பெரும் ஆபத்தை குறிக்கிறதா, அதிபர் ஜோ பைடனின் பேச்சு..?!

பெரும் ஆபத்தை குறிக்கிறதா, அதிபர் ஜோ பைடனின் பேச்சு..?!
X

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (கோப்பு படம்) 

இந்தியா - ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டத்தை முறியடிக்கவே ஹமாஸ் தாக்குதல் நடந்துள்ளது என அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த அறிவிப்பு சாதாரணமானது அல்ல. இந்தியாவின் திட்டத்தை சீர்குலைக்கவும் அரேபியாவில் தன் செல்வாக்கை நிலை நிறுத்தவும் சீனா செய்யும் திட்டம் தான் இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் என்று அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது அடுத்தடுத்து பல ஆயிரம் ஏவுகணைகளை ஏவியதுமே ஒட்டுமொத்த உலகமும் சீனாவை சந்தேக கண்ணோட்டத்துடன் பார்த்தது. எப்படியும் இஸ்ரேல் பயங்கரமாக திரும்ப அடிக்கும். அப்போது சுற்றிலும் உள்ள அரபுநாடுகளை இந்த போரில் ஈடுபடுத்தலாம் என சீனா திட்டம் போட்டது. அப்படி பெரும் போர் நடந்தால் இந்திய- ஐரோப்பிய வழித்தட திட்டம் காணாமல் போய் விடும் என சீனா கணக்கு போட்டது. சீனா போட்ட திட்டத்தை அமெரிக்கா நொறுக்கிப் போட்டுள்ளது.

ஆமாம் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ் என அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் வரிந்து கட்டிக் களம் இறங்கி உள்ளன. இதனால் ஈரானோ, லிபியாவோ, துருக்கியோ இஸ்ரேலை தொட்டால் அடுத்த நொடி அமெரிக்காவும், பிரிட்டனும், ஐரோப்பிய நாடுகளும் களத்தில் இறங்கும் அபாயம் உருவாகி உள்ளது.

எதிர்பாராத இந்த திருப்பத்தால் சீனா சற்று கலக்கமடைந்துள்ளது. இருப்பினும் தனது சீண்டலை நிறுத்தவில்லை. இந்நிலையில் தான் இந்தியா- ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்திட்டத்தை அடித்து நொறுக்கி, அரபுநாடுகள் மத்தியில் தனது செல்வாக்கினை நிலை நிறுத்த சீனா திட்டம் போட்டே ஹமாஸ் அமைப்பினரை துாண்டி விட்டு, இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்துள்ளது என அமெரிக்க அதிபர் ஜோபைன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவரது இந்த கூற்று மறைமுகமாக சீனா அடுத்த அடி எடுத்து வைத்தால், அது உலகப்போராக வெடிக்கும் என்ற எச்சரிக்கையினை கிளப்பி உள்ளது. அந்த போரில் பல்வேறு நாடுகள் ஈடுபடும் என்பது போல் ஜோ பைடன் பேசுகிறார் என போர் நிலவரத்தை கணித்து வரும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தவிர சிரியாவில் இருந்த ஈரான் நிலைகள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படி பெரும் போர் வெடித்தால் சீனாவின் அடிப்பொடி நாடுகள் எல்லாம் தவிடுபொடியாகி விடும் என்பது மட்டும் உண்மை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!