துரோகம் செய்த நாடுகள் இன்று கையேந்தி நிற்கின்றன..!
புதின், மோடி, செலன்ஸ்கி
1965ல் இதே உக்ரைனும் ரஷ்யாவும் சோவியத் என ஒன்றாக இருந்தன. அப்போது நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் இந்திய படைகள் லாகூரை தாண்டி இஸ்லாம்பாத்தை கைப்பற்ற நெருங்கின. அப்போரிலே பாகிஸ்தானை முறியடித்து காஷ்மீரை பெற்று வங்கதேசத்தை உடைக்கும் திட்டம் அப்போதைய பிரதமர் லால்பகதுார் சாஸ்திரிக்கு இருந்தது.
ஆனால் அப்போதைய சோவியத்யூனியன் அதை விரும்பவில்லை. காரணம் அங்கே சீன நலன் பாதிக்கப் படும் என்பதை விரும்பிற்று.
இதனால் நம் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி சோவியத்துக்கு அழைக்கப்பட்டார். அங்கு சென்ற அவர் உஸ்பெக்கின் தாஷ்கண்ட் நகரில் அவர் மர்மமாக இறந்தார். அந்நாளைய சோவியத் அதிபர் கோசிஜின் அதை பொருட்டாகவே மதிக்கவில்லை. ஒருங்கிணைந்த ரஷ்யாவாக இருந்த உக்ரைனும், ரஷ்யாவும் அப்போது இந்தியாவிற்கு பெரும் துரோகம் செய்து விட்டன.
லால் பகதுார் சாஸ்திரி தான் இந்திய பிரதமர்களில் மோடிக்கு முன்னோடி, அவர் மட்டும் கொஞ்சகாலம் இருந்திருந்தால் காஷ்மீர் சிக்கல் இருந்திருக்காது. பாகிஸ்தான் எப்போதோ மண்டியிட்டிருக்கும். நம் பிரதமர் சாஸ்திரியினை மர்மமாக பலியெடுத்து இந்தியாவினை பெரும் குழப்பத்தில் தள்ளியது இதே ரஷ்யா, அதன் பின் வந்த இந்திராகாந்தி வெறும் பம்மாத்து , செய்ததெல்லாம் விளம்பர அட்டகாசம். கடைசியில் அதே கர்வ விளம்பரம் அவருக்கு வினையாயிற்று.
தேசம் இன்னும் பாழாயிற்று. இப்போது காலம் மாறி காற்று இந்தியா பக்கம் வீசுகின்றது, தர்மசக்கரம் சுழல்கின்றது. உக்ரைனும் ரஷ்யாவும் தங்களுக்குள் மோதிக் கொள்ள சமாதானமம் செய்து வையுங்கள் என பாரதத்திடம் கையேந்தி நிற்கின்றன. பிரதமர் லால் பகதுார் சாஸ்திரியின் ஆன்மா மோடியுடன் சேர்ந்து பழைய பழிக்கு நல்லது செய்கின்றது.
பாரதம் தர்மமும் அறமும் கொண்ட தேசம், 1965லே பாகிஸ்தானை முடக்கிபோடும் காரியத்தை எந்த ரஷ்யா கெடுத்ததோ அதே ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் சமாதானம் நிலவ தனக்கே உரித்தான அறத்துடன், தர்ம சிந்தனையுடன் அது களமிறங்கி உள்ளது. இந்துக்களின் தர்மம் தன் இனம், தன் மதம்,தன் நாடு , தன் மொழி என குறுகியது அல்ல, அது வானம் போல கடல் போல விரிவானது
""வசு தேவ குடும்பம், லோகா சமஸ்தாஸ் சுகினோ பவந்து" என்பது சனாதனத்தின் அடிப்படை ஸ்லோகம். "லோகா சமஸ்தா சுகினோ பவந்து" என்றால் "எல்லா உலக மக்களும் நன்றாக இருக்கட்டும்" என பொருள். "
சர்வே ஜனா சுகினோ பவந்து" என்றால் "எல்லா மக்களும் நன்றாக இருக்கட்டும்" என பொருள். அதைத்தான் உக்ரைன் ரஷ்ய மக்களுக்கு செய்ய உக்ரைன் சென்றிருக்கிறார் சனாதன இந்தியாவின் தலைவர் மோடி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu