கவிருக்கும் BRICS+ மாநாட்டில் வெளியிட இருக்கிறார்கள். அதில் 159 நாடுகள் சேர விருப்பம் தெரிவித்துள்ளது. அதில் NATO வில் அங்கமாக இருக்கும் துருக்கியும் அதில் சேர விண்ணப்பித்துள்ளது.
அப்படியென்றால், அந்த கரன்ஸி வந்துவிட்டால் அமெரிக்காவின் டாலருக்கான மாற்று ஒன்று வந்துவிடும். உலக நாடுகள் அதன் வர்த்தகத்தை BRICS CURRENCY மூலம் செய்யத் தொடங்கினால், ரஷ்யாவை பொருளாதாரத்தால் வீழ்த்த நினைத்த அமெரிக்கா, அதே பொருளாதாரத்தால் வீழ்ந்துபோகும். மேலும் அமெரிக்கா இதுவரை பொருளாதாரத்தடை என்று அது பயன்படுத்திய பிராதான ஆயுதம் வலுவிழந்துவிடும்.
அதையும் தாண்டி அமெரிக்காவில் Donald Trump மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் (அவ்வளவு எளிதாக DEEP STATWD OF AMERICA அனுமதிக்காது) அமெரிக்கா உக்ரைனுக்கு கொடுக்கும் உதவிகள் உடனே நிறுத்தப்படும். அப்படியென்றால் ரஷ்யாவின் பொருளாராரம் மேம்படும், மாறாக அமெரிக்காவின் பொருளாதாரம் வீழத்தொடங்கும். சரி, வெறும் கரன்ஸி இந்த மாற்றத்தை செய்ய முடியுமா?
முடியும். ஏனென்றால் டாலர் ஒரு பக்கம் வீழ்வதால அமெரிக்காவின் வருமானம் பெரிதளவில் பாதிக்கப்படும். ஏற்கனவே 33 ட்ரில்லியன் டாலர் கடனில் இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும். அதன் அத்தியாவசிய தேவைக்காக உலக நாடுகளை சார்ந்திருக்கும் அமெரிக்கா, டாலரின் வீழ்ச்சியால் இறக்குமதி செய்வது சிரமமாகும்.
ஆம், அது தேவைப்பட்டால் டாலர் நோட்டுக்களை பிரிண்ட் செய்து இறக்குமதி செய்த காலம் போய்விட்டது. மாறாக உலகம் முழுவதும் உள்ள 2 ட்ரில்லியன் டாலர்கள்இப்போது அமெரிக்க வங்கிகளை நோக்கி வரும். மாறாக பிரிக்ஸ் கரண்சிக்கு டிமாண்ட் வரும்போது, டாலரை வாங்க நாடுகள் இருக்காது. அப்போது அமெரிக்காவில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விண்னைத்தொடும்.
அதனால் அது எப்பாடு பட்டாவது அந்த பிரிக்ஸ் கரன்ஸியை நிறுத்த நினைத்தது. இன்றும் ரஷ்யா ஆயுத பலத்தில் வலுவாக இருந்தாலும், உலகின் உற்பத்தி கூடமாக சீனா இருந்தாலும், அதன் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை இல்லை. அந்த நம்பிக்கையை உலக நாடுகளுக்கு கொடுத்தது இந்தியாதான். எனவே உலகை இணைக்கும் பாலமான இந்தியாவை வீழ்த்தினால், BRICS எல்லாம் பிசுபிசுத்து போய்விடும் என்பது அதன் கணக்கு.
எனவே மோடி அரசை வீழ்த்தினால் இந்தியா வீழும். அப்படி இந்தியாவை வீழ்த்த அமெரிக்கா பல வகைகளில் முயல்கிறது. வங்கதேசத்தில் ஒரு மாணவர் கலவரத்தின் மூலம் ஆட்சியை மாற்றியது போல, இந்தியாவிலும் மாற்ற முடியும் என்பதற்கான ஒரு நம்பிக்கையும், டிரையலும் தான் வங்கதேச நாடகம்.
மேலும் இந்தியா- சீனா உறவுகள் மேலும் பலவீனப்பட்டு எல்லையில் மோதுவார்கள் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்காவிற்கு குறைய தொடங்கி விட்டது. இந்திய வெளியுறவு துறை அமைச்சரின் சீன சந்திப்பிற்கு பிறகு, இப்போது சீனா தனது பிடிவாததத்தை தளர்த்தி, எல்லை பிரச்சினைனையில் பின் வாங்குகிறது.
மேலும், இந்த தேர்தலில் எப்பாடு பட்டாவது மோடியை தேர்தலில் வீழ்த்திவிட நினைத்த சீன, அமெரிக்க முயற்சிகள் தோற்றுப்போனது. மேலும் சீனா இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட்டால், திபெத், தைவான், ஹாங்காங் போன்ற சீனாவின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடும் என்பதை வெளிப்படையாக செய்ய தொடங்கியது இந்தியா.
அதன் விளைவாக, ரஷ்யாவில் மோடி- புடின் சந்திப்பிற்கு பிறகு இந்த விவகாரங்களில் ஒரு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளதாகவும், அது அக்டோபரில் ரஷ்யாவில் நடக்கும் BRICS+ சந்திப்பில் இன்னும் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வேளை இந்தியா-சீனாவிற்குள் ஒரு குறைந்த பட்ச புரிதல் வந்து விட்டால், தைவான் விஷயத்தில் இந்தியா ஒதுங்கி நிற்கவும் வாய்ப்புண்டு. அதே சமயம் சீனாவின் 220 பில்லியன் முதலீடுகளை இந்தியா தடுத்து விட்டது. அது அனுமதிக்கப்பட்டால், ஒரு புரிதல் வந்து விட்டது என்பதாக அர்த்தம் கொள்ளலாம்.
ஆம், இந்தியா சீனா போர் வந்தால், இருவரின் வீழ்ச்சி அமெரிக்காவிற்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்றிருந்த நிலை போய், சீனா-அமெரிக்கா லடாயாயை இந்தியா ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும். யார் வீழ்ந்தாலும் இந்தியாவிற்கு நல்லது தானே!
மேலும் இந்திய பிரதமர் மோடியின் உக்ரைன் போர் நிறுத்த முயற்சிகள் ஆரம்பமாகி உள்ளது. அதை ஏன் இந்தியா இதுவரை செய்யவில்லை? அமெரிக்காவின் தற்போதைய அரசு அதை விரும்பவில்லை. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வந்தால், உடனே அதை நிறுத்த முன் வருவார். எனவே அதற்கான பேச்சுவார்த்தையை, நவம்பர் 5 ஆம் தேதி வருகிற தேர்தலை மையப்படுத்தி, இந்தியா, இப்போது முன்னெடுக்கிறது.
ஆனால் அமெரிக்கா, இந்த பேச்சுவார்த்தையை வேகப்படுத்தி ஒப்பந்தம் செய்ய துடிக்கிறது. அதன் மூலம் கமலா ஹாரீஸின் தேர்தலுக்கு உதவும் என்பது அவர்கள் கணக்கு. அதை இந்தியா உடனே செய்யாது.
சரி, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் வந்தால், அவர் இந்தியாவிற்காக எல்லாவற்றையும் விட்டு கொடுத்து விடுவாரா? கண்டிப்பாக மாட்டார். ஆனால் அவர் இந்தியா உட்பட உலக நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது, அரசை கவிழ்ப்பது எல்லாம் குறையும். இன்னும் சொல்லப்போனால், மீண்டும் வங்கதேசத்தில் ஹசீனா ஆட்சியில் தொடரவும் வாய்ப்புள்ளது. அதனால் தான் இந்தியா, அவரை இங்கே அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கிறது.
அதே சமயம், அமெரிக்கா தன்னை உற்பத்தி தளமாக உயர்த்தி, தனது நாட்டில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பையும், சீனா, இந்தியா போன்ற மற்ற நாடுகளை சார்ந்திருப்பதையும் குறைப்பார். இந்தியாவிற்கு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நிறைய ஒப்பந்தங்கள் ஏற்படும்.
ஆனால் இறக்குமதி பொருட்களின் வரியை உயர்த்துவார், அதில் இந்திய பொருட்களுக்கும் உயரும். அதன் மூலம் அமெரிக்காவின் தொழில் வளர்ச்சியும், நிதி பிரச்சினையும் ஓரளவிற்கு குறையும். ஆனால் அதற்கு கால தாமதம் ஆகும், அந்த காலத்தில் அதன் கடன் சுமை, inflation போன்றவற்றை எப்படி சமாளிப்பது என்பதுதான் அவருக்கு உள்ள சவால்கள்.
நம்மை வீழ்த்த நினைக்கும் அமெரிக்காவிற்கு நாம் ஏன் உதவ வேண்டும்?
அமெரிக்கா முழுவதுமாக வீழ்ந்துவிட்டால் சீனாவின் கை ஓங்கி விடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், ரஷ்யா-சீனாவுடன் நெருக்கமாகி, அவர்கள் அமெரிக்காவிற்கு மாறாக உலகை ஆளத்தொடங்க வாய்ப்புண்டு என்பதால், அமெரிக்கா வலிமையாக இருப்பது இந்தியாவிற்கு அவசியம். (அதாவது ஜெயலலிதா இறந்த போது, தி.மு.க.,வினர் அச்சிட்ட அஞ்சலி போஸ்டர்களில், ‘நீங்கள் ஆளக்கூடாது என்று தானே நினைத்தோம். வாழக்கூடாது என நினைக்கவில்லையே’என குறிப்பிட்டிருந்தனர். தி.மு.க.,வினரின் இந்த ஸ்டேடர்ஜி தான் உலக அரசியலுக்கும் பொருந்துகிறது.)
இன்னும் சொல்லப்போனால் இந்திய-அமெரிக்காவுடன் தொழில்நுட்ப பரிவர்த்தனை, மற்றும் பல விஷயங்கள் இரு நாடுகளுக்கு இடையே பெருக வாய்ப்புண்டு. அதற்கு அமெரிக்கா பலம் இழக்க வேண்டும், ஆனால் வீழக்கூடாது என்பதுதான் இந்தியாவின் ஸ்டேட்டர்ஜி..
இதை நன்கு அறியும் அமெரிக்கா, வரும் அமெரிக்க தேர்தலுக்கு முன்பு இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்க பெரிய சதியை வேகமாக செய்கிறது. அதன் தூதுவர்கள் இந்தியாவில் உள்ள பல தலைவர்களை சந்தித்துள்ளதும் இந்திய அரசுக்கு தெரியும். அதை சமாளிக்க மோடி அரசு தெளிவாக திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறது.
எனவே உலக அரசியல், இந்திய அரசியல், தமிழக அரசியல் என்று பிரித்து பார்க்க வேண்டாம். எல்லாம் இந்திய அரசின் தீர்க்கமான திட்டமிடல்களே!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu