யாரிந்த ஷோஹினி சின்ஹா? FBI சிறப்பு முகவராக இந்திய-அமெரிக்க பெண் நியமனம்..!

யாரிந்த ஷோஹினி சின்ஹா?  FBI சிறப்பு முகவராக இந்திய-அமெரிக்க பெண் நியமனம்..!
X

ஷோஹினி சின்ஹா,(கோப்பு படம்)

ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) இந்திய-அமெரிக்கரான ஷோஹினி சின்ஹாவை சிறப்பு முகவராக நியமித்துள்ளது. அவரைப் பற்றி தெரிந்து கொள்வோமா..?

Indian-American woman appointed as FBI special agent in Tamil, Indian-American woman appointed as FBI special agent, FBI, Indian-American woman Shohini Sinha

இந்திய-அமெரிக்கப் பெண்ணான ஷோஹினி சின்ஹா, மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) சிறப்பு முகவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சால்ட் லேக் சிட்டி ஃபீல்டு ஆபீஸின் பொறுப்பாளராக இருப்பார். எஃப்.பி.ஐ இயக்குனர் கிறிஸ்டோபர் ரே அவரை இந்த பொறுப்புக்கு நியமித்தார்.

வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடந்த மதிப்புமிக்க பதவியேற்பு விழாவில் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்த பதவியில் பொறுப்பேற்கும் 40வது பொறுப்பாளர் என்பதால் அவரது நியமனம் அவரது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.

தீவிரவாதத்திற்கு எதிரான நிபுணத்துவம்:

உளவியல் மற்றும் மனநல ஆலோசனையில் தனது கல்வியை முடித்த பிறகு, சின்ஹா 2001ம் ஆண்டு டிசம்பர் 30அன்று எஃப்.பி.ஐ-யில் சிறப்பு முகவராக (எஸ்.ஏ) சேர்ந்தார். இருபது வருடங்களுக்கு மேலான அனுபவத்துடன், அவர் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

அங்கு அவர் சிறப்பாக பாதுகாப்பைக் கையாண்டார். சர்வதேச அளவில் முக்கியதத்துவம் பெற்ற லண்டன், பாக்தாத் மற்றும் குவாண்டனாமோ விரிகுடாவில் அவரது பணிகள் அவர் எதிர்கொண்ட சவால்கள் அவர் அவரது பணியில் கொண்டுள்ள உறுதியும் எதையும் எதிர்கொள்ளும் மனோபாவமும் உடையவர் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

2009ம் ஆண்டில் அவர் மேற்பார்வை சிறப்பு முகவராக (SSA) பதவி உயர்வு பெற்றார். மேலும் கனடாவை தளமாகக் கொண்ட எல்லைதாண்டிய விசாரணைகளை கையாண்டார். அங்கு அவர் வாஷிங்டனை தளமாகக் கொண்ட கனேடிய தொடர்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டார். ஒரு SSA ஆக, ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) உடனான கூட்டு விசாரணைதான் அவரது மிகப்பெரிய சாதனையாக இருந்தது. இதன் விளைவாக ஒட்டாவாவில் தாக்குதல்களைத் திட்டமிட்டதற்காக மூன்று சிறைக்கைதிகள் கைது செய்யப்பட்டனர்.


உதவி சட்ட இணைப்பாளராக (ALAT) பதவி உயர்வு பெற்ற பிறகு, RCMP உடனான அவரது கூட்டு விசாரணை நியூயார்க் நகரத்திற்கும் டொராண்டோவிற்கும் இடையிலான வணிக ரயில் பாதைக்கு எதிராகத் தாக்குதலைத் திட்டமிட்டதற்காக இரண்டு பயங்கரவாதக் குழு உறுப்பினர்களைக் கைது செய்ய வழிவகுத்தது.

டெட்ராய்ட் கள அலுவலகத்தில் (2015) கள மேற்பார்வையாளராக, ஷோஹினி ஹிஸ்புல்லா மற்றும் பிற ஷியா தீவிரவாத குழுக்களை விசாரிக்கும் குழுவிற்கு தலைமை தாங்கினார்.

சின்ஹா தேசிய பாதுகாப்பு மற்றும் இணைய விசாரணை வழக்குகள் இரண்டையும் கையாள்வதில் குறிப்பிடத்தக்க திறமைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் என்று FBI தெரிவித்துள்ளது.

2020 இல், ஷோஹினி போர்ட்லேண்ட் ஃபீல்ட் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு விஷயங்களுக்கான உதவி சிறப்புப் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது அவரது திறமைகளுக்காக எஃப்.பி.ஐ இயக்குனர் கிறிஸ்டோபர் ரே அவரை இந்த பொறுப்புக்கு நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இணைப்பை 'க்ளிக்' செய்து நியமன விபரங்களை அறியலாம்.

https://twitter.com/FBISaltLakeCity/status/1686128064479068160?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1686128064479068160%7Ctwgr%5Ed742b712664c481a1a18ecfc7468e99d7da3cccd%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.wionews.com%2Fworld%2Fwho-is-shohini-sinha-indian-american-woman-appointed-as-fbi-special-agent-621960

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!