அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவரப்படும் சிலைகள்
சிலைகளை மோடியிடம் ஒப்படைத்த அமெரிக்க அதிபர் ஜோபைடன்.
இது இந்தியா தன் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதி காட்டும் மாபெரும் மைல்கல் ஆகும். ஐரோப்பியருக்கும் அமெரிக்கருக்கும் எதையும் செய்ய முடியும். எதையும் வாங்க முடியும். ஆனால் அவர்களிடம் இல்லாத விஷயம் பழம்பெருமை.
சுமார் 400 ஆண்டு வரலாறு கொண்ட அந்த தேசங்கள் பல லட்சம் பழமை கொண்ட இந்தியா போன்ற நாடுகளையும் அன்றே அவை பெற்றிருந்த ஆன்மீக மற்றும் கலைநயமிகக்க நாகரீகத்தையும் கண்டு வாயடைத்து போயின.
பிரிட்டிசார் 17ம் நூற்றாண்டில் இங்கு ஆண்டபோது ஆப்கான் இஸ்லாமியரால் இப்போது பாமியானில் நொறுக்ககபட்ட புத்தர் சிலைபோல இங்கும் இந்துக்கள் ஆலயமும் சிலையும் இடிபடுவதையும் இந்துக்கள் அதனை பாதுகாக்க போராடுவதையும் கண்டார்கள்.
அந்த சிலையின் அருமை அவர்களுக்கு தெரிந்தது. இதனால் பலவற்றை கடத்தினார்கள். ஐரோப்பா அமெரிக்கா என பல நாடுகள் தங்களிடம் இல்லா பழமையினை இந்திய சிலைகளை கடத்திச் சென்று ஆச்சர்யப்பட்டார்கள். ஆனால் ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் இந்து ஆலய சிலைகளை கண்போல் காக்கின்றார்கள் என்றால் அதன் அருமை என்ன?
ஆக இப்படி வெளிநாட்டுக்கு சென்ற இந்திய சிலைகளை இந்திய சொத்துக்கள் என ஒவ்வொரு நாடாக சென்று மீட்டு வருகின்றார் பிரதமர் மோடி
2016 முதல் அவர் எடுத்த முயற்சியில் இதுவரை சுமார் 578 சிலைகள் தாயகம் திரும்பியுள்ளன. மிகபெரிய கொடுமை என்னவென்றால் இவற்றில் இந்திய தமிழக சிலைகள் உண்டு, ஆனால் எந்த கோயிலில் இருந்து காணாமல் போனது? எந்த கோயிலுக்குரிய சிலை இது என்பது தமிழக இந்து அறநிலையதுறைக்கே தெரியாது
அவர்கள் காட்டும் இந்து ஆலய பராமரிப்பு அப்படித்தான் இருக்கின்றது, இனி மோடியே இவை தமிழக சிலைகள் என கொடுத்தாலும் அதை எங்கே எப்படி வைக்க வேண்டும் என்பது இவர்களுக்கு தெரியாது. ஆனால் உரிய காலம் வரும்போது அவை தமிழகம் அடையும், இப்போது இந்தியாவில் இனி பாதுகாப்பாக இருக்கும்.
மோடியின் சர்வதேச அரசியலில் இந்தியாவின் சொத்துக்கள் பெருமிதங்கள் எப்படியெல்லாம் மீட்டெடுக்கபடுகின்றது என்றால் அதை சொல்ல வார்த்தைகள் இல்லை, காட்சிகள்தான் உண்டு
இப்படி ஒரு தலைவனுக்குத்தான் தேசம் ஏங்கி கொண்டிருந்தது, சர்வ சக்திபடைத்த அமெரிக்க அதிபரே ஊர் அறிய உலகறிய ஆம் இவையெல்லாம் இந்தியாவில் இருந்து கடத்தபட்ட சிலைகள்தான் என ஒப்படைகின்றார் என்றால் அந்த தேசம் மோடியினை எவ்வளவு பெரிய இடத்தில் வைத்து கொண்டாடுகின்றது என்பதை எளிதில் உணரலாம்,
அந்த சிலைகள் இனி இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கும் என உலக கலாச்சார பாரம்பரிய மையமும் அனுமதிக்கின்றது என்றால் மோடிக்கு உலகம் கொடுக்கும் அங்கீகாரத்தை, வலுவான பாரத்த்தை இந்த சிலைகள் உலக அரங்கில் சாட்சியாய் சொல்லிகொண்டே தாயகம் திரும்புகின்றன. சரி, இந்த சிலைகள் எல்லாமே பிரிட்டிசார் காலத்தில் கடத்தபட்டவை அல்ல, சில சுதந்திர இந்தியாவிலும் கடத்தபட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu