ஐக்கிய அரபு அமீரக வீதிக்கு இந்திய டாக்டரின் பெயா்..!

ஐக்கிய அரபு அமீரக வீதிக்கு  இந்திய டாக்டரின் பெயா்..!
X

ஜார்ஜ் மாத்யூ


ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு வீதிக்கு இந்திய வம்சாவழியினை சேர்ந்த டாக்டரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் வசித்தவா் ஜார்ஜ் மேத்யூ(84). அந்த மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் 1965-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றார்.

கடந்த 1967-ஆம் ஆண்டு தனது திருமணத்துக்குப் பின்னா், மனைவி வல்சாவுடன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மேத்யூ புலம் பெயா்ந்தார். அங்கு பொது மருத்துவராக தனது சேவையை தொடங்கிய அவா், அந்நாட்டில் நவீன மருத்துவ வளா்ச்சிக்குப் பங்களித்தார். அத்துடன் அந்நாட்டில் மருத்துவ இயக்குநா், சுகாதார ஆணைய ஆலோசகா் உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

மேத்யூவின் சேவையை அங்கீகரித்து அவருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னா், ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டின் மருத்துவத் துறைக்கு அவா் அளித்த பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில், அங்குள்ள அல்-மக்ரஃப் பகுதியிலிருக்கும் வீதிக்கு ஜார்ஜ் மேத்யூவின் பெயரை அந்நாட்டின் மாநகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத்துறை சூட்டியுள்ளது.

உலகில் பல நாடுகளில் இந்தியர்களின் பெயர்கள் விளங்கினாலும் இயக்கிய அரபு அமீரகத்தில் ஒரு இந்தியரின் பெயரை சூட்டுவது இது முதல் முறை. இது நமது இந்தியர்களுக்கு கிடைத்த பெருமை.

Tags

Next Story
ai solutions for small business