விழாக்காலங்களில் பொதுமக்கள் ஒன்று கூட தடை- இலங்கை அரசு

விழாக்காலங்களில் பொதுமக்கள் ஒன்று கூட தடை- இலங்கை அரசு
X

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுகாலத்தில் பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடுவதை தடை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.இருப்பினும் விடுமுறை நாட்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

குடும்பங்கள் ஒன்று கூடுவது தடைப்படும் என்பதனால் பயணக் கட்டுப்பாடுகள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என குறிப்பிட்ட அவர், இருப்பினும் புத்தாண்டுக்கு முன்னதாக, போலீசார்,சுகாதார அதிகாரிகள் வழிகாட்டுதல்களை வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார்.மேலும் குறித்த நாட்களில் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்எனஅமைச்சர் வலியுறுத்தினார்.

இதேவேளை கொரோனா தொற்றுநோயின் அச்சுறுத்தல் இலங்கையில் தற்போதும் காணப்படுவதால் அனைவரும் சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என காவல்துறையின் தகவல் தொடர்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture