சீனாவை வீழ்த்த அமெரிக்காவுடன் இணைந்ததா இந்தியா ?

சீனாவை வீழ்த்த அமெரிக்காவுடன்  இணைந்ததா இந்தியா ?
X

பைல் படம்

இந்தியா நினைத்தால் அமெரிக்காவை பொருளாதார ரீதியில் வீழ்த்திவிட முடியும்! ஆனால் அதை செய்யாது!

அமெரிக்காவும், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவிற்கு செய்த கொடுமைகள், அவர்கள் திருடியது எல்லாம் ஒரு பெரிய நாட்டை முற்றிலும் புதியதாகவே கட்டமைக்க முடியும் என்ற அளவிற்கு இருந்தது. அதை இன்று Dedollaraization மூலம் வீழ்த்த இந்தியா BRICS மூலம் முயற்சிக்கிறது. அதற்கான ஆரம்பம் என்பது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்( ₹) மதிப்பு ₹100 வரை செல்லும் என்ற ஆரூடம் பொய்த்துப் போனதுதான். இப்போது இந்தியா நினைத்தால் சில வாரங்களில் அதை ₹70 க்கும் குறைவாக மாற்ற முடியும்.

ஆனால் அதை செய்யாது. அப்படி செய்தால் முதலில் அடி வாங்குவது இந்தியா. ஏனெனில் நமது IT யில் US க்கு மட்டும் $200 பில்லியனாக இருக்கிறது. அது 25% குறையும் என்றால் அதை செய்ய முடியுமா?அதுமட்டுமல்ல. இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தால், அதன் மூலம் அமெரிக்காவின் IT Industry பெருமளவில் அடிவாங்கும். அங்கே பெரும் inflation உருவாகி அந்த நாட்டை கொலாப்ஸ் ஆகிவிடவும் வாய்ப்புகள் உண்டு. அப்போது அந்த IT Industry யில் பல மூடவேண்டிய சூழல் உருவாகும். அது இந்தியாவில் மிகப்பெரிய வேலை இழப்பை முன்னெடுத்து, மோசமான ஒரு பொருளாதார சூழலை இங்கே தற்காலிகமாவது உருவாக்கி விடும்.

அதில் நமக்கான சிக்கல்கள் மட்டுமல்ல, இந்தியா ஒரு நாட்டை வீழ்த்தி நாம் வாழவேண்டும் என்ற கேடுகெட்ட எண்ணம் கொண்ட நாடல்ல. நமது இந்து சனாதன தர்மம் அதை நமக்கு போதிக்கவில்லை. அப்படி வீழ்த்தினால் அங்கே இருக்கிற நம்மவர்கள் மட்டுமல்ல, அப்பாவிகள் பலர் வீழ்வார்களே? அதில் நம்மவர்களும் உண்டல்லவா? அப்படி வீழ்ந்துதான் நாம் வாழவேண்டும் என்று வாழ்ந்த நாடுகளின் கதி என்ன?

அதே சமயம் அமெரிக்கா வீழ்ந்தால் சீனா தனது அராஜகத்தை கட்டவிழ்த்து விடும். ஏன், நமது உற்ற நண்பன் என்ற ரஷ்யா கூட சீனாவிடம் நெருங்கி, இடதுசாரின சிந்தனைகளை கொண்ட ஒரு உலகத்தை மீண்டும் முனெடுக்க வாய்ப்புகள் உண்டு. ஆம் இந்தியா ஒரு பெரிய சக்தியாக வளர்வதை, சீனா, அமெரிக்கா மட்டுமல்ல ரஷ்யா கூட முழு மனதாக ஏற்காது.

அந்த சூழலில் சீனா இந்தியாவின் ஆதிக்கத்தை தடுக்க நம் மீது போர் செய்யக்கூட முடியும். இன்றைய சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல், ஃபிரான்ஸ் என்று பல நாடுகள் சீனாவிற்கு எதிராக நம்முடன் கைசேர்க்கும் என்பதால் சீனாவால் நம்மை வீழ்த்த முடியாது. இன்னும் சொல்லப்போனால் சீனா தோற்பதற்கே வாய்ப்புகள் உண்டு. ஆனால் போரின் முடிவில் இந்தியா தனது பொருளாதாரத்தில் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும்.

அப்படியெனில் சீனாவை பேலன்ஸ் செய்ய அமெரிக்கா இருக்க வேண்டும். இன்றுகூட நம்மை வீழ்த்த நினைக்கும் அமெரிக்காவை நம்மை சார்ந்திருக்கும் பொருளாதார சூழலை வைத்து நமக்கு சாதகமாக மாற்ற முடியும்?

ஆம், 850 போயிங் விமானங்கள் அவர்களுக்கு மிக முக்கிய ஆர்டர். இன்று செய்யப்போகும் GE 414 விமான எஞ்சின்கள், ட்ரோன்கள் என்று அவற்றை அதன் நேட்டோ நாடுகளுக்கு கூட கொடுக்கவில்லை. ஆனால் இந்தியா பெருகிறது. ஆம் இந்தியாவின் சேவை, அதற்கு தேவை!

அமெரிக்க வாழ் இந்தியர்களை பாருங்கள், அவர்கள் இன்று மோடியின் பின்னால் அந்த நாட்டில் இருந்து கொண்டு வெளிப்படையாக கொடுக்கின்ற ஆதரவை பாருங்கள். அவர்கள் கொடுப்பது மோடிக்கான ஆதரவு மட்டுமல்ல, தாய் நாட்டிற்காக அவர்கள் கொடுக்கும் அன்பு, நன்றிக்கடன். அவர்கள் ஒவ்வொருவரும் இந்தியாவின் அம்பாஸிடர்கள்.

ஆம் இந்தியா ஜனநாயக அமெரிக்காவை உற்ற நண்பனாக மாற்றாவிட்டாலும், எதிரியாக இல்லாமல் செய்து அதை இருக்க செய்வதன் மூலம், இந்தியா பெறப்போகும் நன்மைகள் ஏராளம்.

எனவே அமெரிக்க கம்பெனிகள் மூலம் இந்தியா மிகப்பெரிய பொருளாதர வளத்தை, டெக்னால்ஜியை, நட்பினை பெற்று, படிப்படியாக ஒரு புல்லட் இல்லாமல் எப்படி நம்மை வீழ்த்த துடிப்பதே நாட்டின் பிரதான நோக்கம் என்றிருந்த பாகிஸ்தானை நாம் வீழ்த்தினோமோ அதுபோல தவறான சீனாவையும் வீழ்த்த அமெரிக்கா தேவை! அது ஒரு ஜனநாயக நாடு என்பது மட்டுமல்ல, வலதுசாரி சிந்தனை என்பதும் முக்கியம். அது வருங்காலத்தில் அமெரிக்கா இந்தியாவை சார்ந்திருக்க வேண்டிய சூழலாக மாறிவிடும்..!

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!