இந்தியாவின் ‘குட்மகாராஜா’ : போலந்து கொண்டாட காரணம்..!

இந்தியாவின் ‘குட்மகாராஜா’ :   போலந்து கொண்டாட காரணம்..!
X

குட் மகாராஜா சதுக்கத்தில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி 

இந்தியாவின் ‘குட்மகாராஜா’வையும், மோடியையும் போலந்து மக்கள் கொண்டாட என்ன காரணம் என பார்க்கலாம்.

போலந்து சென்றிருக்கும் பாரத பிரதமர் மோடி அங்கிருக்கும் இந்திய போலந்து உறவின் மிக முக்கிய அடையாளமான "குட் மஹாராஜா" நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவகத்தில் அஞ்சலி செலுத்தும் முதல் இந்திய பிரதமர் அவர் தான்.

இதற்கு முன் 1967ல் இந்திராவும், 1979ல் மொரார்ஜி தேசாயும் போலந்துக்கு சென்றிருந்தாலும் இந்த நினைவிடம் செல்லவில்லை. போலந்தில் இன்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுக்கு முந்தைய இந்து ஆலயம் உண்டு. அது 99% போப்புக்களை கொடுத்த கத்தோலிக்க தேசம் என்பதால் அது மறைக்கபட்டிருக்கலாம். அப்படியான ஆலயத்துக்கு மோடி செல்வதை அந்நாட்டு மத பீடங்கள் விரும்பாமல் இருக்கலாம்.

ஆனால் இந்த "குட் மகாராஜா" நினைவகம் என்பது இந்துக்களின் பெருந்தன்மையினை, இந்துக்களின் மானுட நேயத்தை, உலகில் ஏன் இந்துநாடு அவசியம் என்பதை தெளிவாக சொல்லும் காட்சி. இந்துமதமும் இந்துக்களும் எக்காலமும் அவசியம் என்பதை ஐரோப்பியர் மனமார நம்பி வணங்கும் இடம் இந்த நினைவகம்.

அதன் வரலாறு ஆழமானது. இந்து தாத்பரியத்தினை வேராக கொண்டது. போலந்து என்பது அதன் அமைவிடம் காரணமாக பந்தாடப்படும் பூமி. ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் சிக்கிய அத்தேசம் செங்கிஸ்கான் காலத்திலே பெருத்த அடிவாங்கியது.

பின் எல்லா போர்களிலும் அதுதான் அதிகம் பாதிக்கப்பட்டது. அது கத்தோலிக்க பூமி. 99.99% போப்புகளை கொடுத்த பூமி என்பதால் கம்யூனிஸ்டுகளின் இலக்காயிற்று, முதன்முதலில் கம்யூனிசம் அங்கு தான் "பொதுநல வலயமைப்பு" என சோவியத்துக்கு முன்பே பரிசீலிக்கப்பட்டு தோற்றும் போயிற்று.

1920க்கு பின்னரான போலந்தின் காலங்கள் கடுமையானவை. ஜெர்மனி ரஷ்யாவினை நோக்கி பாய்ந்த 1940களில் அவர்கள் பட்டபாடு சொல்லிமாளாது. ஒருபக்கம் கொடுமையான ராணுவம் கொண்ட ஜெர்மனி. இன்னொரு பக்கம் கம்யூனிச ரஷ்யா என இரு எருதுகளுக்கு இடையில் சிக்கிய எலியாக நசுங்கினார்கள். ஜெர்மனியின் கொடியபடை வதை முகாம் பல அமைத்து கொடூரமுகம் காட்டிற்று. இன்னொரு பக்கம் ரஷ்ய செம்படை கம்யூனிச கொடுங்கோன்மை காட்டிற்று.

இதனால் மக்கள் அபலைகளாயினர். அவர்களின் நிலை எப்படியானது என்றால் அன்று அமெரிக்காவினை யாரும் நம்பவில்லை, பிரிட்டன் சரிந்து கொண்டிருந்தது. இதனால் ஐரோப்பாவில் வாழ்ந்தாலோ அமெரிக்கா சென்றாலோ கூட ஜெர்மானியர் விடமாட்டார்கள் எனும் பெரும் அச்சம் இருந்தது.

இவர்களில் யூதர்களும் இருந்தார்கள், பல மக்களும் இருந்தார்கள். அன்று அரேபியா இருந்தது என்றாலும் அங்கே மதம் மாறாமல் வாழ்வது கடினம், கம்யூனிஸ்டுகளிடம் சிக்கினால் மதம் ஒழிவது உறுதி. ஜெர்மானியர் என்றால் இன்னும் கொடுமை அதிகம்.

இதனால் தங்களை தாங்களாக ஏற்றுகொள்ளும் தேசம், தங்களை மதம் மாற சொல்லாத தேசம், மனிதர் எனும் அடிப்படையில் தங்களை அரவணைக்கும் தேசம் தேடி போலந்து மக்கள் அலைந்தனர். அப்போது தான் இந்துமதமும் இந்து அரசர்களும் எப்படியானர்கள் என உலகம் கண்டது.

அக்காலத்தில் இருந்தே பௌத்தம், சுல்தானியம், இன்னும் பல அதிதீவிர மார்க்கங்களால் பாதிக்கபட்டோருக்கு இந்தியா அடைக்கலமானது. சுல்தான்கள், போப்பின் அதிகாரமென மதம்மாற நிர்பந்திக்கபட்ட யூதர்களும் பார்சிகளும் இந்திய தேசத்துகுத்தான் வந்தனர். அப்படி சோவியத் மேல் ஜெர்மனை படையெடுத்தபொது நடுங்கிய போலத்து மக்கள் தங்கள் குழந்தைகளை காக்க பலரை கெஞ்சினர்.

சோவியத் ஜெர்மன் தாண்டி யாரும் அவர்களை அணைக்க நினைக்கவில்லை. ஆனால் போலந்து மக்களுக்கு நடந்த அநீதிகளை கண்டு இந்து மன்னர்கள் கொதித்தனர். என்ன ஆனாலும் சரி ஆயிரம் குழந்தைகளை நாங்கள் ஏற்கின்றோம் என அறிவித்தனர்.

ஆம் இந்தியாவின் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் மகாராஜா அதை அறிவித்தார். சுமார் 1,000 போலந்து குழந்தைகளைக் காப்பாற்றி போலந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சோவியத் யூனியன் மீதான ஜெர்மனியின் படையெடுப்பால் எல்லைகள் மாறிய போது,போலந்து மக்கள் சோவியத் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளர் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

சில போலந்து அகதிகள் சோவியத் யூனியனை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். அவர்களை ஜாம்நகர் மகாராஜா ஏற்றுகொண்டார். இந்தியாவுக்கும் பொலந்துக்குமான இந்த பந்தம் இப்படி உருக்கமானது. போலந்தின் ஆயிரம் குழந்தைகள் இங்குதான் வளர்ந்தனர், பின் நிலமை சரியானதும் திரும்பி சென்றார்கள். சென்றவர்கள் அந்த ஜாம்நகர் மகாராஜாவுடன் தொடர்பிலே நன்றியுடன் இருந்தார்கள்.

இந்த இணைப்புக்கு காரணமாக இருந்தவர் மகாராஜா அன்றைய மன்னர் திக்விஜய்சின்ஹ்ஜி ரஞ்சித்சிங்ஜி ஜடேஜா. ராஜ்புத் பரம்பரையின் வாரிசு ஆவார். வீரசிவாஜி எழுப்பி கொடுத்த இந்து சாம்ராஜியங்களில் வந்த பரம்பரை அது. செப்டம்பர் 18, 1895ல் பிறந்த மன்னர். அவரின் மிக கருணையான இந்துமத மனம் 1940களில் போலந்து மக்கள்பால் வெளிப்பட்டது.

உலகமே அந்த போலந்து மக்களை ஏற்க தயங்கியபோது அவர் போலந்து அகதிகள் முகாமை நிறுவினார். 1942ல் ஜாம்நகர்-பாலச்சடியில் போலந்து குழந்தைகள் முகாமை நிறுவினார். சோவியத் ஒன்றியத்தின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்தார். இந்த முகாம் இந்த சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக அமைந்தது. போரின் அழிவுகளிலிருந்து அவர்களுக்கு அடைக்கலம் அளித்தது மற்றும் இருளுக்கு மத்தியில் நம்பிக்கையின் ஒளியை வழங்கியது.

இந்துமதம் எல்லோரின் கண்ணீரையும் துடைக்கும், இந்துமதம் எல்லோரையும் வாழவைக்கும். அது தன் கொள்கைகளை திணிக்காது. மதம்மாற சொல்லாது. அழும் கண்களை துடைக்கும். பசித்த வயிற்றுக்கு சோறிடும். உறக்கம் வேண்டுவோர்க்கு காவல் இருக்கும். மனிதனை மனிதனாக அணைக்கும் என அம்மதத்தின் பெருமை அவரால் துலங்கிற்று.

பிரிட்டிஷ் இந்திய அரசு அதை எதிர்த்தது. அவரை எச்சரித்தது ஆனால் மஹாராஜா சிலிர்த்து நின்றார். 1940களில் இரண்டாம் உலகப்போரில் சிக்கிய பிரிட்டன் அவரை எதிர்க்க வழியின்றி ஒதுங்கிற்று. மஹாராஜா தனது ராஜ்ஜியத்தில் போலந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை சேர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல், தனது ராஜ்ஜியத்தில் ரோசி துறைமுகத்தில் ஒரு மினி போலந்தையும் உருவாக்கினார்.

முதலில் அவர்களை தன் அரண்மனையில் தங்க வைத்த அவர் தனது சொந்த அரண்மனையிலிருந்து 25 கிமீ தொலைவில் அவர்களுக்காக ஒரு அரண்மனையை கட்டினார். அவர் போலந்து அகதிகளை தனது சொந்த குடும்பம் போல் கவனித்து, சுமார் ஒன்பது ஆண்டுகள் அங்கேயே வைத்து பாதுகாத்தார். பின்னர் தான் அவர்கள் கிளம்பிச் சென்றார்கள். இந்துமன்னர் தங்களை எப்படி கவனித்தார் என்பதை அந்த போலந்து அகதியான விஸ்லாவ் ஸ்டிபுலாவின் ஒரு பேட்டியில் சொன்னார்

மகாராஜா அனைவரின் உணவையும் சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். அடிக்கடி விருந்து கொடுப்பார். அதுவும் போலந்து வகை உணவுக்காக கோவாவிலிருந்து ஏழு சமையல்காரர்களை வரவழைத்தார். போலந்து அகதிகள் மீது மகாராஜாவின் கருணையும் பெருந்தன்மையும் மறந்து விடவில்லை. அவர் போலந்து மக்களின் பார்வையில் தெய்வமானார். இந்துமக்கள் எவ்வளவு மேன்மையானவர்கள் என அவர் காட்டினார். ஐரோப்பாவில் அமைதி திரும்பும் வரையில் எங்களை கண்போல் காத்தார்.

சொந்த கிறிஸ்தவ தேசங்கள் தராத அன்பையும் கருணையும் நாங்கள் அவரிடம் பெற்றோம். அவரிடம் தெய்வத்தை உணர்ந்தோம். எக்காரணம் கொண்டும் அவர் மதவேற்றுமை உள்ளிட்ட எதையும் எங்களிடம் காட்டவில்லை. அவர் எங்களுக்கு கண் கண்ட தெய்வம்".

ஆம் அவர் அம்மக்களுக்கு செய்த நன்றிக்குத்தான் போலந்தில் "நல்ல மன்னர்" அதாவது "குட் மஹாராஜா" என நினைவகம் அமைத்து அம்மக்கள் வணங்கி வருகின்றார்கள். மோடி அங்குதான் முதல் இந்திய பிரதமராக அஞ்சலி செலுத்தினார். சரி, மோடி நினைத்தால் போலந்து அதிபர், உக்ரைன் அதிபர் இந்தியாவுக்கே வரமுடியும் எனும்போது மோடி ஏன் சவால் எடுத்து சென்றார்?

அதுதான் ராஜந்தந்திர் மொழியில் பேச செல்வது. போலந்து மக்களே, அன்றும் உங்களுக்கு இந்தியர்களாகிய இந்துக்கள்தான் காவல், இன்றும் நாங்கள் தான் காவல். நீங்கள் அஞ்சுவது போல உக்ரைனை அடுத்து இந்த போர் போலந்தில் நுழைய அனுமதிக்க மாட்டோம்.

அந்த இந்து மன்னரின் வாரிசுகளாகிய நாங்கள் முழு முயற்சியுடன் இந்த போரை முடித்து இங்கு அமைதி திரும்ப பாடுபடுவோம். எந்த சோவியத் காலத்தில் பல்லாயிரம் போலந்து குழந்தைகளை இந்துமதமும் இந்து அரசுகளும் காப்பாற்றியதோ அப்படி இப்போதும் இந்திய இந்து அரசும் நாங்களும் போலந்து உக்ரைனிய ரஷ்ய குழந்தைகளை காப்போம் என உலகிற்கு புரிய வைத்துள்ளார். மோடி உருவில் போலந்தில் காணும் உலகம் கையெடுத்து வணங்கி கொண்டிருக்கின்றது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்