/* */

50 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேலை புரட்டி எடுத்த ஹமாஸ்

50 ஆண்டுகள் கழித்து இஸ்ரேல் மீது அதே மூர்கத்தனமான தாக்குதலை ஹமாஸ் நடத்தியுள்ளது

HIGHLIGHTS

50 ஆண்டுகளுக்கு முன்பே  இஸ்ரேலை புரட்டி எடுத்த ஹமாஸ்
X

பைல் படம்

50 ஆண்டுகள் கழித்து இஸ்ரேல் மீது அதே மூர்கத்தனமான தாக்குதலை ஹமாஸ் நடத்தியுள்ளது. நாள், கிழமை, தாக்குதல் முறைகள் என அனைத்து விதத்திலும் 1973 யோம் கிப்பூர் போருடன் ஒத்துப்போகின்றன தற்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீன போர்.

இஸ்ரேல் மீது இருபதே நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை வீசி அந்நாட்டையே அதிரச் செய்துள்ளது ஹமாஸ் அமைப்பு. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் பல இடங்கள் பற்றி எரிகின்றன. ஹமாஸ் தாக்குதலுடன், ஆயுதக் குழுவினரும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் போராட்ட குழு அக்டோபர் 6ஆம் தேதியை தேர்ந்தெடுத்ததற்கும் ஒரு காரணம் உண்டு.

இஸ்லாமியர்களுக்கு ரமலான் போன்று ஆண்டுதோறும் அக்டோபர் 6 ஆம் தேதி யோம் கிப்பூர் பண்டிகை புனித நாளாக யூதர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் நடப்பாண்டில் அந்த பண்டிகை இஸ்ரேலில் யூதர்களுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. காஸா பகுதியில் இருந்து பறந்து வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள், தெற்கு மற்றும் மத்திய இஸ்ரேலின் கட்டிடங்கள் பலவற்றை துளைத்து சென்றன.

இஸ்ரேலின் வரலாற்று பக்கங்களை சற்று திருப்பி பார்த்தால் 1973ஆம் ஆண்டு யோம் கிப்பூர் பண்டிகையன்றும் இதே காட்சிகள் அரங்கேறியிருந்தன என்றால் நம்பமுடிகிறதா? ஆம். நாள், கிழமை, தாக்குதல் முறைகள் என அனைத்து விதத்திலும் யோம் கிப்பூர் போருடன் ஒத்துப்போகின்றன தற்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீன போர் சூழல். அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கி சுமார் 2 வாரம் நீடித்த யோம் கிப்பூர் போரின் 50 ஆண்டுகள் நிறைவை குறிக்கும் வகையிலும், யூதர்களின் புனித நாளை குறி வைத்தும் ஹமாஸ் இந்த போரை தொடங்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தின் புலனாய்வுப் படை முன்னாள் ஆராய்ச்சியாளர் சரித் ஜெஹாவி தெரிவித்துள்ளார்.

1973 ஆம் ஆண்டு யோம் கிப்பூர் பண்டிகையையொட்டி பல இஸ்ரேலியர்கள் சிம்சாட் தோராவைக் கடைப்பிடிக்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது திடீர் தாக்குதல்கள் நடைபெற்றன. சரியாக அன்றைய தினமும் சனிக்கிழமை. எகிப்து மற்றும் சிரியா தங்களுக்கு எதிராக அணிதிரட்டுவதை இஸ்ரேல் அறிந்திருந்தாலும், இந்த தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. மேலும், இஸ்ரேல் வீரர்கள் பலர் யோம் கிப்பூருக்கு விடுப்பில் இருந்தனர். இதனால், ஆரம்பத்தில் சிரியா மற்றும் எகிப்து இரண்டும் முன்னேற தொடங்கின.

மூன்று நாட்களுக்குப் பிறகே அரபு கூட்டமைப்பின் முன்னேற்றத்தை இஸ்ரேலால் தடுக்க முடிந்தது. பின்னர் அதிரடி காட்டி, சிரியாவிலிருந்து கோலன் ஹைட்ஸ், எகிப்திலிருந்து சினாய் தீபகற்பம் உட்பட பல பகுதிகளை கைப்பற்றியது. இந்த போரில் இருதரப்பிலும் சுமார் 20,000 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையில், அமெரிக்காவும் சோவியத் யூனியனும் முறையே இஸ்ரேல் மற்றும் எகிப்து-சிரியாவை ஆதரித்தன. இதனால் வல்லரசு நாடுகளுக்கு இடையேயான பதற்றங்கள் அதிகரித்தன.

அதிபர் நிக்சனின் எச்சரிக்கை: அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் அணுசக்தி எச்சரிக்கையை விடுத்தார். போர் தீவிரமடைந்ததால், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பில் இருந்த அரபு உறுப்பினர்கள், இஸ்ரேலை ஆதரித்த மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகத்தை நிறுத்தின. இது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அக்டோபர் 25 ஆம் தேதி ஐ.நா.வின் முயற்சிக்கு பிறகு போர் நிறுத்தம் எட்டப்பட்டது.

Updated On: 11 Oct 2023 5:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  2. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  5. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  6. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  7. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  8. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  9. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  10. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?