மாலத்தீவுக்கு ரூபாய் 3000 கோடி கடன் வழங்கிய இந்தியா...!

மாலத்தீவுக்கு ரூபாய் 3000 கோடி  கடன் வழங்கிய இந்தியா...!
X

பிரதமர் மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் முஹம்மது முய்சு-கோப்பு படம் 

இந்தியாவை பரம எதிரியாக கருதிய மாலத்தீவு அதிபர், இன்று முழு அளவில் இந்தியாவிடம் சரணடைந்து விட்டார்.

இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளை ஏமாற்றி தனது கடன் வலையில் வீழ்த்தி, அந்த நாடுகளை முழுக்க தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அதன் மூலம் இந்தியாவிற்கு தொல்லை கொடுப்பது தான் சீனாவின் திட்டம். ஆனால் ஜியோ பாலிட்டிக்ஸ் என்ற உலக அரசியலில் இன்று இந்தியா ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது. ஜியோபாலிட்டிக்ஸ்சில் உலகின் சூப்பர் பவர் நாடு இந்தியா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பரம எதிரிகளான ரஷ்யா- அமெரிக்கா, ரஷ்யா- உக்ரைன், இஸ்ரேல்- ஈரான் என ஒன்றை ஒன்று அழிக்க துடிக்கும் நாடுகளுடன் கூட இந்தியா நல்ல நட்பு வைத்துள்ளது. அந்த நாடு என்னுடைய பரம எதிரி அந்த நாட்டிடம் உறவு வைக்காதே என இந்தியாவிற்கு கட்டளையிடும் பவர், உலகின் எந்த சூப்பர் பவர் நாட்டிற்கும் இல்லை.

இந்தியா எதுவும் கேட்காமலேயே, ரஷ்ய அதிபர் சீன அதிபரை தொடர்பு கொண்டு நீங்கள் ஏன் இந்தியாவை சீண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என கடுமையாக கொந்தளிக்க, பயந்த சீனா இந்திய எல்லையில் இருந்து தனது படைகளை வாபஸ் பெற்றது. அந்த அளவு நாம் கேட்காமலேயே நமக்கு வலிய வந்து உதவி செய்து நல்ல பெயர் வாங்கும் நிலையில் தான் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற சூப்பர் பவர் நாடுகள் உள்ளன.

இப்படி ஜியோபாலிட்டிக்ஸ் சிங்கமான இந்தியாவிற்கு எதிராக மாலத்தீவினை துாண்டி விட்டது சீனா. பிரதமர் மோடி ஒரே ஒரு படம் மட்டும் வெளிட்டார். இந்தியாவின் லட்சத்தீவுகளில் பிரதமர் மோடி அமர்ந்திருப்பது போன்ற அந்த ஒரு படம் மாலத்தீவை ஒட்டுமொத்தமாக சுருட்டி விட்டது.

மாலத்தீவின் உயிரே சுற்றுலா தொழில் மூலம் வரும் வருவாய் தான். மாலத்தீவு அதிபர் முகமதுமொய்சு பொறுப்பேற்றதும் இந்தியாவிற்கு எதிராக விஷ வார்த்தைகளை கக்கினார். இந்திய ராணுவத்தை வெளியேற்றினார்.

பிரதமர் மோடி இந்தியாவின் லட்சத்தீவுகளில் உலவி அந்த படத்தை வெளியிட்டார். அதன் அழகில் சொக்கிப்போன உலக சுற்றுலா பிரியர்கள் லட்சத்தீவுகளுக்கு படையெடுக்கத் தொடங்கினர். மாலத்தீவுகளுக்கு செல்லும் சுற்றுலா பிரியர்களில் 90 சதவீதம் இந்தியர்கள் தான். அவர்கள் தங்களது மாலத்தீவு பயணத்தை நிறுத்திக் கொண்டனர். இதன் விளைவு மாலத்தீவு ஓரிரு மாதங்களில் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டது.

சீனர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா வர விரும்பவில்லை. சீன அரசு சீனர்களை மாலத்தீவுக்கு செல்லுங்கள் என எவ்வளவோ அழுத்தம் கொடுத்தும் பலனில்லை. எதிர்பாராத விதமாக பல உலக நாடுகளின் சுற்றுலா பிரியர்களும் இந்தியாவை நோக்கி படையெடுக்க மாலத்தீவில் சுற்றுலாவை நம்பி வாழ்ந்த மக்கள் சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தவிர மாலத்தீவுக்கு எல்லாமே... அதாவது எல்லாமே இந்தியா வழியாகத்தான் போக வேண்டும். குடிநீர் கூட இந்தியா தான் மாலத்தீவுக்கு கொடுத்து வருகிறது. இதில் இந்தியா கை வைத்து விட்டால் என்னாகும் என குலைநடுங்கிப்போனது மாலத்தீவு. அந்த மக்கள் தங்கள் நாட்டுக்கு எதிராக கொந்தளித்து போராட்டம் நடத்த, மாலத்தீவு அதிபருக்கு அப்போது தான் புரிந்தது இந்தியா இல்லாமல் சில மணி நேரம் கூட மாலத்தீவு உயிர்வாழ முடியாது. சீனா மிகவும் விஷமம் நிறைந்த ஒரு நாடு. சீனாவை நம்பி பயனில்லை என்பதும் புரிந்தது.

உடனடியாக நம் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மாலத்தீவு அதிபர் பேசினார். இந்தியாவிற்கு என்ன வேண்டும் என கேட்டார். மாலத்தீவு நாட்டை ஒட்டி உள்ள 27 தீவுகளை இந்தியாவிடம் குடிநீர் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒப்படைத்தார். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், நம் ராணுவம் அங்கு இருந்தது அவர்களது பாதுகாப்பிற்கு. அதையே விரும்பாத மாலத்தீவு அதிபர் 27 தீவுகளையே இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டார்.

பொறுப்பேற்ற சில மாதங்களில் மூன்று முறை இந்தியாவிற்கு வந்து விட்டார். பிரதமர் மோடியை சந்தித்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியத்தை சந்தித்தார். தாஜ்மஹாலில் குழு போட்டோ எடுத்துக் கொண்டார். இந்தியாவின் மதிப்பிற்குரிய ஒரு விருந்தாளியாக மாறி விட்டார். மாலத்தீவின் வளர்ச்சிக்கு இந்தியா 3000ம் கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது.

இதையே இந்தியா இலங்கையிலும் செய்து விட்டது. இலங்கை அதிபர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்திய பயணத்தை தேர்வு செய்துள்ளார். விரைவில் இலங்கை அதிபரும் இந்தியாவிடம் இருப்பார். இப்போது இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளில் பாகிஸ்தான் ஓய்ந்து போனது. இதர நாடுகள் இந்தியாவின் நட்பு நாடுகளாக மாறி விட்டன. வங்கதேசம் மட்டும் மக்கள் புரட்சியில் சிக்கி குழம்பிக் கிடக்கிறது. இருப்பினும் அங்கு ஒரு தெளிவான ஆட்சி வந்ததும், அந்த நாடும் நம் வசம் வந்து விடும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!