ஹிட்லர் என்ன சொன்னார்..? நீங்களே படீங்க..!

Hitler Quotes in Tamil
X

Hitler Quotes in Tamil

Hitler Quotes in Tamil-சர்வாதிகாரி என்று பெயர்பெற்ற அடால்ப் ஹிட்லர் பின்னாளில் பெர்லினில் இருந்து தப்பி ஓடி தற்கொலை செய்துகொண்டார்.

Hitler Quotes in Tamil

அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக இருந்தவர். அவர் 1933ம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934ம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார்.

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம், ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றன. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது. அவரதும் பொன்மொழிகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • பிறக்கும் போது உன்னோடு இல்லாத பெயர்,நீ இறக்கும் பொழுது உன்னோடு தான் இருக்கும்,அதை உன் சாவிற்கு கொடுக்காமல் சரித்திரத்திற்கு கொடு.
  • எழுதும் சொற்களைவிட பேசும் சொற்கள் வலிமை வாய்ந்தவை.
  • இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே.
  • என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன். வேறுயாரும் இல்லை கோபம் தான் என்னைத் தோற்கடித்தது.
  • நீ நடந்துபோக பாதை இல்லையென்று கவலைபடாதே. நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
  • புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே. அது இன்னொரு முறை உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்.

  • எதிர் பார்த்தபோது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான்.
  • வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார். நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.
  • நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே.
  • தோற்றவன் புன்னகைத்தால், வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.
  • நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.

  • ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான்.
  • பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள், நீ முன்னால் இருக்கிறாய் என்பதை.
  • எவராலும் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் வலிமைமிக்கவரால் மட்டுமே தோல்வியையும் தாங்க முடியும்.
  • அந்நிய நாட்டிலே ஓர் அரசனாக இருப்பதைக் காட்டிலும், தனது தாய் நாட்டிலே ஒரு தோட்டியாக இருப்பதையே கௌரவமாகக் கொள்ள வேண்டும்.
  • எனது சொத்துக்கள் அனைத்தும் எனக்கு பின்பு என் கட்சிக்கு சேர வேண்டும். கட்சி அழிந்து விட்டால் என் நாட்டுக்குச் சேர வேண்டும்.

  • எல்லாவற்றையும் வெல்லும் வலிமையை நீங்கள் அடைய விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் எந்தக் காரியத்தையும் தன்னம்பிக்கையுடன் தன்னந்தனியாக செய்து முடிப்பதற்குத் தேவையான சக்தியுள்ளவராக உயர வேண்டும்.
  • பொய்யை பெரிதாக்கு, இலகுவாக்கு, சொல்லிக் கொண்டே இரு. கடைசியில் மக்கள் அதை நம்புவார்கள்.
  • ஒரு தேசத்தின் கல்விமுறை சரியாக இல்லாதிருக்குமாயின், அக்கல்வியைப் பயின்றவர்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ள அஞ்சுவார்கள். முக்கியமான பிரச்சினைகளில் ஈடுபட அவர்களால் முடியாது.
  • நாம் எல்லோரும் நிலவை போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.
  • நீங்கள் வெற்றி பெற்றால் அதைப் பற்றி யாருக்கும் விளக்க வேண்டியதில்லை. ஆனால், நீங்கள் தோல்வி அடைந்தால் உங்கள் தோல்விக்கான காரணங்களைப்பற்றி விளக்க நீங்கள் அங்கே இருக்கக் கூடாது.
  • வாழ்க்கையில் முக்கியமான எவையும் , மனிதனை வலிய வந்து அடைவதில்லை. ஒவ்வொன்றுக்கும் போராடியே தீர வேண்டும். அதிர்ஷ்டவசத்தினாலோ, அல்லது 'எல்லாம் தலைவிதிப்படி ஆகிறது' என்று சொல்லிக் கொண்டிருப்பதனாலோ ஒரு தேசம் முன்னேற்றம் அடைவதில்லை. முயற்சியினாலேயே அடைய முடியும்.

  • இந்தப் போருக்கு நான்தான் மூலக்காரணம் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் போர் வெறி கூடாது. ஆயுதக்குறைப்பு செய்ய வேண்டும் என்று நானே வலியுறுத்தி இருக்கிறேன்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future agriculture