ஹிஸ்புல்லா தலைவரை இஸ்ரேல் வீழ்த்தியது எப்படி..?
ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் பயன்படுத்திய குண்டு.
ஹிஸ்புல்லாவின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதும், புதிய தலைவராக ஹசன் கலீல் யாசின் நியமிக்கப்பட்டார். அவர் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக பதவி ஏற்ற நாள் 28.09. .2024. அவர் பதவியேற்ற ஆறு மணி நேரத்திலேயே இஸ்ரேல் விமானப்படையின் குண்டு வீச்சினால் கொல்லப்பட்டார். ஒரு இயக்கத்தின் தலைவராக 6 மணி நேரமே இருந்த ஒரே தலைவர் இவராகத்தான் இருக்க முடியும்.
இவரை கொல்ல இஸ்ரேல் ஜேடி எம் பங்கர் பஸ்டர்ஸ் என்ற குண்டினை பயன்படுத்தியது. ஜேடி எம் பங்கர் பஸ்டர்ஸ் என்பது பதுங்கு குழிகளை அழிக்கும் வெடிகுண்டுகள். எத்தனை மாடி கட்டிடங்கள் இருந்தாலும் அதற்கு கீழே எத்தனை அன்டர் கிரவுண்ட்கள் இருந்தாலும் ஊடுருவி தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை இந்த ஜேடிஎம் பங்கர் பஸ்டர்கள்.
இதன் சிறப்பு என்னவென்றால் அன்டர் கிரவுண்ட் முடியும் வரை அந்த கட்டிடங்களின் நடுவே ஊடுறுவி சென்று அன்டர்கிரவுண்டிற்கு கீழ் உள்ள கான்கிரீட்டையும் தாண்டி சென்று தான் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு கட்டிடத்தின் அன்டர்கிரவுண்ட் வெடித்து சிதறும் பொழுது ஒட்டுமொத்த கட்டிடமும் தூள் தூளாகி விடும் அல்லவா.
அது மட்டுமல்லாமல் இந்த ஜேடிஎம் பங்கர் பஸ்டர் வெடிக்கும் பொழுது சுமார் 4 ரிக்டர் அளவிற்கு பூகம்பத்தின் அதிர்வுகள் உருவாகும். வழக்கமாக 2000 பவுண்டுகள் தான் இந்த பங்கர் பஸ்டர்கள் இருக்கும். இந்த 2000 பவுண்டுகள் கொண்ட பங்கர் பஸ்டர்களை வைத்து தான் காசாவில் சுரங்கங்களை அமைத்து மறைந்து வாழ்ந்து வந்த ஹமாஸ் இயக்க தலைவர்களை இஸ்ரேல் ராணுவம் ஒட்டு மொத்தமாக காலி செய்தது. ஹசன் நஸ்ருல்லாவிற்காக இஸ்ரேல் 5000 பவுண்ட்கள் எடை உள்ள பங்கர் பஸ்டர்களை ஸ்பெஷலாக அமெரிக்காவிடம் இருந்து வாங்கி இருந்தது.
இதில் உள்ள ஜிபிஎஸ் மூலமாக ஹசன் நஸ்ருல்லா இருக்கும் இடத்தை மிகத்துல்லியமாக கண்டு அந்த இடத்தை தரைமட்டமாக்கி அவரை இஸ்ரேல் கொலை செய்து விட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu