சீனாவின் இன்னொரு வைரஸ் : உலகை அச்சுறுத்துகிறதா சீனா..?
சீனாவில் ஹ௧௦ன்௩ வைரஸ் பரவி இருக்கிறதா என ஆய்வு செய்யும் டாக்டர்கள்.
H10N3 என்ற நோய்க்கிருமியின் மூலமாக பரவிய பறவை காய்ச்சலின் முதல் மனித தொற்று சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் ஒருவருக்கு H10N3 என்ற பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசித்து வரும் 41 வயதானவருக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏப்ரல் 23 ம்தேதி H10N3 தொற்று அறிகுறிகள் ஏற்பட்டதாக தெரிகிறது. ஏப்ரல் 28 அன்று அவரது உடல் நிலை மோசமடைந்தது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதன் பின்னர் மே 28 அன்று அவருக்கு H10N3 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.இது வரை வேறு எவருக்கும் அதாவது நோயாளிக்கு நெருக்கமாக இருந்த எவருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை.
இந்தவகை நோய்க்கிருமிகள் விரைவில் பரவும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறப்படுகிறது. H10N3 நோய்க்கிருமி தாக்கியவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
H10N3 வைரஸ்-ன் மரபணுவை ஆய்வு செய்து பார்க்கும்போது வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் மற்றும் வனத்தில் வாழும் பறவைகளுக்கு மட்டுமே இந்த வைரஸ் ஆபத்து விளைவிக்கும் என்றும் மனிதர்களை பெரும்பாலும் பாதிக்காது என்றும் தெரிய வந்துள்ளதாக சீனாவின் சுகாதார ஆணையகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu