பிறந்த குழந்தைகள் இறப்பு வழக்கு : நர்ஸை பிடிக்க உதவிய இந்திய வம்சாவளி டாக்டர்..!

குழந்தைகளைக்கொன்ற செவிலியர் லூசி லெட்பி மற்றும் அவர் எழுதி வைத்திருந்த கடிதம்.
UK newborn Babies Death Case
புதிதாகப் பிறந்த ஏழு குழந்தைகளைக் கொன்றதற்காக லூசி லெட்பி கைது செய்யப்பட்டார். இறந்த குழந்தைகளில் ஐந்து ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் அடங்கும். அதிலும் எல்லாக் குழந்தைகளுமே பிறந்து ஒருநாள் ஆன பச்சைக்குழந்தைகள் என்பது வேதனையான சம்பவம்.
புதிதாகப் பிறந்த ஏழு குழந்தைகளைக் கொன்ற வழக்கில் 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்ட செவிலியர் லூசி லெட்பியைப் பிடிக்க இங்கிலாந்தில் பிறந்த இந்தியவம்சாவளி மருத்துவர் உதவியுள்ளார். சம்பவத்தன்று வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் செய்தி நிறுவனமான PTI இன் அறிக்கையின்படி, லெட்பி செஸ்டரில் உள்ள கவுண்டஸ் ஆஃப் செஸ்டர் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர். ரவி ஜெயராமின் சக ஊழியராக இருந்தார்.
ஒரு செய்தி சேனலிடம் பேசிய டாக்டர் ஜெயராம், 33 வயதான அந்த லெட்பியைப் பற்றிய முழு விபரங்களும் முன்கூட்டியே எனக்குத் தெரிந்திருந்தால் அல்லது நான் கவனித்திருந்தால் காவல்துறையினருக்கு நான் தகவல் தந்து எச்சரித்து இருந்திருப்பேன். புதிதாகப் பிறந்த ஏழு குழந்தைகளில் சில குழந்தைகளையாவது காப்பாற்றியிருக்கலாம் என்றார், கவலையோடு.
"அவர்கள் இன்று உயிரோடு இருந்திருந்தால் இப்போது அந்தக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வயதாக இருந்திருக்கும் ." என்று ஜெயராம் கூறினார். 2015ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மூன்று குழந்தைகள் இறந்த பிறகு மருத்துவ ஆலோசகர்கள் முதலில் குழந்தைகள் இறப்புக்கு கரணம் என்ன என்ற கவலைகளை எழுப்பத் தொடங்கினர். தொடர்ந்து மேலும் குழந்தைகள் இறந்ததால், மூத்த மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகிகளுடன் லெட்பி பற்றிய சந்தேகங்களை எழுப்ப பல சந்திப்புகளை நடத்தினர்.
லெட்பி எப்படி கைது செய்யப்பட்டார்?
இறுதியில், 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேசிய சுகாதார சேவை (NHS) அறக்கட்டளை மருத்துவர்களை ஒரு போலீஸ் அதிகாரியை சந்திக்க அனுமதித்தது. "காவல்துறையினர், 10 நிமிடங்கள் நாங்கள் சொல்வதைக் கேட்ட பிறகு, இது அவர்கள் சம்பந்தப்படவேண்டிய விஷயம் என்பதை உணர்ந்தனர். உண்மையில் நான் மகிழ்வோடு மூச்சுவிட்டேன்." என்று ஜெயராம் மேலும் கூறினார்.
லெட்பியை கைது செய்ய ஒரு விசாரணை தொடங்கப்பட்டது. மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் ஒரு நடுவர் மன்றத்தால் பிறந்த ஏழு குழந்தைகளையும் கொலை செய்ய முயன்றதாக லெட்பி குற்றம் சாட்டப்பட்டார்.
2015 மற்றும் 2016 க்கு இடையில் கவுண்டஸ் ஆஃப் செஸ்டர் மருத்துவமனையில் பிறந்த குழந்தை வார்டில் மொத்தம் 13 குழந்தைகளை ரகசியமாக தாக்க இந்த 33 வயதான செவிலியர் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியதாக கிரவுன் ப்ராசிகியூஷன் சர்வீஸ் (சிபிஎஸ்) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய வழக்கு விசாரணையின் போது, மருத்துவமனையில் மருத்துவர்கள் குழந்தைகளின் இறப்பு விகிதம் அல்லது எதிர்பாராதவிதமாக இறப்பின் எண்ணிக்கையில் கணிசமான உயர்வைக் கவனிக்கத் தொடங்கினார்களா என்று நீதிமன்றம் கேட்டது.
சிபிஎஸ், லெட்பி குழந்தைகளைத் தாக்க பல்வேறு முறைகளைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை முன்வைத்தது. இதில் அதிகப்படியான பால் அல்லது திரவங்களை வலுக்கட்டாயமாக ஊட்டி மூச்சுத்திணறலை ற்படுத்துவது உட்பட, சக ஊழியர்களை ஏமாற்றி, இயற்கையான இறப்பு போல நம்பவைத்து குழந்தைகளைக் கொல்ல எண்ணினாள்.
"குற்றங்களுக்கு ஆயுதமாக அவளுடைய கைகளில், காற்று, பால், திரவங்கள் போன்ற தீங்கற்ற பொருட்கள் - அல்லது ஆபத்தானதாக மாறும் இன்சுலின் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. அவள் தான் கற்றதை சிதைத்து, தீங்கு, துரோகம் மற்றும் மரணத்தை உண்டாக்க தன் கைவினைப்பொருளை ஆயுதமாக்கினாள்," என்று CPS இன் பாஸ்கேல் ஜோன்ஸ் கூறினார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மற்ற ஆதாரங்களில், செவிலியர் தனது குற்றத்தை மறைக்கச் செய்த பொய்யான குறிப்புகள் மற்றும் அவரது சக ஊழியர்களை ஏமாற்றும் சமூக ஊடக செயல்பாடு ஆகியவை அடங்கும்.
'நான் கெட்டவள்'
விசாரணை தொடங்கப்பட்டபோது, லெட்பியின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது லெட்பி கையால் எழுதப்பட்ட குறிப்புகளை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் அவர் தன்னை ஒரு "நான் கொடூரமானனவள்" என்று எழுதியிருந்ததை விவரித்தார்.
"நான் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள தகுதியானவள் அல்ல. நான் அவர்களை வேண்டுமென்றே கொன்றேன்" என்று லெட்பி எழுதிய குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பலியான ஏழு குழந்தைகளில் ஐந்து ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் அடங்குவர். இதில் கொடுமை என்னவெனில் இறந்த அத்தனைக் குழந்தைகளும் பிறந்து ஒருநாள் கூட ஆகாதவர்கள்.
லெட்பிக்கு வரும் 21ம் தேதி திங்கட்கிழமை மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu